வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்…வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த முறையும் அதுபோல் திருமலைக்கு சென்றிருந்தேன். ஒவ்வோர் ஆண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருவது இவ்வளவு வருடம் இல்லாத ஓர் புதிய அனுபவம் அங்கு எனக்கு ஏற்பட்டது. வழக்கம்போல் எல்லாரையும் போல் வெங்கடாசலபதியை தரிசனம் செய்துவிட்டு இயற்கை காட்சிகளை பார்த்து வரும் போது, ஆன்மீகம் தொடர்புடைய புதிய இடங்கள் ஏதேனும் உள்ளனவா என விசாரித்து வந்தேன்.
அன்று பெளர்ணமி என்பதால் பெண் தெய்வ வழிபாடு சிறப்பை தரும் என்பதால் அக்கம் பக்கத்தாரை விசாரித்தேன். நான் தங்கி இருந்த வராஹ ஸ்வாமி கெஸ்ட் ஹவுசிலிருந்து மிக அருகிலுள்ள “பாட்டா கங்கம்மா” என்னும் அம்மன் சந்நிதியை காண்பித்தார்கள். திருமலையில் எல்லைத் தெய்வமாக நான்கு பக்கமும் இதுபோல் காவல் தெய்வங்கள் உள்ளது என்று கேட்டறிந்தேன். கங்கம்மாவின் கோவிலில் வழிபாட்டை முடித்து எதிரில் உள்ள ஆஞ்சனேயரை வழிபட்டேன்.
அந்த இடம் மனதிற்கு மிகவும் இதமாய் இருந்ததால் சிறிது தியானத்தில் அமர்ந்தேன். அப்போதுதான் முன்பு எப்போதும் இல்லாத ஓர் அற்புத அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஆம், தியானத்தில் இருந்த என்னை ஏதோ ஓர் அமானுஷ்ய சக்தி முன்னோக்கி இழுப்பதை உணர்ந்தேன் “மகனே இன்னும் சில அடிகள் முன்னோக்கி நடந்து வா” என யாரோ எனக்கு கட்டளை இடுவதை உணர்ந்தேன். திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தேன். அருகில் யாரும் இல்லை. ஆள் தடமாட்டம் இல்லாத இடம் அது என்பதால் சிறிது தயக்கம் ஏற்பட்டது. சரி போய்தான் பார்ப்போமே என்று பத்து பதினைந்து அடிகள் முன் வைத்தேன்.
கண்ணில் பட்ட சித்தர் சமாதி ; அருளேவேதனையை தீர்க்கும்
அங்கு என் கண்களில் ஓர் சித்தரின் சமாதி அகப்பட்டது. அந்த இயற்கையான, மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ள அந்த சித்தரின் சமாதியை அருகில் உள்ள உள்ளூர் மக்கள் தினமும் வழிபாடு செய்து வருகிறார்கள்.
சித்தரின் சமாதியின் பக்கத்தில் அவரின் படத்தை வரைந்துள்ளதை பார்த்தபிறகு இவர் ஓர் பெரிய மகான் என்பதை மனம் தெரிவித்தது. ஏதோ ஓர் உந்துதலில் நான் அவர் சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன். உடனே மகானின் தொடர்பு எனக்கு ற்பட்டது.
“மகனே நான் மக்கள் அனைவருக்கும் உதவ விரும்புகிறேன். தமிழ் நாட்டு மக்களும் என்னை பார்த்து பயனடைய வேண்டும் என விரும்புகிறேன்.
அதனால்தான் என் சமாதியை உனக்கு காட்டித் தந்தேன்” என்று தெரிவித்து எனக்கு ஆசி கூறி மறைந்தார். அங்குள்ள உள்ளூர் மக்கள் அந்த சித்தரைப் பற்றி அவ்வளவு லேசில் அவரைப்பற்றிய விவரத்தை தெரிவிப்பதாக இல்லை. அந்த சித்தரே என்னை அழைத்து உள்ளதால் எப்படியும் அவரைப் பற்றிய விவரம் தெரிய வேண்டி சில நாட்கள் அங்கு தங்கி பிரார்த்தனை செய்து வந்தேன். காலையில் தினமும் வந்து அங்கேயே பூத்து உள்ள மலரை அவர் சமாதிமேல் வைத்து தியானித்து வருவேன்.
அமைதியும் இயற்கை எழில் கொஞ்சும் சுகமான இடமாக உள்ளதால் எவராக இருந்தாலும் இங்கு நின்றாலே மனம் அமைதியை தானாகவே அடையும். சித்தர் என் பிரார்த்தனைக்கு இணங்கியதாகவே தோன்றியது.
ஓர் வயதான முதியவர் என்னிடம் வந்தார். தெலுங்கு கலந்த தமிழில் பேசினார். “தம்பி தினமும் இவரை வழிபடுவதை பார்த்து வருகிறேன். இவரைப்பற்றி உனக்கு சில விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்” என்றதும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. சித்தருக்கு நன்றியை தெரிவித்தேன்.
“தம்பி நான் இந்த சித்தருடன் வாழ்ந்தவன். சித்தருக்கு குழந்தை மனம், பிறர் கஷ்டத்தை பொருக்காதவர். தன்னை அழிக்க நினைக்கும் எதிரிக்கும் நல் வாழிகாட்டி உதவும் மனம் உடையவர்” என்று புகழ்ந்து கொண்டே
“எனக்கு நல்லா நினைவிருக்கு. பத்து பதினைந்து வருடம் முன்பு இவர் எங்கள் கடைப் பக்கம் வருவார். இவரிடம் தெய்விக சக்தி உள்ளதை முதலில் நான்தான் உணர்ந்து கொண்டேன்,
அதுமுதல் இவரை நான் மற்றவர் போல் இல்லாது மரியாதைக்கு உரியவராகவே நடத்தி வருவேன். தம்பி ஓர் நாள் கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த போது,
சித்தர் ஐயா அங்கே நின்றிருந்தார். என்ன வயிற்றுவலியா என்று என்னை கேட்டவாறு கருணையுடன் நோக்கினார். சரி போய் ஓர் மாத்திரை வாங்கி வா என்றார். நானும் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சித்தர் ஐயாவிடம் தந்தேன்.
அவர் மாத்திரையை சாப்பிட்டுவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு கவலைப்படாதே இனி உன் வயிற்று வலி உன்னிடம் நெருங்காது என்று கூறிச் சென்று விட்டார். எள்ள அதிசயம் அவர் கூறியவாறு என் வயிற்று வலி நீங்கி
விட்டது.
‘வலி எனக்கு மருந்து அவருக்கு ‘ என்னே சித்தரின் கருணை, இன்றுவரை எனக்கு வயிற்றுவலி வரவே இல்லை” என்று கண்ணீர் மல்க அவரின் அருளாசியை நினைவு கூர்ந்தார் அவர்.
“தம்பி இது காடு, மதியம் மேல் மழைதிடீரேன் வந்துவிடும். காட்டுமிருகங்கள் நடமாடும். எனவே நாளை காலை வா மேலும் சில அற்புதங்களை கூறுகிறேன்” என்றார்.
ஆம் அவர் கூறியது உண்மைதான, சில்லென காற்றும் வீசத் துவங்கியது. மிகவும் ரம்யமான இயற்கை சூழலில் அமைந்த அந்த திறந்தவெளி சமாதியை மீண்டும் ஓர் முறை வணங்கி இருப்பிடம் சென்றேன். மறுநாள் காலையில் பெரியவர் எனக்காகவே காத்திருந்தார். சித்தரை வழிபட்டு அவரின் அற்புதங்களை வழங்கினார்.
சித்தரின் அற்புதங்கள் நாளுக்குநாள் மக்களுக்கு தெரிய வந்தது. அவரும் மக்களிடையே பிரபலமானார். போலி சாமியார்கள் இவரை எதிர்த்தார்கள். இவரை சோதிக்கவும் செய்தார்கள்.
Read More : சங்கீத மும்மூர்த்திகள் திருவாரூரின் அடையாளம்
கொழுந்து விட்டு எரிந்த கற்பூரம் ; அருளேவேதனையை தீர்க்கும்
நமது சித்தர் ஜடாமுடியுடன் இருப்பவர். அந்த ஜடாமுடியில் கற்பூரக் கட்டி ஒன்றினை கட்டி வைத்து சோதனை செய்தனர். கற்பூரம் கொழுந்துவிட்டு எரிந்ததே தவிர அவரது முடிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் அப்படியே இருந்தது. போலிகள் இவரைப் பார்த்து பயந்து பின் வாங்கினார்.
ஆனால்
சித்தரோ எதைப்பற்றியும் கவலை இல்லாது குழந்தை மனதுடன் பழகியே வந்தார். ஒருசமயம் இவரை பரிசோதனை செய்த ஊரில் விளைச்சல் பொய்த்து விட்டது. மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இது சித்தருக்கு நாம் இழைத்த அநீதியின் விளைவே என எண்ணி சில நல்லவர்களுடன் சித்தரை சரண் அடைந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று சித்தர் பெருமானும் அவ்வூருக்கு சென்றார். “கவலை வேண்டாம், பரிகார பூஜை செய்தால் சரியாகி விடும்” என்றார்.
சித்தரே ஓர் குறிப்பிட்ட நாளில் அவ்வூரில் வந்து வயல்வெளியில் நின்று கொண்டு நீண்ட பிரார்த்தனை ஒன்றை செய்தார். அதன் பிறகு எட்டுதிசையிலும் பெரிய வடிவிலான கற்பூரங்களை வைக்கச் சொன்னார். பூஜைகளை மனம் உருக செய்தார். பிறகு மக்களை நோக்கி உங்களில் ஒருவர் எட்டு கற்பூரத்தையும் உடனே ஏற்றுங்கள்.
நமது பிரார்த்தனைக்கு இணங்கி தேவதைகள் நமது கற்பூர ஆராதனைக்காக காத்து இருக்கிறார்கள் என்று கட்டளையிட்டார்.
எவரிடமும் வத்திபெட்டி இல்லை. உடனடியாக ஏதும் செய்ய முடியாததால் மீண்டும் சித்தரை வணங்கி பிரார்த்தித்தனர் ஊர் மக்கள். தேவதைகளை காக்க வைக்கக் கூடாது என்று சித்தர் அவர்களை வணங்கி எட்டு திக்கிலும் உள்ள கற்பூரத்தை நோக்கி இங்கிருந்தபடியே தன் கைகளை தட்டினார். என்ன அதிசயம் ஒவ்வொரு கற்பூரமாக தாமாகவே எரிய ஆரம்பித்தது.
பூஜை முடிந்த பிறகு வயல்களில் செழிப்பான விளைச்சல் கண்டது. அவ்வூர் மக்கள் இன்றுவரை வளமுடன் வாழ்வதாக தெரிவித்தார் அப்பெரியவர். தன்னை இகழ்ந்தவருக்கும் உதவி செய்து வாழ வைத்தவர் நமது சித்தர். இன்றும் தனது உதவி மிகவும் அவசியம் என்று நினைத்தால் தன் பக்தர்களுக்கு தான் நேரில் காட்சி அளித்து உதவிய நிகழ்ச்சிகளும் உண்டு. இவர் உயிருடன் இருந்தபோதும், சமாதி ஆனபோதும் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களை சந்திக்க வேண்டினார்.
அவரது சமாதியானது திருப்பதி கோவிலுக்கு வடக்கு திசையில் பாபஷனாசன தீர்த்தத்திற்கு நடைபாதையாக செல்லும் வழியின் ஆரம்பத்தில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு போகும் பாதை ஆரம்பிக்கும் இடத்தில், அந்த இயற்கை எழில் ததும்பும் இடத்தில் வெட்டவெளி சமாதியாக அமைந்துள்ளது. ஓர்முறை அவரை தரிசனம் செய்து வந்தால் போதும். சித்தரின் அருள் ஆளுகையின் கீழ் நாம் உட்பட்டு விடுவோம் என்பது கண்கூடாகும்.
Read Also : ருத்ராட்சையின் ரகசியங்களும் அணிவதால் கிடைக்கும் நன்மைகளும்
இருக்கன்குடி மாரியம்மன் இடர் தீர்ப்பாள்
பஞ்ச பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த காலம். அவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்த சமயம். மகாலிங்க மலை, வந்திராயிருப்பு மலை எனப்படும் பர்வதத்தின் அடிவாரத்தில் வந்தனர். நீராடுவதற்கு சுற்றுவட்டாரத்தில் எங்கும் நீர்நிலை காணப்படவில்லை. வில்லுக்கு விஜயன் எனப் புகழ் பெற்ற அர்ச்சுனன் கங்கா தேவியை மனதில் வணங்கினான். வில்லை வளைத்தான். வருணக் கணையை வில்லில் பூட்டினான்.
பூமியைப் பிளந்தான். பிளந்த பூமியிலிருந்துநீர் பொங்கிப் பெருகியது. பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் நீராடி மகிழ்ந்தனர். வற்றாத பெருநதியாக அந்நீர் ஓடத் தொடங்கியது. இன்றும் ஒடிக் கொண்டு இருக்கிறது. அர்ஜுனன் தோற்றுவித்ததால் அர்ஜுனா நதி என்கிற பெயருடன் அந்த ஆறு இன்று வழங்கப்படுகிறது.
தெய்வத்திருமலையாம் பொதிகை மலையிலேயே குற்றால அருவி தவழந்து வருகிறது. சிவபெருமானும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயகிரியில் கூடியதால், பாரம் தாங்காமல் அண்டம் ஒருபுறமாக சாய்ந்தது. இதை நிலைநிறுத்தி, சமன் செய்ய அகத்தியருக்கு ஆணையிட்டார்.
குறுமுனியாம் எம்பெருமான் அகத்தியப் பெருமான் குற்றாலப் பொய்கையை அடைந்தார். வடகோடியில் ஏற்பட்ட பாரதம் தென்கோடியை அடைந்த குரு முனிவரின் கோடி தீர்த்தங்களை ஒரு குடத்திலிட்டு மலையில் தென்பகுதியில் அச்சமயம் வைத்தார்.
தசரத மைந்தன் ரகு குல திலகள் ஸ்ரீராமன் கொடும் அரக்கர்களை அழித்துவிட்டு பொதிகை மலை வழியாக வந்து கொண்டிருந்த நேரம். அகத்திய மாமுனிவர் வைத்திருந்த கோடி தீர்த்தத்தை எடுக்கும் நிலை உருவாயிற்று. வைப்பி (புதையல்) லிருந்து தோன்றிய ஆறு ஆதலினால் வைப்பாறு எனப் பெயர் பெற்று பெருகி கொண்டு இருக்கிறது.
இதென்ன … இந்தியாவின் நீர் நிலைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையா என்ற சந்தேகம் எழலாம்… இல்லை!
பின் எதற்காக இதையெல்லாம் குறிப்பிட வேண்டும் என்ற கேள்வி எழலாம்.
பதில் இருக்கிறது!
மூர்த்தி, தலம், தீர்தத்ம் –
இவை முக்கியமான நம் சமயத்தில் பெற்றுள்ளன. இவைகளில் புராண இடங்களைப் இதிகாசச் சிறப்புகளைத் தன்னோடு இணைத்துக் கொண்ட நதி இரு நதிகள் ஓரிடத்தில் உலாவரும் போது அந்த இடம் தனியான சிறப்புப் பெற்று விடுகிறதல்லவா!
அப்படி அமைந்திருக்கும் திருத்தலம்தான் இருக்கன்குடி!
இரு கங்கைகள் கூடுவதால் இருக்கங்(ன்) குடி என்று இத்தலம் போற்றப்படுகிறது.
தென் தமிழ்நாட்டில் புகழ் சிறந்து விளங்கும் இத்தலம் காமராசர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் உள்ளது. சாத்தூருக்கு நேர்கிழக்கே விளாத்திக்குளம் வழியே திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தலம் இது.
ஆறுகள் சுற்றி உலாவந்து வணங்கும்படி நடுவே அமைந்த திடல் – ஆலயத்தில் எழுந்து அருள்பாலிக்கும் உலகநாயகி மாரியம்மன் எழுந்தருளியிருக்கிறாள்.
இருக்கன்குடி
தீர்த்தம், தலம் இவற்றின் தனிச்சிறப்போடு சித்தாடும் வல்லியான அந்த நாயகியின் சிறப்பினை -மூர்த்தியின் பெருமையினை இயம்ப வார்த்தைகள் கிடையாது.
அன்னை இந்தத் தலத்திற்கு எழுந்தருளிய வரலாறு சுவையான ஒன்று!
ஒரு காலத்தில்…
இந்த இரு நதிகளும் பெருகிக் கொண்டிருந்த இடத்தில் மேலமடை என்ற பெயர் கொண்ட கிராமம் இருந்தது. தென்னைகளும், புன்னைகளும் மூங்கில் பண்ணைகளும் சூழ்ந்து இயற்கையின் சிறப்பை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது. அர்ஜுனா நதியும், வைப்பாறும் பொங்கி எழுந்து இந்த ஊரை அடித்துச் சென்று விட்டன. அங்கே வாழ்ந்த மக்கள் பகுதிபகுதியாக பிரிந்து இருக்கன்குடி. நத்துப்பட்டி, கலிங்கல்மேட்டுப் பட்டி என்ற கிராமங்களில் இருக்கத் தொடங்கினர்.
அந்நிலையில்… ஆண்டுகளுக்கு முன்… ஏறத்தாழ முன்னூறு
இருக்கன் குடியைச் சேர்ந்த சில கன்னிப் பெண்கள் சாணம் எடுப்பதற்கு இரண்டு ஆறுகளும் சந்திக்கும் முகத்து வாரத்திற்கு வந்தனர். அந்த இடம் ஒரு பெரிய காடு போன்று இருந்தது. சப்பாத்திக் கள்ளிகளும், எருக்கஞ்செடிகளும் நிறைந்து யுல் புதர்களாக இருந்தன.
சாணத்தைக் கூடையில் அள்ளிக்கொண்டு வந்த அப்பெண்கள் கூடைகளை மரத்தடியில் வைத்து இளைப்பாறினர். சற்று நேரம் சென்ற பின் கூடைகளை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கித் தலையில் வைத்தனர். கடைசியாகத் தூக்க வேண்டிய கூடையை சுமைதாங்கிக் கல் போலக் காட்சியளித்த ஒரு புற்றின்மீது வைத்து தூக்க முயன்றனர். ஆனால் அது சிறிதும் அசையவில்லை. அவர்களால் எடுக்க இயலவில்லை. காரணம் புரியாது அப்பெண்கள் திகைத்தனர்.
அந்த சாணக்கூடையின் கீழ்தான் எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கும் ஆதிபராசக்தி அமர்ந்து இருக்கிறாள் அறியவில்லை. என்பதை
அவர்கள்
ஆதிக்கும் அதியான அநாதியான தேவி அங்கே எப்படி வந்தாள்.
அன்னை பராசக்தி சதுரகிரி மலையில் உலக நாயகளை நோக்கித் தவமிருந்தாள்.
அண்ட சராசரங்களுக்கும் விதிக்கப்பட்ட நியதிக்கும் அத்தனையையும் உருவாக்கிய – அந்த நாயகியும் கட்டுப்பட்டவன் என்பதை பல சமயங்களில் நிரூபித்த தேவி இப்போதும் கட்டுப்பட்டாள்.
உலக மாதாளின் தவவலிமையச் சோதிக்க காற்றும், மழையும் வலுவாகச் சேர்ந்தது. அன்னை அசைந்தாள் இல்லை. பொங்கிப் பெருகிய வெள்ளம் அவளை அள்ளிக் கொண்டு சென்றது. அப்போதும் தேவியிடம் சற்றும் சலனமில்லை. வெள்ளத்தோடு வந்த அன்னையை இருக்கன்குடி தான் செய்த தவத்தால் தன்னுடன் இருத்திக்கொண்டு விட்டது.
ஆம்; காட்டாற்று வெள்ளம்போல் பொங்கிப் பிரவகித்த நீர் அன்னையைத் தன்னோடு அணைந்து வந்து இருக்கன்குடி மேட்டில் ஒதுக்கிவிட்டது.
காடாக இருந்த அந்த இடத்தில் அடர்ந்த கிளைகளையுடைய மரத்தின் கீழே அம்மன் தவக்கோலம் கலையாமல் அமர்ந்து விட்டாள். காலம் ஓடியது.
அம்மனைச் சுற்றி புற்றுவளரத் தொடங்கியது. கடைசியில் தேவியைப் புற்று மூடிவிட்டது. அந்தப் புற்று ஒரு சுமைதாங்கிக் கல் போலத் தோற்றம் கொடுத்தது. அந்தப் புற்றின் மீது வைத்த கூடைதான் அசைக்க முடியாது போயிற்று.
அண்ட சராசரங்களையும் அசைக்கும் அன்னை அசையாது அமர்ந்த இடத்தின் மீது வளர்ந்த புற்றே அது.
திகைத்து நின்ற பெண்களில் ஒருத்தி திடீரென தன்னிலை இழந்து பேசத் தொடங்கினாள்.
“நான்தான் உலக நாயகி எனது திருமேனி சிலைவடிவில் இங்கே புதைந்து கிடக்கிறது. என்னை எடுத்து வழிபடுங்கள்.”
அன்னையின் வாக்கு அந்தப் பெண் மூலம் உத்தரவாக வெளிப்பட பயபக்தியுடன் சென்று புற்றுள்ள இடத்தை வெட்டியும் கடப்பாறையினால் இடித்தும் மண்ணை நீக்கிப் பார்த்தனர். அங்கே..
கலியுக காவல் தெய்வமாய், கண்கண்ட அன்னையாய் கலிதீர்க்கும் தேவியாய் அதர்மத்தை நீக்கி தர்மத்தை காக்க வந்த மகாசக்தியாகிய மாரியம்மன் தவக் கோலத்தில் காட்சியளித்தாள்.
மண்ணை வெட்டி எடுக்கும்போது தேவியின் தோளில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதைத் துடைத்து பத்திரமாக எடுத்து வைத்தனர். (வெட்டுப்பட்டதால் இன்றும் அம்மனின் திரு மேனியில் தோளில் எண்ணய் பாலம்
போடப்படுகிறது)
உலக மாதாவின் திருவாக்கின்படி ஆலயம் ஒன்றினை நிர்மாணித்து அன்னையை வைத்து வணங்கி வரலாயினர். அன்று முதல் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து அருளாட்சி செய்து வருகின்றாள் இருக்கன்குடி அமர்ந்த அன்னை.
அவளுடைய அற்புதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்…
அன்னை குடியிருக்கும் ஆலயத்தைச் சுற்றி நதியில் வெள்ளம் பொங்கியது. ஆனால் தேவி வீற்றிருந்த ஆலயத்தின் வாயில்படியைத் தாண்டாமல் அவளுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டாற் போல் நின்றது. நீரின் மேற்பரப்பில் கடலெனச் சூழ்ந்திருந்த நீரில் அலைகள் தவழ்ந்து சென்று அன்னைக்கு வணக்கத்தைத் தெரிவிக்கும்படி இருந்தன.
ஒருநாள்… தோணி ஆலயத்தை நோக்கிச் செல்லும்போது கவிழ அதிலிருந்த நிவேதனத்திற்கான பொருள்களும், அணிகலன்களும் திக்குமுக்காடிய அன்னையை அன்னைக்குச் சொந்தமான நீரினுள் சென்றுவிட்டன. பூசாரியும் மற்றவர்களும் உள்ளம் நீந்திக்கரை சேர்ந்தனர். வேண்டியபடி
வற்றாத வெள்ளமாய் நீர்ஓடிக் கொண்டிருந்தது.
பதினோறு நாட்கள் ஓடி விட்டன.
சற்றே நீர்வற்றிய நிலையில்..
மக்கள் ஓடிச் சென்று பார்த்தபோது..
ஆதிபரா சக்தியின் அதிசய சக்தியைக் கண்டு வியந்தனர்.
ஆழ வேரூன்றிய மரங்களையும், தன்னுள் அகப்பட்ட அனைத்தையும் அடித்துச் சென்ற நதியின் வேகம்…
எப்படி அன்னையின் ஆலயத்தினுள் மட்டும் ஒரு துளியும் செல்லவில்லையோ –
அதுபோலவே…
மாரியம்மனின் அணிகலன்கள் அத்தனையும் அவளுடைய ஆலயத்திற்கு எதிரே…
தோணி கவிழ்ந்த அதே இடத்தில்… அப்படியே இருந்தன.
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக அவைகளை எடுத்துச் சென்று பராசக்திக்குச் சூட்டி ஆனந்தக் கூத்தாடினர் அந்த கிராமவாசிகள்
இருந்த இடத்திலிருந்து தன்னை அன்பர்களை அன்னை இழுக்கும் நோக்கி அழகிற்கு ஆயிரமாயிரம் சம்பவங்களைச் சொல்லலாம்.
அதில் ஒன்று இது.
சிவகாசியைச் சார்ந்த ஒரு அன்பர். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்திற்கு வாரிசு தோன்றிய மகிழ்ச்சிக்கு பதில் இதயத்தில் வேல் பாய்ந்தாற்போல் துடித்தார் அவர்.
காரணம் பிறந்த குழந்தையின் சதைக்கோளங்களாக வைத்தியம் இல்லை. இருந்தன. பார்க்காத
குழந்தையின் வளர்ச்சி தொடர்ந்ததே தவிர பார்வையற்ற கண்களில் மலர்ச்சி ஏற்படவில்லை.
வாழ வேண்டிய பெண்ணின் நிலை கண்டு வாழ வைக்க வேண்டிய தந்தை உள்ளூரத் தவித்துந் திணறுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாது கலங்கினார்.
அந்தப் பெண் தந்தையைத் தேடி ஓடி வந்தாள். அற்புதத்திற்கு
அற்புதமாய் விளங்கும் சித்தாடும் நாயகி வெறும் சதைக்கோளமாக இருந்த
கண்களை விழிகளாக்கிப் பார்வையும் தந்து விட்டாள்.
காரணமும் காரியமும் எல்லாமாய் விளங்கும் அலகிலா விளையாட்டுடைய தேவியின் லீலைகளில் இதுவும் ஒன்று.
மனித சக்தியை மீறிய செயல் இது என்ற நிலையில் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்ட அந்த அன்பர் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.
ஒருநாள் இரவு அயர்ந்து நித்திரை கொண்டிருந்தார் அவர். அவருடைய நெடுநாள் ஏக்கம் தீர கனவு புலர்ந்தது. சூரிய ஒளியுடன் சந்திரனின் குளுமை சேர்ந்த ஒளிவடிவமாய் ஓர் உருவம். அதுவும் பெண்ணுருவம். கனவில் வந்துதித்த அந்த அபிராமவல்லி திருவாய் மலர்ந்தாள்.
“குழந்தாய்! உன் குழந்தைக்காக துடிக்கும். நீ என் குழந்தையல்லவா. உன் வேதனையை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை… வா- என்னிடம் ஓடிவா.. இரண்டு நதிகளுக்கு இடையில் அமர்ந்திருக்கும் என்னைத் தேடிவா! உன் குறை நீங்கும். உன் மூலம் மற்றவர் குறையும் நிறையாகும்!”
கனவில் இனிமையான அழைப்பு…
திடுக்கிட்டு எழுந்தார் அவர். நெற்றியில் துலங்கும் திருநீறும், வட்ட வடிவமான குங்குமப் பொட்டுமாகக் காட்சியளித்த திருவுருவம் மறைந்தாலும்…
அந்த இனிமையான அழைப்பு…
யார் என்னை அழைத்தது. இரண்டு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த திருவுருவம் எங்கே. அமர்ந்திருக்கிறது.
Read Also ; https://www.vikatan.com/spiritual/temples/76572-subbaiah-swamigal-guru-pooja
கனவில் தோன்றி குறை தீர்த்த அம்மன்
கனவில் தோன்றி தன் குறை தீர அருள்மொழி கொடுத்தவள்.
இருக்கன்குடி அமர்ந்த மாரியம்மன்தான்!
ஓடினார். இருக்கன்குடி ஆலயத்தை எட்ட இருந்து கண்கள் வழியே மனம் நிறையப் பார்த்தார்.
ஆலயத்தின் முன்னே பிரவாகமெடுத்து ஓடும் நதியையும் பார்த்தார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்கிற பொய்யா மொழியை நடைமுறைப்படுத்துவது போல் இந்த நீரைக் கடந்து என் பாதங்களைச் சரணடையுங்கள் என்று கூறுவதுபோல் – அன்னை அமர்ந்திருப்பதை எண்ணி வியந்தார்.
ஆலயத்தை அடைந்தார். உள்ளே செல்லத் தயக்கம். ஏனெனில் அவர் மாற்று மதத்தினைச் சார்ந்தவர்.அவருடைய பெயர் பாப்ஜான். ஆலய வாயிலிலேயே கற்பூரமேற்றி இருகரம் கூப்பித் தொழுதார். உள்ளம் உருக வேண்டுதல் அவர் உள்ளேயே பிறந்தது.
“தாயே நீ என்னை அழைத்தாய். வந்துவிட்டேன். இன்றிலிருந்து உன்னுடைய அபிஷேக நீரும், திருநீறுமே என் மகளுக்கு மருந்து! நாற்பது நாட்களுக்குள் என் மகள் குணமடைய வேண்டும்.’
உறுதியான நம்பிக்கை! அது வீண் போகவில்லை! முப்பத்து ஒன்பதாம் நாள் இரவு…
அந்தப் பெண் தந்தையைத் தேடி ஓடி வந்தாள். அற்புதத்திற்கு அற்புதமாய் விளங்கும் சித்தாடும் நாயகி வெறும் சதைக்கோளமாக இருந்த கண்களை விழிகளாக்கிப் பார்வையும் தந்து விட்டாள்.
அவரைச் சந்தித்தபோது அவர் நாத்தழுதழுக்க இந்த வரலாற்றினைச் சொல்லிஸவிட்டுமேலே தொடர்ந்து கூறியதை கேட்கும்போது மெய்சிலிர்த்தது.
அவர் சொன்னார். “என் மூலம் மற்றவர் குறைகளையும் பிணிகளையும் நீக்கும் வழி முறைகளைச் சொல்லுகிறாள். அதனால் பலர் ஆனந்தப்படுவதை எண்ணி என் வாழ்க்கையையும் பயனுள்ளதாக ஆக்கிய இவளிடமே என்னை அர்ப்பணித்து விட்டேன்”.
ஆலயத்தைச் சுற்றி வருகிறோம்
ஒருபுறம் தங்கள் பிரார்த்தனைகளுக்காக மொட்டையடித்துக் கொள்ளும் பக்தர்கள். இன்னொருபுறம் படையலாக்கும் அன்பர்கள், வேறொருபுறம் தீச்சட்டி தூக்கி வலம் வரும் கூட்டம்.
இப்படிப் பார்த்து கொண்டே செல்லும்போது…
பஞ்சு, மிளகாய், நவதானியம், ஆமணக்கு இப்படிப் பல பொருள்களையும் இருகரங்களிலும் பக்தியுடன் காணிக்கையாக செலுத்தும் அந்த அருட்தாயின் குழந்தைகள்… இதைப்பற்றி தலைமை பூசாரியிடம் விசாரித்தோம். அவர் சொன்னார். இந்த பொருள்களனைத்தும் அவள் சொந்தமல்லவா! அதனால்தான் கத்தரிக்காய் முதற்கொண்டு எல்லாவற்றையும் காணிக்கையாக்குகிறார்கள்..!
இருக்கன்குடி அமர்ந்த மாரி போற்றி!
இடுக்கன் களையும் தேவி போற்றி! என்று மனமுருகி நம்பிக்கையுடன் நமக்கெல்லாம் வழிபட்டால்.