சித்தர் ஓதசுவாமிகளின் மகிமைகளும் அற்புதங்களும்

சித்தர் ஓதசுவாமிகளின் மகிமைகளும் அற்புதங்களும்

தென் பழநியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவநெறி பற்றுடைய பரமேஸ்வர அய்யர் தம்பதிகளுக்கு 1850 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இறையம்சம் பொருந்திய ஆண் குழந்தை பிறந்தது. சுப்பிரமணியம் என பெயரிடப்பட்ட அக்குழந்தை வளர்ந்து சிறுவயது பாலகனாயிருக்கும் போது தனது
தந்தையை இழந்ததும், தனது தாயிடம் சென்று தாயின் விருப்பபடியே அவரது கடைசிகாலத்தில் தாம் வந்து ஈமக்கடன் செய்வதாகக்கூறி தாயின் அனுமதியோடும், ஆசீர்வாதத்துடனும்
தனது வீட்டை விட்டு வெளியேறி தன் கால்போன போக்கில் சென்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் சதாசர்வ காலமும் அந்த சர்வேஸ்வரனையே நினைத்து தவமியற்றி அட்டமா சித்திகள் அனைத்தும் பெற்று, முக்காலமும் உணர்ந்த மாபெரும் சித்தர் ஆனார். தனது தவத்திற்கு இடையூறின்றி இருப்பதற்காக அவர் பத்மகிரி (திண்டுக்கல் மலை) மேற்குபுறம் ஜனங்கள் நடமாட்டம் இல்லாமல் ஓங்கி வளர்ந்த கோரை புற்களும் மற்றும் முட்புதர்களுக்குள்ளே சென்று அங்குள்ள மலைக்குகையின் உள்ளே நிஷ்டையில் அமர்ந்து பல மாதங்கள் தவம் செய்து திடீரென என்றாவது ஒருநாள் வெளியே வந்து சுற்று வட்டாரத்தில் அவதூதராய் நடமாடுவார்.
சிலர் அவருடைய நிர்வாணத்தை மறைக்கச் செய்ய கோவணம் கட்டிவிடுவர். அவ்வப்போது ஓதம் தோன்றும் காரணத்தால், மக்கள் அவரை “ஓதசுவாமிகள் சித்தர்” என்றும் ஒருசிலர் சுப்பிரமணியம் என்ற அவருடைய இயற்பெயரை வைத்து “சுப்பையா சுவாமிகள் சித்தர்” என்றும் அழைத்தனர்.
ஓதசுவாமிகள் சித்தர் ஜாதி, மதபேதமின்றி யும், ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு இன்றியும் எல்லோரையும் சமமாக பாவித்து அருளாசிகள் வழங்கினார்.

ஆசியை பெற்றவர்களின் வாழ்வில் அற்புதங்கள் – சித்தர் ஓதசுவாமிகளின்

அவருடைய
அருளாசிகள் பெற்றவர் கள்
வாழ்க்கையில் மிகுந்த சுபிட்சம் அடைந்தார்கள். ஓதசுவாமிகள் சித்தர் மகிமை வெளியுலகிற்கு தெரியவர மக்கள் பலர் அவரை நாடிச் சென்றனர். ஓதசுவாமிகள் சித்தர் மிகவும் சுருக்கமாகவே பேசுவார். சிலசமயம் தாம் சொல்ல வந்த விஷயத்தை பரிபாஷையிலும், சிலசமயம் நேரிடையாகவும் மக்களிடம் எடுத்துரைப்பார். அவ்வாறு அவர் எது சொன்னாலும் அது அப்படியே நடந்ததால் மக்கள் அவரை நடமாடும் தெய்வமாகவே கருதினர்.

ஓதசுவாமிகள் சித்தரை அறிந்தவர்கள் அவரை, ஒரு மாபெரும் சித்தர் என்றும், அறியாதவர்கள் அவருடைய பொய்யான தோற்றத்தை வைத்து அவரை பித்தர் என கருதினர். ஓதசுவாமிகள் சித்தர் ஒரே சமயத்தில் பலருக்கு பல இடங்களில் காட்சி அளிப்பார். ஒரு சிலருக்கு தமது கை, கால், தலை, உடம்பு வெவ்வேறாக தோன்றும்படி நவகண்ட யோகமாக அதை காண்பவர்கள் நற்கதியடைய
செய்வார்.

 

Read Also : சென்னையில் 18 சித்தர்கள் ஆலயம்

மகான்களுக்கு அருள் செய்த சித்தர் – சித்தர் ஓதசுவாமிகளின்

ஓதசுவாமிகள் சித்தர்
நேரிடையாகவும் சூட்சமாகவும் பல மகான்களுக்கு
காட்சியளித்து அவர்களுடைய சந்தேகங்களுக்கு
விளக்கமளித்து மகான்களுக் கெல்லாம் மகானாக
திகழ்ந்தார்.

அவருடைய பார்வை பட்டதாலேயே பலருடைய
கர்மவினைகள் காணாமல் போனது.

அவருடைய
அருளாசிகள் மூலம் பலரது நோய் நொடிகள், பொருளாதார
பிரச்சனைகள், யாவும் தீர்ந்தது. இருந்த இடத்திலிருந்தே
பலருக்கு அவர்களுடைய கண்களை மூடச்செய்து
பல
கோவில்களை தரிசிக்க செய்துள்ளார். கடைகளுக்குள்
சென்று காசு மற்றும் பொருட்களை அள்ளி வீசி எறிவார்.

அதனால், அந்த கடைகளில் வியாபாரம்
அமோகமாயிருக்கும்.
இரண்டு முறை உயிரிழந்தவர் களை
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும்
உயிர்பெறச் செய்தார்.
ஒருமுறை ஓதசுவாமிகள் சித்தர் தம்மை மறந்த நிலையில் அவதூதராய் திரிந்தபோது அதைக்கண்ட கொடியவன் ஒருவன் அவருடைய வலதுகையை வெட்டினார். வெட்டுப்பட்ட கை துண்டாகி கீழே விழுந்தது. இரத்தம் மிகுதியாய் வெளியேறியதும் அறியாமல் அவர் நடந்துபோய் கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் பதறியபடி வெட்டுப்பட்ட ஓதசுவாமிகளுடைய வலதுகையை கீழேயிருந்து எடுத்து அவரிடம் அளித்த போது அப்போதுதான் அவருக்கு கை வெட்டப்பட்டது தெரிந்தது. சிரித்துக் கொண்டே வெட்டப்பட்ட வலதுகையை தம் உடலில் பொருத்தி தடவியபோது அது பழையபடியே ஒட்டிக் கொண்டது.

வெட்டப்பட்ட இடத்திலிருந்து இரத்தமும் காயமும் எதுவுமே இல்லாமல் மறைந்து போனது. வெட்டியவனுக்கும் அருளாசிகள் வழங்கினார். இப்படி எண்ணற்ற சித்தாடல்கள் பலபுரிந்த மாபெரும் சித்தரான ஓதசுவாமிகள் சித்தர் தம்மை எந்த நிலையிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் குப்பைமேட்டிலும், சாக்கடை ஓரத்திலும் இருப்பார். சிலசமயம் தம் உடம்பு முழுவதும் சாக்கடையை பூசியிருப்பார். அருகில் சென்ற பக்தர்களுக்கு சாக்கடை நீரின் நாற்றம் அடிக்கவில்லை. மாறாக சந்தன மணம் கமழ்ந்தது. ஓதசுவாமிகள் சித்தர் அடிக்கடி புரியாத ஏதோ ஒரு மொழியில் முணுமுணுத்துக் கொண்டு வானத்தையும் பூமியையும் பார்ப்பார்.

இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் விளக்குவார். தனது தாய்க்கு அளித்த வாக்குறுதிபடி கடைசிகாலத்தில் தாய் அழைத்தபோது அவள் இருக்குமிடம் சென்று ஈமக்கடன் செய்து அவர் மோட்சமடையச் செய்தார்.
ஓதசுவாமிகள் சித்தர் பாதம் பட்ட இடமெல்லாம் புனிதமடைந்தது, வளர்ச்சிய டைந்தது. ஓதசுவாமிகள் சித்தர் தாம் சித்தியடைய போவதை முன்கூட்டியே தனது பக்தர்களுக்கு எடுத்துக் கூறி தாம் சித்தியடைந்ததும் தம்மை எங்கு எப்படி ஜீவசமாதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படியே தனது பக்தர் ஒருவர் வீட்டில் நிஷ்டையிலிருந்தபடியே 10-10-1906 அன்று காலை 6 மணிக்கு தமிழ் பராபவ ஆண்டு புரட்டாசி மாதம் 26ம் தேதியன்று திருவாதிரை நட்சத்திரத்தில் சித்தியடைந்தார் ஓதசுவாமிகள் சித்தரை அவர் கூறியபடியே பக்தர்கள் ஜீவசமாதி அமைத்து சிவலிங்கம் பிரிதுஷ்டை செய்துள்ளனர். ஓதசுவாமிகள் சித்தர் ஜீவசமாதியான பிறகும் பல அற்புதங்களை பல பக்தர்களுக்கு நிகழ்த்தியுள்ளார்.

அதனால், அந்த கடைகளில் வியாபாரம்
அமோகமாயிருக்கும்.
இரண்டு முறை உயிரிழந்தவர் களை
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும்
உயிர்பெறச் செய்தார்.
ஒருமுறை ஓதசுவாமிகள் சித்தர் தம்மை மறந்த நிலையில் அவதூதராய் திரிந்தபோது அதைக்கண்ட கொடியவன் ஒருவன் அவருடைய வலதுகையை வெட்டினார்.

வெட்டுப்பட்ட கை துண்டாகி கீழே விழுந்தது. இரத்தம் மிகுதியாய் வெளியேறியதும் அறியாமல் அவர் நடந்துபோய் கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் பதறியபடி வெட்டுப்பட்ட ஓதசுவாமிகளுடைய வலதுகையை கீழேயிருந்து எடுத்து அவரிடம் அளித்த போது அப்போதுதான் அவருக்கு கை வெட்டப்பட்டது தெரிந்தது. சிரித்துக் கொண்டே வெட்டப்பட்ட வலதுகையை தம் உடலில் பொருத்தி தடவியபோது அது பழையபடியே ஒட்டிக் கொண்டது. வெட்டப்பட்ட இடத்திலிருந்து இரத்தமும் காயமும் எதுவுமே இல்லாமல் மறைந்து போனது. வெட்டியவனுக்கும் அருளாசிகள் வழங்கினார். இப்படி எண்ணற்ற சித்தாடல்கள் பலபுரிந்த மாபெரும் சித்தரான ஓதசுவாமிகள் சித்தர் தம்மை எந்த நிலையிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் குப்பைமேட்டிலும், சாக்கடை ஓரத்திலும் இருப்பார். சிலசமயம் தம் உடம்பு முழுவதும் சாக்கடையை பூசியிருப்பார். அருகில் சென்ற பக்தர்களுக்கு சாக்கடை நீரின் நாற்றம் அடிக்கவில்லை. மாறாக சந்தன மணம் கமழ்ந்தது. ஓதசுவாமிகள் சித்தர் அடிக்கடி புரியாத ஏதோ ஒரு மொழியில் முணுமுணுத்துக் கொண்டு வானத்தையும் பூமியையும் பார்ப்பார்.

இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் விளக்குவார். தனது தாய்க்கு அளித்த வாக்குறுதிபடி கடைசிகாலத்தில் தாய் அழைத்தபோது அவள் இருக்குமிடம் சென்று ஈமக்கடன் செய்து அவர் மோட்சமடையச் செய்தார்.
ஓதசுவாமிகள் சித்தர் பாதம் பட்ட இடமெல்லாம் புனிதமடைந்தது, வளர்ச்சிய டைந்தது. ஓதசுவாமிகள் சித்தர் தாம் சித்தியடைய போவதை முன்கூட்டியே தனது பக்தர்களுக்கு எடுத்துக் கூறி தாம் சித்தியடைந்ததும் தம்மை எங்கு எப்படி ஜீவசமாதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படியே தனது பக்தர் ஒருவர் வீட்டில் நிஷ்டையிலிருந்தபடியே 10-10-1906 அன்று காலை 6 மணிக்கு தமிழ் பராபவ ஆண்டு புரட்டாசி மாதம் 26ம் தேதியன்று திருவாதிரை நட்சத்திரத்தில் சித்தியடைந்தார் ஓதசுவாமிகள் சித்தரை அவர் கூறியபடியே பக்தர்கள் ஜீவசமாதி அமைத்து சிவலிங்கம் பிரிதுஷ்டை செய்துள்ளனர். ஓதசுவாமிகள் சித்தர் ஜீவசமாதியான பிறகும் பல அற்புதங்களை பல பக்தர்களுக்கு நிகழ்த்தியுள்ளார்.

 

Read More : கொய்யாப்பழம் என்கிற பறிக்காத பழம் ரகசியம் உலகமும்!!

சித்தர் ஆலயம் செல்லும் வழி

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 K.M. தொலைவில் முத்தழகுப் பட்டியில் அமைந்துள்ள மிகவும் சக்திவாய்ந்த ஓம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் சித்தர் என்கிற ஓம் ஸ்ரீமத் சுப்பையா சுவாமிகள் சித்தர் அதிஷ்டானத்தையும் அவர் தவம் செய்த லிங்கோத்பவர் அமிர்தம்பாள் மற்றும் இராமலிங்கம் சிலைகள் அமைந்துள்ள இரண்டு சிறிய குகைகளையும், அந்த குகைகள் அமைந்துள்ள மலையிலுள்ள ஊற்றிலிருந்து சொட்டு செட்டாய் விழும் நீர் பால்கேணி என்றழைக்கப்படும் கேணியில் விழுவதையும், அதனருகில் ஓதசுவாமிகளின் நேரடி சீடர் மகான் ஸ்ரீ சாரங்கு ரெங்கநாத சுவாமியுடைய ஜீவசமாதியும், விநாயகர், நந்தி சந்நிதிகளும் மற்றும் ஓதசுவாமிகள் சித்தரின் ஜீவசமாதியில் அவருடைய திருவுருவபடத்தையும் நேரில் கண்டு வணங்கி வாழ்வில் நலம் வளம் பெறுங்கள்.

குறிப்பு: ஓதசுவாமிகள் சித்தர் ஜீவலாயம் தினமும் காலையில் 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலையில் 5 மணிமுதல் 7 மணிவரையிலும் திறந்திருக்கும்.

பௌர்ணமி, அமாவாசை பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

Read More : https://temple.dinamalar.com/news_detail.php?id=36653

கோரக்கர் சித்தரின் சிஷ்யர்

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சதமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர் நித்தர், நிமலர், நிராமயர், நீள்பா முத்தர் தம்முத்தி முதல் முப்பதாறே
சிவத்தை கண்டவர்கள் சித்தர்கள். இம்மை, மறுமை, உம்மை ஆகிய முத்தர முக்திக்கும் மூலரே சித்தர்கள்! அவர்கள் என்றும் “அழியாதவர்கள்”, “மாசற்றவர்கள்” மேலான நிலையை அடைந்த வர்கள், தன்னையே தான் காண்பது தான் ஞானம் என்று விதிமுறை வகுத்து மெய்ஞானம் பெற்று உலக உயிர்கள் இன்பநிலை எய்த உழைத்தவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் கோடிகணக்கானவர் ஆயினும் முதன்மையாய் பதிணென் சித்தர்கள் குறிப்பிடும் படியாய் உள்ளனர். அவர்களில் தீயிலிருந்து வெளிப்பட்டவரும் “மகாசித்தர் மச்சேந்திர நாதரால்” உருவாக்கப்பட்ட வருமான ”ஸ்ரீ கோரக்க சித்தர்” ஆவார். “மகாகுரு ஸ்ரீகோரக்க சித்தரின் “ஆற்றலினால் அவரை சரணடைந்து அதன் பயனாய் அவரின் சீடராக அவதரித்த ஸ்ரீபாப்பையா மகாசித்தரும்” ஒருவர். குரு “ஸ்ரீபாப்பையா மகாசித்தர்” நாகை மாவட்டத்தின் கடற்கரையோரம் காவிரி நதியின் கடை மடை பகுதியில் சங்கத்தமிழ் கூறும் பிறையாறு என்னும் பொறையாற்றில் மகாசித்தர் அவர்களின் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.

”மகாகுரு ஸ்ரீபாப்பையா சுவாமிகள்”

”ஸ்ரீகோரக்க சித்தரின்” அருளை பரிபூரணமாய் பெற்று பொறையார் பகுதியில் அவர் வாழ்ந்த காலத்தில் நேரடியாய் காலச்சூழ்நிலை குறித்தும் கிரகங்களின் சஞ்சாரம் பற்றியும்,

மற்றும் நோய் வினைகளுக்கு மருத்துவம் செய்தும், பரிகாரம் செய்தும், சமயத்துக்கு அப்பாற்பட்டு தொண்டாற்றி அன்று “டேனர்கள்” ஆளுமைக் குட்பட்ட இவ்வூரில் கி.பி. 1712ம் ஆண்டு தை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் தனது அடியவர்களுக்குசொல்லிய வண்ணம் தனது காய உடலிலிருந்து நலாத்மாவை நீக்கி பிரபஞ்ச சஞ்சாரம் செய்தார்.

முன்கூட்டியே இடம் குறித்த வண்ணம் 5 கருடன் வட்டமிடும் இடத்தில் ஜீவசமாதியானார். அன்றைய நாளிலிருந்து ஐயாவின் ஜீவ சமாதி இவரது திருப்பெயருக்கே அன்றைய அரசால் நில அளவை கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

அவர்தம் அன்பால் ஞானத்தால் ஈர்க்கப்பட்ட சீடர்கள் சில நூற்றாண்டு மடம் நிறுவி இங்கு காவடிஎடுத்து (கோரக்கர் சன்னதியில் இன்றும் நடைபெறும்
வழக்கம்) பூசைகள் செய்து பராமரித்து வந்தனர். அவர்களில் மூவர் இந்த ஷேத்திரத்திலேயே சமாதியும் அடைந்தவர்கள். நாளடைவில் ஜீவ சமாதிபீடமும் மடமும் சிதிலடைந்து காட்டு மரங்களும், விஷ உயிரினங்களும் தீய செயல்களும் நடந்ததால் ஆலயமும் அதன் கீழ்புறம் அமைந்த குளமும் பயனற்று பக்தி பரவசத்திற்கு அப்பாற்பட்ட இடமானது.

நீண்ட இடைவெளிக்கு பின் தற்கால மக்களுக்கு மகாகுரு “ஸ்ரீ பாப்பையா சுவாமிகள்” ஜீவசமாதி பீடத்தில் வழிபாடும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

”மகாகுரு ஸ்ரீ பாப்பையா சுவாமிகள்” ஜீவசமாதியின் தலைமை தொண்டரான திரு.து.இன்ப ராசன் அவர்கள் மாணவ பருவத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் இருக்கும் ”மகாகுரு கோரக்கர் சித்தர்” பீடத்திற்கு ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சென்று வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் இரவு வழிபாடு முடிந்து குருபீடத்தில் திரு. இன்பராசன் அவர்கள் உறங்கும் போது மகாகுரு “ஸ்ரீகோரக்கர் சித்தர்” அவர்கள் கனவில் தோன்றி உனது ஊரில் கீழ் திசையில் எனது சிஷ்யர் “ஸ்ரீ பாப்பையா சித்தரின்” ஜீவசமாதி பீடம் உள்ளது. அங்கு சென்று இங்கு நடைபெறும் பூசை முறை போல் அங்கும் செய்வாய். அதற்கான தகுதியை “ஸ்ரீ பாப்பையா சுவாமிகள்” உனக்கு தருவார் என கட்டளையிட்டார்.

அவ்வாறு வழிபாடு நடந்து கொண்டிருந்த போது ”மகாகுரு ஸ்ரீ பாப்பையா சுவாமிகள்” தனது அருமைத் தொண்டர் இன்பராசன் மீது “ஆத்ம பரகாய பிரவேசமாகி” முதல் வாக்காய் “கருவிலே உருகொண்டு இருந்த என்னை ஏன் அழைத்தாய்” என்று வினவினார்கள். மேலும், ஜீவசமாதி பீடத்தின் பூசை முறைகளை எடுத்துக் கூறினார்கள். அன்று முதல் திரு. இன்பராசன் அவர்கள் குரு அருட்செல்வர் என்ற நாமத்தை தாங்கி வருகிறார்.

குருஅருட்செல்வர் ஆத்மத்தில் பரகாய பிரவேசமாகும் “திருமகாகுரு ஸ்ரீபாப்பையா சுவாமிகள்” தன்னை நாடிவரும் இன்னலுரும் மக்களுக்கு இன்றளவும் குறை கேட்டு தீர்வு கூறி கிரஹ பரிகாரம் செய்து நலம்பெற செய்வது இன்றளவும் வியக்கும் வண்ணம் நடைபெறுகிறது. மகாகுரு பரகாய பிரவேசத்தில் மொழி ஒரு தடையின்றி கிரந்தம், சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், ஹிந்தி, அரபி போன்ற மொழியில் விளக்கம் சொல்லும் கண்கண்ட சித்தராய் இன்றும் அருள்புரிகிறார்.
ஆழி பேரலையின் (சுனாமி) அழிவுக்குப் பின் ”மகாகுரு ஸ்ரீபாப்பையா மகாசித்தர்” அவர்களின் ஆலயத்தை புதுபிக்க பரகாய பிரவேசத்தின் போது உத்தரவு கேட்கப்பட்டது. தனது கைப்பட எழுதிய ஜீவ நாடியில் பரகாய பிரவேசத்தின் போது “மகாகுரு ஸ்ரீ பாப்பையா சுவாமிகளே” படித்து விளக்கம் அளித்தார். திருப்பணிக்கு திரு. குருஅருட்செல்வர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு வங்கி கணக்கும் (கும்பகோணம் நகர கூட்டுறவு வங்கி பொறையார்) வைப்பு நிதி எண் 2290 துவங்கி நடந்தது.

இத்திருத்தலத்தில் “மகாகுருவின் ஜீவ சமாதி பீடமும், “சொர்ணமகாகாளி பீடமும்”, “வினாயகர் ஆலயம்”, “ஸ்தல விருட்சபீடம்”, “யாகசாலைகள்”, “ஆத்மபீடம் அன்னசத்திரம்”, “இராகு கேது பீடம் ” போன்ற கட்டிடங்கள் செயல்வடிவம் பெற்றுள்ளது. மேலும், வருகிறது. தற்போது ஜீவசமாதி பீட திருப்பணி அடித்தலம் இடப்பட்டு 18 தூண்கள் (பதினென் சித்தர்கள் தாங்கி நிற்க) முழுவடிவம் பெற்றது.

அன்றாடம் ஆலயம் வரும் அன்பர்கள் தீபாராதனை, தியானம் மந்திர உச்சாடனம் தோத்திர நாமம் செய்து பூஜித்து அன்னதானமும் செய்து வருகிறார்கள். வாரந்தோறும் “குருவார (வியாழன்) சிறப்பு பூஜையும்” மாதந்தோறும் ”மிருகசிரிஷ நட்சத்திரம்” மற்றும் “தேய்பிறை அஷ்டமி” காலங்களில் சிறப்பு ஹோமங்கள் மாலை நேரத்திலும், “பௌர்ணமி” திதியன்று பகல் பொழுதிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் குரு பீடம் வரும் பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து பிடி அரிசி” சேர்த்து எடுத்து வந்து குருபீடத்தில் ஒப்படைத்து மதியம் நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொள்கிறார்கள். இது போன்ற முக்கிய பூஜை தினங்களில் தொலைதூர மக்களும் வருகைதந்து தங்களின் பிரச்சனை களுக்கு தீர்வுகண்டு செல்வதை இன்றளவும் காணமுடியும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *