சர்க்கரை நோய்க்கு பாட்டி வைத்தியம் 

 சர்க்கரை நோய்க்கு பாட்டி வைத்தியம் 

“இன்சுலீன் ” போட்டால்  கூட இம்சை படுத்திக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகள் பலரையும் பார்த்து, நோயை படைத்த இறைவன் அந்த நோயை குணப்படுத்துவதற்கு உரிய வழிவகையை கண்டிப்பாக

 

செய்திருப்பானே, ஆனால், எவ்வளவோ முயற்சிகள் செய்தும் புதுப்புது மருந்துகள் வந்தாலும் கூட சர்க்கரை நோய்க்கு தீர்வே கிடையாதா என்று பல நேரங்களில் நினைத்து இருக்கிறேன்.

 

பாகற்காய், குப்பை மேனி,

மலைவேம்பு, சிறியா நங்கை போன்ற பல மூலிகைகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்றாலும்கூட. முழுமையான தீர்வுக்கு வழி கிடைக்கவில்லை. இந்நிலையில்,

திரு.சித்தர்தாசன் செல்வகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த “பேசும் தெய்வம்” மாத இதழில்

கடந்த 2010 ம் வருடம் அதாவது 15 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு கட்டுரையால் பல ஆயிரக்கணக்கான நபர்கள் பலன் அடைந்த காரணத்தால் இப்போது உங்களுக்கு இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

 

தினந்தோறும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு (பாட்டி வைத்தியம்)

தினந்தோறும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு ஒரு வெண்டைக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு மூடி வைத்துவிட்டு, மறுநாள் காலையில் எழுந்த உடன், மேற்படி தண்ணீரில் ஊறிக்கொண்டு இருக்கும் வெண்டைக்காய்களை எடுத்து கீழே போட்டுவிட்டு அந்த தண்ணீரை குடித்துவிட வேண்டும். முப்பது நிமிடம் கழித்த பிறகு, காபி, டீ, போன்றவற்றை சாப்பிடலாம்.சர்க்கரைநோய் வெகுவாக குறையும் என்று ஒரு செய்தி வெளிவந்து இருந்தது.

 

இந்த செய்தியை படித்த பிறகு சுமார் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு மேல், இந்த வெண்டைக்காய் கூறினேன். வைத்தியத்தை உபயோகித்த அனைவருக்குமே சர்க்கரை நோய் சரியானது மட்டுமின்றி, மீண்டும் இனிப்பு சாப்பிடுவதாக கூறி நன்றியை தெரிவித்தார்கள். சர்க்கரை நோய்க்கு முற்றப்புள்ளி வெண்டைக்காய் வைக்கும் வைத்தியத்தை வெளியிட்ட “பேசும் தெய்வம்” மாத இதழுக்கே. பயனடைந்தவர்களது பாராட்டும், நன்றியும் வாழ்த்தும் போய் சேரும். வெண்டைக்காய் குறித்த மேலும் சில செய்திகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல் படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை.

 

வெண்டைக் காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும், பகல் இரவு இரண்டிலும் சூடான நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.

 

வெண்டைக் காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு.அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள். பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி. ஆயிரத்து அறுநூறாம் ஆண்டுகளில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்பிரிக்கர்கள் கம்போ என்ற பிரபல ஒரு சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக் காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள்ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள்.

சமைக்க தெரியாது ருசியும் பிடிக்காது

வெகு நாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலேயே யாரும் பயன்படுத்த வில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒரு சிலரும் முற்றிய வெண்டைக் காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.

 

இதன் வகைகள் இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.

Read also https://navashakthibaba.in/guava-fruit-is-a-secret-to-the-world/

 வெண்டைக்காயின் விசேசமான குணங்கள்

வெண்டைக்கா யின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழ கொழப்புதான். இதில் அசிட்டிலேடட், கலேடு ரோமிக் அமிலங்கள் கொழ கொழப்பை ” ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழ கொழப்பாகவே இருக்கும்

 

வெண்டைக் காயை இளசாக இருக்கும் போதே பறித்து விட வேண்டும்.

 

பறித்த பிறகு கூட முற்றி விடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றிவிடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக் காயின் உள்ளே புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

 

அடடே… எங்க இவ்வளவு அவசரமா

 

• புறப்படுறீங்க…? ஓஹோ…. வெண்டைக்காய் வாங்க போறீங்களா…?

 

• இனி உங்கள பாத்தா சர்க்கரை வியாதி ஓடிடுங்க….

 

வாழ்க வெண்டைக்காய்!

சிவ குளிகை

எக் காலத்திற்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சித்த மருத்தவ முறைகளில் எளிதானது சிவகுளிகை ஒன்றேயாகும். இது செய்முறைகளில் முழுக்க முழுக்க மூலிகை இனங்களை சார்ந்து உள்ளது. வேதியியல் மருந்து வகை அறவே சேர்க்கப்படாதது. சிவகுளிகை செய்முறை பாடல்களில் கூறியவாறு மருத்துவத் துறையில் அனுபவம் பெற்று வாழையடி வாழையாக வரும் பாரம்பரிய செய்முறை கைப்பக்குவம் அவசியம் தேவைப்படுகிறது. இந்த சிவகுளிகை பல்வேறு துணை மருந்துடன் இணைந்து கொடுக்க சிறு குழந்தை முதல் பெரியோர் வரை கொடுக்க தீர்வு காண இயலாத பல நோய்கள் குணப்படுத்தப் பட்டுள்ளது.

சிவ குளிகைத் தொடர்பு உடைய எட்டு பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதனை பதிவு பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் படித்து பட்டம் வாங்கியுள்ள மருத்துவர்கள் எளிதாகக் கூறப்பட்டுள்ள சிவ குளிகை மருந்து செய்து நோய்களை எளிதில் குணப்படுத்தி விடலாம்.

 

அகத்தியரும் பதினெட்டு சித்தர்கள் குழுவாகச் சேர்ந்து பரம்பொருளின் ஆணைப்படி மருந்து இயல் நூல்கள் கோர்வையாகப் பாடினார்கள். அப்படி எழுதிப் பாடிய பாடல்களின் செய்திகள் அனைத்தும் சுருக்கி சிவகுளிகை என்ற ஓர் மருந்து முறைப்படி செய்து மாந்தம் முதல் பல நோய்களுக்கும், பெரியோர்களுக்கும் கொடுத்து உதவுமாறு பாடியதில் இக் குளிகையைப் பற்றிய செய்திகள் மருத்துவர்கள் அறிய வேண்டியது அவசியமாகும்.

 

சிவபெருமானின் ஞானக் கண்ணில் இருந்து வெளிப்பட்டவர் திருமுருகன் ஆவார். அதே போல் சிவபெருமானின் உள்ளகத்தில் இருந்து வெளிப்பட்டவர் அகத்தியர் ஆவார். இவர் பொதிகை மலையை இருப்பிடமாகக் கொண்டு தமிழ் மொழி வளர்த்த அகத்திய குரு முனிவர் திருமுருகனின் சிறந்த மூத்த மாணவர் ஆவார். அவர் அருளிய மருந்து சிவகுளிகை ஆகும். இதன் செய்முறை எளிதாகவும் சுருக்கமாகவும் கூறுவதையும் கேட்டு பயனடையுங்கள். எங்கும் சிரமப்பட்டு தேடித் திரியாமல் எளிதில் கிடைக்கும். திருமேனி என்கிற குப்பைமேனி மூலிகையின் வேரும், சிவ பெருமானுக்கு போற்றுதலுக்கு உரிய மூலிகையான திருநீற்றுப்பச்சை வேரும் (சப்ஜாவேர்), கவலைபடாது அலையாமல் கிடைக்கும் சிறு பூளை (சிறுபீளை என்றும் கூறுவர் வேரும், மகனே நீ வருந்தாமல் சிவன் திருப்பெயர்க் கொண்ட சிவக் கரந்தையின் வேரும், பிரம்மி என்கின்ற வல்லாரையின் வேருமாகும்.

Read also: கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும்

தானாக வளரும் காட்டு மொச்சை – பாட்டி வைத்தியம்

பொருள்:-

தானாக வளரும் காட்டு மொச்சை வேரும், சாதாரண வெள்ளை சாரணை வேரும், சொல்லுக்கினிய அரிய மூலிகையான சிவந்த சித்திர மூல வேரும், வீரியமான அமுக்குரா (அருவகந்தி) வடக்கு செல்லும் வேரும், குளிமீட்டான் என்னும் நத்தை சூரியன் சல்லி வேரும், மகனே நிலவிளா என்று கூறப்படும் குட்டி விளா மேற்கு செல்லும் வேரும் தேவையான பதினொன்னு மூலிகை வேர்களுக்கு சேர்க்கும் கடை மருந்தின் செய்தியை கூறுகிறேன் என்பதாகும்.

 

கேளடா பெருங்காயம் வசம்பினோடே கெடியான சித்தரத்தை வெள்ளை பூண்டு ஆளடா திப்பிலியுங் கிராம்பு தானும் அப்பனே ஜாதி பத்திரி யிஞ்சிதானும் சேரடா கடை மருந்து இரண்டு பங்கு செயமான வேர்வகை ஒவ்வொன்றாய் கொள்ளு வாரடா யிதின் குரு வென்றாய் கூட்டி மாட்டியே குட்டி விளாச்சாறு வாரே.

 

பொருள்:-

 

கூறுவது என்னவென்றால்

1. பெருங்காயம்

2. வசம்பு

3. நோய்கண்டிக்கும் சித்தரத்தை

4. வெள்ளைப் பூண்டு

5. ஆளும் மருந்தான திப்பிலியும்

6. கிராம்பு என்கிற இலவங்கமும்

7. சாதி பத்திரியும்

8. இஞ்சியும் ஆகும்.

கடை மருந்தானது மேலே கூறிய வேர்களின் எடைக்கு இரண்டு பங்கு எடுத்துக் கொள்ளவும். கடை மருந்துகளுக்கும் வேர்களுக்கும் குருமருந்தாகிய குட்டி விளா சாறு விட்டு அரைப்பாயாக.

 

வார்த்து நீ யறையடா அரைசாமந்தான் மைந்தனே குழம்பது போலாகுமுன்னே பார்த்து நீ வேலியின்றன் சாறுவிட்டு பாங்காக வரைச்சாம மறைத்து கொள்ளு சேர்த்ததுமே குன்றிக் காயளவு செய்து

திறமான அங்-உங்-சிங்-மங்-ஓம்-நமவென்று போற்றியே எடுத்தாக்கால் சித்தியாகும்

 

புத்திரனே யட்டமா சித்தியாச்சே

 

பொருள்:

 

குட்டி விளாசாறு விட்டு கையோயாமல் அரை சாமம் அரைக்கவும். அம்மருந்து குழம்பு பதத்தில் வரும் போது மீண்டும் சித்திர மூலம் சாறு விட்டு அரைசாமம் தொடர்ந்து அரைக்கவும். இப்படி அரைத்து வர சாறு வற்றி கெட்டியான பின் மருந்தை எடுத்து குண்டுமணியளவு குளிகையாக (மாத்திரையாக) செய்து கண்ணாடி சாடியில் போட்டு பாதுகாக்காப வைக்கவும். அதற்கு சிறிது மஞ்சள் நீர் தெளித்து விபூதி, மஞ்சள், குங்குமம் இட்டு பூசையறையில் வைத்து மலர் சூட்டி அம்மருந்து செயல்பட வேண்டி அதற்குரிய மந்திரமான “அங் – உங் – சிங்-மங்-ஓம்-நம” என்று இலட்சத்து எட்டு முறை செபிக்க வேண்டும். அதன்பின் மருந்து இறையருளால் செயல்பட்டு சித்தியாகும். இதனால் அட்டமா சித்திகள் பெறலாம்.

 

ஆச்சப்பா சிவகுளிகை ஒன்று சொன்னேன் அப்பனே நூல்களில் சொல்லவில்லை காச்சப்பா குளிகையுட கருவைச் சொன்னால் காணாம லோடுமடா பிணிகளெல்லாம் போச்சப்பா பிணிகள் முலைப் பாலிலிட்டால் பேரான முப்பத்திரண்டு தோடம் போகும் ஆச்சப்பா மாந்த மெலா மாண்டுபோகும் அப்பனே வேலியுட் சாற்றிற்போகும்

Read also: https://agriculture.vikaspedia.in

பொருள்:-

 

தாய்ப்பாலில் சிவகுளிகையை உரைத்து கொடுத்தால் பெரும் பேருடைய முப்பத்திரண்டு வித தோடங்கள் (குற்றங்கள்) போக்கும்.

 

சித்திர மூல சாற்றில் சிவகுளிகை உரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் அனைத்தும் அடிபட்டு மடிந்து மண்ணாய்ப் போகும்.

 

பெருமைக்குரிய இஞ்சிக் கிழங்கு சாற்றில் உரைத்து கொடுத்தால் முட்டு தோடம் என்பதும் குணமாகும்.

 

இதமான வெந்நீரில் சிவகுளிகையை உரைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் பெண்களால் வரும் குளிதோடம், பட்சி தோடம் பதினெட்டும் பறந்து விடும்.

 

பொதிகை மலையை இருப்பிடமாக கொண்ட அகத்தியர் சொன்ன மருத்தியல் முறைகள் தவறாது.

ஒருநாளும் உழைத்த பலன் வீண் போகாது. இந்த சிவகுளிகையை பார்த்த அன்பர்கள் அனுபவத்தில் கண்டால் எல்லாம் சித்தியாகும்.

 

கேளப்பா யெங்களிட குளிகைக்கெல்லாம் கிருபையாய் நொச்சிலை சாற்றிலோடும் வாளப்பா சன்னியோடு சயயிருமலுக்கு மைந்தா வேலியுட சாற்றிற்போகும் வாளப்ப கரப்பானுக் கெல்லாமைந்தா வளமான அமுக்குராச் சாற்றிற்போகும் ஆளப்பா குழந்தைகட்கு வந்த நோய்கள் அப்பனே குளிகையினாலடக்கலாமே.

 

பேரிரக்கம் கொண்டு உயிரிரக்கம் காட்டி நொச்சி இலை சாற்றில் உரைத்து பெரியோர்களுக்கு கொடுத்தால் உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.

 

மகனே சன்னி-ஈளை-இருமல்-சயம்-காசம் போன்ற நோய்களுக்கு சித்தர மூலச்சாற்றில் வெண்ணெய்க் கலந்து சிவகுளிகை உரைத்துக் கொடுத்தால் குணமாகும்.

 

வளமான வாழ்வு பெற அமுக்குரா சாற்றில் சிவகுளிகை உரைத்து கொடுத்தால் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.

 

சிறுகுழந்தைகளுக்கு வரும் அனைத்து நோய்களும் சிவகுளிகை ஒரு மருந்தே போதும். அதில் எல்லாம் அடங்கி விடும் என்பதாகும்.

பட்டதாரி மருத்துவர்கள் சித்த மருத்துவர்கள்

சித்த மருத்துவம் பயின்ற பட்டதாரி மருத்துவர்கள் பதிவு பெற்ற மருத்துவர்கள், பாரம்பரியமாக வரும் மருத்துவர்கள் இந்த மருந்து எளிய முறையில் கூறி இருப்பதால் சிவ குளிகை செய்து வைத்துக் கொண்டிருந்தால் எல்லா நோய்களும் உடனுக்குடன் குணமாகும்.

ஏதாவது ஓர் தெய்வ வழிபாடு செய்பவருக்கு எளிதில் கைக்கூடும். மருத்துவச் சிகிச்சையில் குணம் கண்டால் சமூகத்தில் நல்ல பெயரும் மதிப்பும், புகழும் உயரும்.

ஆனால், நவநாகரிக உலகத்தில் இம்முறை சிறிது சிறிதாக மறைந்து வருவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதற்கு அகத்தியரே துணை நிற்க வேண்டும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *