- சிவபெருமானின் வியர்வை துளிகளை தான் ருத்ராட்சை என்று அழைக்கின்றனர் நினைவாற்றலை அதிகரிக்கவும் சுய ஆற்றலை பெருக்கிக் கொள்ளவும் முனிவர்களும் இதை அணிந்து கொள்கின்றனர் சனாதான தர்மப்படி வாழ்க்கையில் உண்மையாக நடக்கும்
பக்தர்களுக்கு ருத்ராட்சை எல்லாம் வல்ல கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்பது தெரியும் அதை நாம் அணியும் போது அதில் உள்ள மின் காந்த ஆற்றல் உடலுக்குள் ஊடுருவி பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது
பல்வேறு வகை ருத்ராட்சங்களை
பல்வேறு விதமான ருத்ராட்சைகளிலன் செயல்பாடுகள் ஆற்றல் நன்மைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது
ஒரு முக ருத்ராட்ஷை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
இது சூரிய கடவுளால் ஆளப்படுகிறது அனைத்து முக ருத்ராட்சைகளின் அரசனாகவும் ஏகமுகி என்று கூறப்படுகின்ற ஒரு முக ருத்ராட்சை கருதப்படுகிறது
இந்த ருத்ராட்சையினால் தூய மனித உணர்வுகள் பிரதிபலிக்கிறது இதை அணிபவர்களுக்கு
போகம் மற்றும் மோட்சம் இரண்டும் கிடைக்கிறது இதை அணிந்தவர் ராஜபோகத்துடன் வாழ்வார் அவர் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஈடேறும் மற்றவர்கள் வியக்கும் அளவிற்கு தனித்து காணப்படுவார்
ஒரு முக ருத்ராட்சை மருத்துவத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் ஏற்றது நோயின் தன்மையை தெளிவாக அறியும் ஆற்றலும் அறுவை சிகிச்சையில் வெற்றி பெறும் வல்லமையும் கிடைக்கிறது இந்த ஒரு மக ருத்ராட்சைக்கு உரிய மந்திரம்
ஓம் ஹ்ரீம் நமஹ
இரண்டு முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
இரண்டு முக ருத்ராட்சம் சந்திர பகவானால் ஆளப்படுகிறது பார்வதி தேவியும் சிவபெருமானும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரரை இந்த ருத்ராட்சம் பிரதிபலிக்கிறது இதை அணிபவர்களுக்கு ஒற்றுமை உணர்வு கிடைக்கிறது குரு சிஷ்யன் உறவு பெற்றோர் குழந்தைகள் உறவு கணவன் மனைவி உறவு மற்றும் நண்பர்கள் உறவு சுமூகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது இந்த இரண்டு முக ருத்ராட்சைக்கு உரிய மந்திரம்
ஓம் நமஹா
மூன்று முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
மூன்று முக ருத்ராட்சம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது இது அக்னி பகவானை பிரதிபலிக்கிறது இதை அணிந்தால் துன்பம் நீங்கி இன்பம் கிடைக்கும் பாவங்கள் அல்லது அவர்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தூய்மையானவர்களாக மாறுவார்கள் தாழ்வு மனப்பான்மை பய உணர்வு குற்ற எண்ணம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் மூன்று முக ருத்ராட்சத்தை அணிந்தால் மேற்கண்ட பிரச்சனைகள் தீரும் மூன்று முக ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரம்
ஓம் கிலீம் நமஹா
நான்கு முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
நான்கு முக ருத்ராட்சம் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது இது பிரம்மக் கடவுளை குறிக்கிறது இதை அனுபவங்களுக்கு ருத்ராட்சையின் மகிமை கிடைக்கும் பொழுது உருவாக்கும் ஆற்றல் கண்டிப்பாக கிடைக்கும் மாணவர்கள் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் மேதைகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் ருத்ராட்சம் நான்கு முக ருத்ராட்சமாகும்
நான்கு முக ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு நினைவு ஆற்றல் அதிகரிக்கும் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் நுண்ணறிவு அதிகரிக்கும் நான்கு முக ருத்ராட்சத்தை மூன்று எடுத்து வலது கையில் அணிந்து இருந்தால் அவரை எதிர்த்து எவரும் வாதிடுவது சிரமமாகும் இந்த நான்கு முக ருத்ராட்சத்துக்கு உரிய மந்திரம்
ஓம் ஹிரீம் நமஹா
ஐந்து முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஐந்து முக ருத்ராட்சத்தினுடைய மகிமைகள் ஐந்து முக ருத்ராட்சம் வியாழன் கிரகத்தால் ஆளப்படுகிறது இது சிவபெருமானை குறிக்கிறது மங்களகரத்தின் அடையாளமாக இது உள்ளது ஐந்து முக ருத்ராட்சத்தை மாலையாக அணிந்தால் உடல் நலம் நல்லபடியாக ஆரோக்கியம் மேம்படும் ஐந்து முக ருத்ராட்சத்தை மாலையாக அணியும்பொழுது மனதில் அமைதி ஏற்படும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
இருதய நோயை குணப்படுத்தும் மந்திர ஜபங்களுக்கு இதை பயன்படுத்தலாம் இதை அணிபவர்களுக்கு மன அமைதி ஏற்படும் இதை அணிபவர்கள் அகால மரணத்தை சந்திக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது 5 முக ருத்ராட்சத்தின் மந்திரம்
ஓம் ஹிரீம் நமஹா
ஆறுமுக ருத்ராட்சம் அணிந்தால் கிடைக்கும் நன்மைகள்
ஆறுமுக ருத்ராட்சம் சுக்கிரன் கிரகத்தால் ஆளப்படுகிறது இது சிவபெருமானின் இரண்டாவது புதல்வரான முருகக் கடவுளை குறிக்கிறது இதை அனுபவர்களுக்கு அறிவு நுண்ணறிவு அதிகரிக்கும் மன உறுதி நிலையான மனம் கிடைக்கும்
பணியில் தமக்கு மேல் உள்ள அதிகாரிகள் தொழிலதிபர்கள் நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் செய்தி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு இது அனுகூலமாக இருக்கும் புற பாலு உறுப்புகளை இந்த ருத்ராட்சம் ஆழ்வதாக நம்பப்படுகிறது இதை வலது கையில் அணிய வேண்டும் இந்த ஆறுமுக ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரம் ஓம் ஹ்ரீம் ஹீம்
ஏழுமுக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஏழு முக ருத்ராட்சம் சனீஸ்வர கிரகத்தால் ஆளப்படுகிறது இது மகாலட்சுமி என்கின்ற அம்மனின் அருளை குறிக்கிறது ஏழு முக ருத்ராட்சம் மகாலட்சுமி அம்மனின் அம்சமாகவே நம்பப்படுகிறது இதை அணிபவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் உடல் சார்ந்த தொல்லைகள் மனம் சார்ந்த குழப்பங்கள் மன உளைச்சல் பண பிரச்சனைகள் நீங்கும்
வியாபாரம் மிக செழிப்பாக இருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் நீங்கள் எந்தப் பணியில் இருந்தாலும் அந்த பணியை சிறப்பாக செய்கின்ற சூழ்நிலைகள் ஏற்படும் இதற்கு உரிய மந்திரம்
ஓம் ஹும் நமஹா
எட்டு முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
எட்டு முக ருத்ராட்சம் எந்த ருத்ராட்சம் விநாயகர் கடவுளை குறிக்கிறது எந்த ருத்ராட்சம் ராகு கிரகத்தால் ஆளப்படுகிறது தடைகளை நீக்கி ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறது மிகப்பெரிய சக்தி மிகப்பெரிய வெற்றி போன்ற குறிக்கோளை அடைவதற்கு இந்த ருத்ராட்சம் வழிவகை செய்கிறது இந்த ருத்ராட்சம் எதிராளிகளின் மனதை எதிர்ப்புத்தன்மை இல்லாமல் மாற்றும் வல்லமை கொண்டது இந்த ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரம்
ஓம் ஹீம் நமஹா
ஒன்பது முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஒன்பது முக ருத்ராட்சம் கேது கிரகத்தால் ஆளப்படுகிறது எந்த ருத்ராட்சம் துர்க்கை அம்மனின் சக்தியை குறிக்கிறது இதை அணிவதால் துர்க்கை அம்மனின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் எந்த ருத்ராட்சத்தை அணிவது வெற்றிக்கு வழிவகுக்கும் ஆற்றல் தனித்துவம் பயமின்மை போன்ற வல்லமை ஏற்படும் இடது கையில் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும் இந்த ஒன்பது முக ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரம்
ஓம் ஹும் நமஹா
பத்து முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
இந்த பத்து முக ருத்ராட்சம் எந்தக் கிரகத்தாலும் ஆளப்படவில்லை ஆனால் ஒரு மனிதருக்கு கெடுதல் விளைவிக்கின்ற கிரகங்கள் எத்தனை இருக்கிறதோ அத்தனை கிரகங்களுடைய எதிர்மறை தன்மைகளை மட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் எந்த 10 முக ருத்ராட்சத்திற்கு இருக்கிறது அத்தகைய தன்மை உடைய இந்த ருத்ராட்சம் பத்து அவதாரங்களையும் 10 திசைகளையும் ஆளும் தன்மையுடையது ஒருவரின் உடலை பாதுகாக்கும் கவசமாகவும் தீய சக்திகளை விரட்டும் ஆயுதமாகவும் இந்த ருத்ராட்சம் இருக்கிறது
சாத்தானின் ஆதிக்கம் பேய்கள் சூனியம் இவற்றில் இருந்து பாதுகாக்கும் சக்தி இந்த 10 முக ருத்ராட்சத்திற்கு உண்டு. மகாவிஷ்ணுவின் ஆசியோடு இந்த 10 மக ருத்ராட்சத்தை அணியலாம் இதை அணிவதால் எந்தவிதமான செயலிலும் முழுமையாக ஈடுபட்டு அந்த செயல்களில் வெற்றியை பெற முடியும் பக்திக்கும் மிக உயரிய தியானத்திற்கும் இந்த 10 முக ருத்ராட்சம் உதவும் இந்த 10முக ருத்ராட்சத்தின் மந்திரம்
ஓம் ஹிரீம் நமஹா
பதினோறு முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
இந்தப் பதினோரு முக ருத்ராட்சம் ஹனுமன் கடவுளை குறிக்கிறது இந்த 11 முக ருத்ராட்சத்தை அணிந்தால் அறிவு சரியான தீர்ப்பு கவர்ந்திழுக்கும் பேச்சுத்திறன் சாகசம் செய்யக்கூடிய அளவிற்கு வெற்றிகரமான வாழ்க்கை தகல விதமான காரியங்களிலும் வெற்றி இவை எல்லாம் கிடைக்கும் விபத்து மூலம் ஏற்படும் மரணத்தை தடுக்கும் இந்த 11 முதல் ருத்ராட்சத்தை அணிவதால் பயமில்லாமல் மனதில் அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்
இந்த பதினோரு முக ருத்ராட்சத்திற்கு உண்டான மந்திரம்
ஓம் ஹிரீம் ஹும் நமஹா
பன்னிரண்டு முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
12 முக ருத்ராட்சம் சூரிய கடவுளை குறிக்கிறது இந்த 12 முக ருத்ராட்சத்தை அணிவதால் எல்லையில்லாத நிர்வாகத் திறமை கிடைக்கும் சூரிய கடவுளின் ஆற்றல் கிடைக்கும் தகுதியான பலமும் திறமையான வழிநடத்தக்கூடிய திறமையும் கிடைக்கும் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் நிர்வாகத்துறையில் உயர்ந்த அந்த செல் உள்ளவர்கள் தொழிலதிபர்கள் நிர்வாகிகளுக்கு இது மிகவும் உகந்தது அதிசயமான விளைவுகளை ஏற்படுத்தும் கழுத்துப் பகுதியில் அணிவது மிகவும் சிறப்பானது இந்த பன்னிரண்டு முக ருத்ராட்சத்திற்கு உண்டான மந்திரம்
ஓம் க்ரோன் ஷ்வோன் ரோன் நமஹா
பதிமூன்று முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
13 முக ருத்ராட்சம் இந்த ருத்ராட்சம் இந்திர கடவுளை குறிக்கிறது
இந்த 13 முக ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு அவர்கள் ஆசைப்பட்டது அனைத்தும் நடக்கும் செல்வம் செல்வ வளம் கவுரவம் இவை அனைத்தும் இந்த பூமியில் கிடைக்கும் அனைத்து வளங்களும் கிடைக்கும் அஷ்டமா சித்திகளையும் அடக்கி ஆள முடியும் காம தேவனின் ஆசிர்வாதம் கிடைக்கும் உலக ஆசைகளை காமதேவன் நிறைவேற்றுவார் இந்த பதிமூன்று முக ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரம்
ஓம் ஹிரீம் நமஹா
பதிநான்கு முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
14 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் இந்த ருத்ராட்சத்தை தேவ மணி என்று அழைக்கப்படுகிறது இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிதானது இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் ஆறாவது அறிவை பயன்படுத்த வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை அறியும் திறமை என்பது கிடைக்கும்
அவர்கள் எடுக்கும் முடிவுகளில் தோல்வி என்பதே கிடையாது 14 முக ருத்ராட்சத்தை யார் அணிகிறார்களோ அவர்களுக்கு பேரழிவு துன்பம் கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் நல்ல பாதுகாப்பு மற்றும் வளமையான வாழ்க்கை என்பது கிடைக்கும் முன் நெற்றி அல்லது கைகளில் அணிய வேண்டும் இந்த 14 முக ருத்ராட்சத்திற்கு உண்டான மந்திரம்
ஓம் நமஹா ஸ்ரீகெளரி சங்கர் ருத்ராட்ஷை நமஹா
கெளரி சங்கர் ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

இயற்கையாகவே இணைந்த இரண்டு ருத்திராட்சைகள் கௌரிசங்கர் ருத்ராட்சை என்று கூறப்படுகிறது சிவன் பார்வதியின் ஒருங்கிணைந்த தோற்றத்தை இந்த ருத்ராட்சம் குறிக்கிறது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிந்து கொள்ள மனம் விட்டு பேச இந்த ருத்ராட்சம் உதவுகிறது குடும்பத்தில் அமைதி குடும்பத்தில் மேம்பாடு அதிகரிக்கிறது
இந்த ருத்ராட்சத்தை வைத்து வழிபடும் இடத்தில் கௌரிசங்கர் ருத்ராட்சை வைத்து எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாவிதமான துன்பங்களும் ஈடுபட்டு அவரது குடும்பத்தில் அமைதி மற்றும் சந்தோஷம் கிடைக்கும் இந்த கெளரி ஷங்கர் ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரம்
கெளரி ஷங்கராய நமஹா ஓம் நமஹா
ஸ்ரீகணேஷா ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஸ்ரீ கணேசா ருத்ராட்சை எனப்படுகின்ற இந்த ருத்ராட்சம் மிகவும் விசேஷமான தன்மைகள் உடையது விநாயகருடைய முகத்தில் இருக்கும் தும்பிக்கை போன்ற வடிவில் இந்த ருத்ராட்சம் காட்சி அளிப்பதால் இந்த ருத்ராட்சத்திற்கு கணேசா ருத்ராட்சை என்று பெயர் வந்தது இந்த ருத்ராட்சம் அணிபவர்களுக்கு விநாயகருடைய முழுமையான அருள் கிடைத்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெறுவார்கள்
ஸ்ரீ கணேசா ருத்ராட்சைக்கு உரிய மந்திரம்
ஓம் கணேஷாய நமஹா ஓம் நமஹா
மிகவும் விசேஷமான இந்த சிவனின் சொத்து என்று கூறப்படுகின்ற ருத்ராட்சை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி…