பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்
“பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்” – எனது வழிகாட்டும் குருநாதர் மிஸ்டிக் செல்வம் சித்தர் அவர்களிடம் நான் சில ஆன்மிக விசயங்களை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, பைரவர்களைப் பற்றி மிகப் பெருமையாக அடிக்கடி கூறுவார். பல்வேறு ஆலயங்களில் அருள்பாலிக்கும் பைரவர்களை பற்றி கூறி இருந்தாலும், “பஞ்ஜேஷ்டி” பைரவரைப் பற்றி ரொம்ப ஆர்வமாகவே சொல்லி இருக்கிறார்.
என்னை பொறுத்தவரையில், ஸ்ரீ அண்ணன் சாமிகளை குருவாக ஏற்று கொண்டதற்கு பிறகு, வேறு ஆலயங்களுக்கு செல்வது கிடையாது. ஆகவே, மிஸ்டிக் செல்வம் சித்தர் அவர்களை அடுத்தடுத்து சந்தித்தபோது ”பஞ்ஜேஷ்டி பைரவரை ” பார்த்தீர் களா? என்றுகேட்பார் நானும் இல்லைங்க அய்யா…
போகனும்… நேரம் கிடைக்கலைங்க… என்பேன்.
ஸ்ரீ அண்ணன் சாமிகளை தவிர வேறுயாரையும் வழிபட மாட்டேன் என்பதை புரிந்து கொண்ட அவர், பைரவர் வழிபாடு சாதாரன வழிபாடு அல்ல. முழுமையான திருவருளும், குருவருளும் நிரம்பியவர்களுக்கு, பைரவரின் அருள் பார்வையும் கிடைத்தால் தான் வழிபட முடியும். ஸ்ரீ அண்ணன் சாமிகளது திருவருளால், என்றாவது ஒரு நாள் அந்த பைரவரே உன்னை “எடுத்தாட் கொண்டு அருள் புரிவார்” என்று கூறினார்.
பலவருடங்கள் ஆகியும் ”பஞ்ஜேஷ்டி” பைரவரை காண நான் செல்ல வில்லை, ஆயினும் மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியபிறகும் என்னால் போக இயலவில்லையே, என்கிற உறுத்தல் என்னுள் இருந்தது. ஆயினும், பைரவரே அழைத்து அருள்பாலிப்பார் என்று இருந்தேன்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிஸ்டிக்செல்வம் அவர்களால் துவக்கப்பட்ட “மிஸ்டிக் இந்தியா மிஷின்” மேனேஜிங் டைரக்டர் அருளாளர் திரு.பி.பாலகிருஷ்ணன் அவர்கள் வருகிற தேய்பிறை அஷ்டமி அன்று பஞ்ஜேஷ்டி பைரவருக்கு வெள்ளி காப்பு செலுத்தும் நிகழ்ச்சியும் அஷ்டமி பூஜையும் நடைபெற இருக்கிறது.
நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார். என் மீது மிகுந்த அன்பு செலுத்தி பல ஆலோசனைகளை
வழங்கும் அருளாளர் திரு. பி.பாலகிருஷ்ணன் அவர்களிடம் நான் கடந்த பல வருடங்களாக அலுவல் காரணமாக தொடர்பு கொள்ளவில்லை என்பதும், இவர் பால பைரவர் உபாசனை பெற்று, “பைரவரின் பாலன்” என்று மிஸ்டிக் செல்வம் அவர்களால் அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது. ஆகவே, திடீரென எனக்கு பைரவரின் பாலனிடம் இருந்து அழைப்பு வந்ததால், எனது சற்குருநாதர்களது அருள் கடாட்ஷத்தால் ‘பைரவரே” வரச்சென்னதாக நினைத்து. மிகுந்த ஆவலுடன் நானும், பேசும் தெய்வம் மாத இதழின் நிர்வாக ஆசிரியர் திரு.ஏ.இசக்கி முத்து அவர்களும் ஆலயத்துக்குச் சென்றோம்.
நிறைய அற்பு
தங்களும், அதிசயங்களுடன்
கூடிய அருள் நிறைந்த திருத்தலம்.
சுகேது என்ற அரக்கனும், அவனுடைய குடும்பத்திற்கும் ஏற்பட்ட சாபத்தை போக்கிட தேவயாகம், பிரம்ம யாகம், பூத யாகம், பிதுர் யாகம், மானுட யாகம் ஆகிய ஐந்து யாகங்களை செய்து அகத்திய மகா முனிவரால் சாபம் போக்கிய இடம் என்பதால் பஞ்ஜேஷ்டி (பஞ்ச = ஐந்து- இஷ்டி =யாகம்) என்று இத்தலம் பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தின் திருக் குளத்தீர்த்தம் அகத்திய மகா முனிவர் தனது உமிழ்நீரால் உருவாக் கப்பட்டதாகவும், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பௌர்ணமி தினத்தில் கங்கை சங்கமம் ஆவதாகவும் நம்பப்படுகிறது. பல்வேறு நோய்கள் தீரவும் தோஷங்கள் அழியவும் இத் திருக்குளத்தில் நீராடினால் உடனடியாக பலன் கிடைப்பதால், இத் திருக்குளத்தின் சிறப்பை உணரமுடிகிறது. மேலும் இந்திரன், இந்திராணி, விஸ்வரூபன் போன்ற தேவர்கள் அகத்திய முனிவருடன் பஞ்ஜேஷ்டியில் தங்கியிருந்து பிரதோஷ பூஜைகள் செய்து, பிரதோஷ விரதத்தை கடைபிடித்ததால் அகத்திய முனிவரால் அவர்களுக்கு சாபவிமோசனம் கிடைத்தது.
காஞ்சிபுரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மித்ரத்வஜன் என்ற மன்னன் சிறந்த சிவ பக்தன். ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் | தவறாமல் பஞ்ஜேஷ்டி தலத்திற்கு வருகை தந்துபிரதோஷ தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அந்த மன்னனுக்கு ஒரு பிரதோஷ காலத்தில், அவர் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வதற்கு நோக்கிவந்து கொண்டிருக்கும் போது வரும் வழியில் புலியின் உருவில் சிவபெருமான் சிறு நாடகம் நடத்தி பின்னர் புலி மறைந்து ரிஷ்யாரூடர் கோலமாக சிவனும் பார்வதியும் காட்சியளித்து பிரதோஷ மகிமைகளையும் பெருமைகளையும் அவருக்கு உணர்த்திணார்.
புலிமறைந்து சிவனாக காட்சியளித்த இடம் இன்றளவும் திரு விலங்கேஷ்வரர் என்ற பெயரில் சிவன் ஆலயமாக அமைந்துள்ளது. பஞ்ஜேஷ்டி
Read Also: https://navashakthibaba.in/18-siddhar-temples-in-chennai/
அகத்தியர் சீடரின் ஜீவசமாதி
இந்த ஆலயத்தின் வடக்கு மூலையில் அகத்தியரது சீடர் புலத்திய முனிவர் இஷ்டலிங்கம் என்ற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இங்கேயே புலத்திய முனிவரது ஜீவசமாதி இருப்பதாகவும், மிஸ்டிக் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
பச்சை மரகதத்தால் ஆன திருமேனியுடனும், மூன்று கண்களுடனும் காட்சியளிக்கும் அம்பாள், தனது இடது பாதத்தை முன் வைத்து, அசுரசக்திகளை அழிக்கவே அகத்தியரின் வேண்டுகோளுக்கினங்க சத்ருசம்ஹார கோலம் எடுத்துள்ளார். இந்த ஆலயத்தில் “பைரவ பாலன்” திரு பி.பாலகிருஷ்ணன் முன்நின்று நடத்திய தேய்பிறை அஷ்டமியின் பைரவ மஹா பூஜை சர்வகிரஹ தோஷங்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தது.
இவ்வளவு அற்புதங்களும், அதிசயங்களும்ஸநிறைந்த பஞ்ஜேஷ்டி பைரவரை வழிபட்டால் உங்களது வாழ்வில் பல்வேறு அதிசயங்களும், அற்புதங்களும் நிகழும். எதிரிகள் அழிந்து கிரகதோஷங்கள் ஒழியும் என்பது கண்கூடான உண்மை.
சென்னைக்கு வடமேற்கே, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 28வது கிலோ மீட்டர் தொலைவில், “பஞ்ஜேஷ்டி” பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து கிழக்கில் சுமார் 200 மீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது. பேசும் தெய்வம் மாத இதழின் ஆசிரியர்
து.செல்வகுமார்.
Also Read: https://navashakthibaba.in/are-you-longing-to-build-a-house/
விஷ்ணுவும் சிவனும் சேர்ந்த கேசவ மூர்த்தி
கேசவ மூர்த்தி:
அர்த்தநாரீச்வரன் என்று சிவனும் சக்தியும் சேர்ந்த உருவம் ஒன்று உண்டல்லவா? அதைப்போலவே விஷ்ணுவும் சிவனும் சேர்ந்த உருவம் இருப்பதைதான் கேசவார்த்த மூர்த்தி என்றார்கள். கேசவன் என்றால் மகாவிஷ்ணு, அர்த்த என்றால் பாதி சக்தியை சிவன் இடப்பாகத்தில் கொண்டான். விஷ்ணுவை வலப்பாகத்தில் கொண்டான். இதை சங்கரநாராயனன் ஹரிஹரன் என்றெல்லாம் கூறுவார்கள்.
மஹா விஷ்ணு பரமசிவனை குறித்துக் கடுந்தவமியற்ற சிவன் தோன்றி யாது வரம் வேண்டும்? எனக்கேட்க மாயம் புரியும் சக்தி அருள வேண்டும். என பிரார்த்தித்து பெற்று மாயவன் ஆனார்.
ஒரு தடவை உமையில் தவத்தை நேரில் காண விஷ்ணுவை பெண் உருவெடுக்கச் செய்து உடன் அழைத்துவந்தார். சிவபெருமான் ஒரு வேதியர் வடிவமும் விஷ்ணு பார்வதி வடிவமும் ஏற்றதால் பார்வதி சிவனின் பாதி என்பதால் கேசவார்த்தி ஆனார் என்பது ஒரு புராணம்.
விஷ்ணு சிவனின் வலப் பாகத்தில் செந்நிறம் கொண்டு, மழுஅபயம் காட்டி, இடப்புறம் சக்கரம்- வரதம் காட்டி, ஒரே உடலாகக் காட்சி அளிப்பதே இம் |மூர்த்தம் என்றும் கூறுவார்கள்.
இவ்வளவு எதற்கு? சிவன், விஷ்ணு, பராசக்தி என்பவர்கள் ஏதோ தனித்தனி தெய்வம் அல்ல; ஒரே பரம்பொருள்தான் என்பதைப் போதிக்கத்தான். இதை உணராமல் ‘என் தெய்வம் உயர்ந்தது, உன் தெய்வமும் தாழ்ந்தது’ என்று சண்டையிட்டுக் கொள்வது அறியாமை.
தேவாரமும் திருநாவுக்கரசரும்
காசிக் கலம்பகமும்
திருநாவுக்கரசர், தேவாரம், இரட்டைப் புலவர் பாடலிலும், காசிக் கலம்பகம், ஆகம சாத்திரம், சைவ புராணம், ஆனந்தலகிரி, சௌந்தர்யலகிரி போன்ற பல நூல்களிலும் இந்த விவரங்களைக் காணலாம்.
சிற்பங்களில் மிகப் பழமையானது மகாபலிபுரத்தில் உள்ளது. தெற்கே மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே சங்கர நாராயணன்
கோயில் உள்ளது. கர்நாடகப் பிரதேசத்தில் ஹரிஹரன் என்ற ஊர் உள்ளது.
பிட்சாடன மூர்த்தி
தாருகாவனத்து முனிவர்கள் சிறந்த தவம் புரிந்து கொண்டு வாழ்ந்தனர். கொஞ்சங் கொஞ்சமாக அவர்களுக்குக் கர்வம் முளைத்து விட்டது. தங்களைவிட தவத்தில் சிறந்தவர்கள் யாருமே இல்லை. தங்கள் மனைவியர்களை விட உத்தம பத்தினிகள் உலகிலேயே இல்லை என்ற எண்ணம் புகுந்து கொண்டது. கர்வம் பிடித்தபிறகு தவசீலர் என்று எப்படிக் கூறமுடியும்? இதை உணரச்செய்ய சிவபெருமான் ஒரு உபாயம் செய்தார்.
மகாவிஷ்ணுவை அழைத்து மிக அழகிய மோகினி உரு எடுக்கச் செய்து, தான் சுந்தரத் திருமேனி கொண்ட பிச்சை எடுக்கும் பெருமானாக மாறி, தருகாவனத்து முனிவர்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்தார்.
கையில் ஓலம், பிச்சை ஏற்க கபாலம், ஆடையற்ற மேனி, கண்களைக் கவரும் அழகு இதுவே கோலம்.விஷ்ணுவின் அழகிய மேனி கண்டு முனிவர்கள் அறிவிழந்தனர். தவநெறி கலைந்தது. அவநெறி புகுந்தது, காமவெறி பொங்க அப்பெண்ணைப் பின்தொடர்ந்தனர்.
வீதியில் புகுந்த சிவ திகம்பரனோ பண்ணோசை ஒலிப்ப, முனிவர் மனைவியர் வெளிவந்து, இவர் அழகில் மயங்கி, வசமிழந்து, தங்களைத் துறந்தனர். சிலர் இவரை அணைக்க முயன்றனர், சிலர் பிச்சை யிட்டனர், பலர் கலைய விழ்ந்தனர்.
இந்த திரு விளையாடலை முனிவர்கள் உணர்ந்தனர். இம்மாயத்தால் தம் தவநெறியும், மனைவியர் கற்பும் கெட்டதே எனக் கோபங்கொண்டனர். இந்நாடகம் நிகழ்ந்தது திருத்தெளிச்சேரி என்பார். ஒரு அபிசார வேள்வி தொடங்க, அதிலிருந்து கிளம்பிய புலி, பாம்பு, முயலகன் இவர்களைப் பிரயோகிக்க, அவைகளைக் கொன்றும், அணிந்தும் அடக்கினார் சிவன்.
இப்படித் திகம்பரனாய் பிச்சை எடுக்கப் புறப்பட்ட கோலமே பிச்சாடனராகும். தாருவதக்கிரிடா விலாசம், காஞ்சி புராணம் இக்கதையை விவரிக்கின்றன.
வழுவூரில் பிட்சாடனர் உலோகப் பிம்பம்உலகப் பிரசித்தி பெற்றது. சாதாரணமாக எல்லாப் பெரிய சிவாலயங்களிலும் இம்மூர்த்தி உண்டு. பிரும்மோற்சவத்தின் போது ஒரு நாள் இவருக்கு தனி விழா நடத்துவார்கள். திருவீதி உலா உண்டு
சிம்மக்ன மூர்த்தி
இரண்யகசிபு என்ற ஒரு அசுரன். சுக்கிராசாரியரின் ஆணைப்படி, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி, ஐம்பூதங்கள், ஆயுதங்கள், வானவர், மானுடர், பறவை, விலங்கு. பகல், இரவு இவைகளினால் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றுக் கொண்டு விட்டான்.
ஏற்கனவே அசுரகுலம், வரம் வேறு பெற்றாகிவிட்டது. கேட்க வேண்டுமா இவன் கொடுமைக்கு? அரம்பையர். சித்த மாதர்களைச் சாமரம் வீசப் பணித்தான். இந்திரன், பிரமன் போன்றவர்களைப் பணிபுரியச் செய்தான். வழக்கம் போல் தேவர்கள் மகாவிஷ்ணு விடம் முறையிட்டார்கள்.
மகாவிஷ்ணு தன் அம்சம் ஒன்றை இரண்யன் புதல்வனாக அவதரிக்க அனுப்பினார். அவனுக்கு ஐந்து வயது வந்ததும் பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளியில் இதுவரை ‘இரண்யாய நம’ என்றுதான் பாடம் தொடங்குவார்கள். ஆனால் இந்த சிறுவனோ ‘நாராயணாய நம’ எனக் கோஷமிட்டு .ஆரம்பித்தான். வினை ஆரம்பமாகிவிட்டது. இரணியனுக்கு இச்செய்தி எட்டி தண்டனைகள் பல புரிந்தும் பயனில்லை.
இரணியன் தன் மகனை நோக்கி ‘நீ கூறும் நாராயணன் எங்கு இருக்கிறான்?’ எனக் கேட்க, பிரகலாதன், ‘இறைவன் எங்குமுளன், துரும்பிலும், இத்தூணிலும் உள்ளான். எனச் சொல்ல, இரணியன் தூணை உதைக்க, விஷ்ணு, நரசிங்கமாக வந்து, அவன் உடலைப் பிளந்து மாலையாக அணிந்து தேவர்களை காத்தார்.
இத்துடன் நிற்கவில்லை. உதிர வெறி கொண்ட நரசிங்கம் தேவர் உலகையே நாசமாக்க, தேவர்கள் இப்பொழுது சிவனிடம் ஒடினார்கள். இரு சிரம், சிறகு, கூரிய நகம், எட்டுகால்கள், நீண்ட வால் கொண்ட சரபத் திருஉவேற்று, பெரிய சத்தம் இட்டு, நரசிங்கத்தின் மீது பாய்ந்து, கைகளையும் சிரத்தையும் பறித்துத் தள்ளி, மேலே உட்கார்ந்துஅதன் தோலைப் பறித்து, போர்வையாக்கிப் போர்த்திக் கொண்டு விட்டார் சிவன். தேவர் துயரம் தீர்ந்தது.
இப்புராணம் ஒரு கருத்தைப் போதிக்கிறது. ஒவ்வொரு இனத்தவரும் தங்கள் தங்கள் கடவுளே உயர்ந்தவர் எனக் கூறிக் கொள்கின்றனர். அதற்கேற்பப் புராணங்களையும் .படைத்துக் கொள்கிறார்கள். விஷ்ணு பெரியவர் என்பதற்கு நரசிங்கம் ஏற்பட்டது. அதைவிட சிவன்தான் சிறந்தவர் எனக்காட்ட சரபம் ஏற்பட்டது. வைணவர் பார்த்தனர், அதற்கு மேல் ‘கண்டபேரண்டம்’ என்ற ஒன்றைப் புகுத்தினார்கள்!
தங்கள் தெய்வம் மிக உயர்ந்தது என்ற நம்பிக்கை இருந்தால் தான் அதன்மேல் தீவிர பக்தி ஏற்படும் என்பதற்காக எற்பட்ட கதைகளே இவைகள். எது உண்மையில் சிறந்தது என்று ஆராய்வதற்கு அல்ல!
இச்சரப மூர்த்தியைப் பற்றி ருக் வேதத்திலேயே புகழ்ச்சி உள்ளது. தைத்ரியம் (சுருதி) ஸ்காந்தம், காசி காண்டம், பிரும்மாண்ட புராணம், நரசிம்ம புராணம், காஞ்சி புராணம் போன்ற நூல்களில் இப்புராணம் கூறப்படுகிறது.
கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ள திரிபுவனம் என்ற தலத்தில் மூல மூர்த்தி சரபேஸ்வரரே. இங்கு அதன் செப்புத்திருமேனி உள்ளது. தாராசுரத்து ஐராவதேச்வரர் கோயிலில் தெற்குப் பிரகாரத்தில் ஒரு பெரிய மாடத்தில் இதன் கல் சிற்பம் திருவண்ணாமலை ஆலயத்தில் பல இடங்களில் உள்ளன. இது போசாளர், விசய நகரத்தாரின் முத்திரையாக விளங்கியது.
பக்தனுக்கு அட்சயபாத்திரம் வழங்கிய ஓதனவனேஸ்வரர்
அன்பே சிவம் என்பார்கள். சிவன் பக்தர்களுக்காக நிகழ்த்திய திருவிளை யாடல்கள் எண்ணில் அடங்காதது.
‘சோழ நாடு சோற்றடைத்து’ என்ற திருவாக்குக்கிணங்க விளங்கும் திருவூர், திருசோற்றுத்துறை ஆகும். இந்த திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் அமைந்துள்ளது. தூரத்தில்
இங்கு அருளாட்சி புரியும் இறைவனின் திருநாமம் ஓதனவனேஸ்வரர் என்பதாகும். ஓதனம் என்றால் அன்னம் என்றும் பொருள்.சோறு (அன்னம்) என்றால் உண்ணும்சோற்றையும், மற்றொரு பொருளாக பேரின்பம் (முக்தி) என்ற தரக்கூடியது. இங்குள்ள அம்பாள் அன்னபூரணி என்ற திருப்பெயருடன் அருள் புரிந்து வருகிறார். பொருளையும்
சிறப்பு வாய்ந்த காசி தலத்திற்கு பிறகு அம்பாள் இங்கு தான் அன்னபூரணியாக இருந்து,
அட்சயபாத்திரம் கொடுத்து அருள் பாலிக்கிறார். சுவாமி சுயம்பு மூர்த்தியாக – அருள் ஆசி வழங்குகிறார்.
இந்த கோவில் இறைவனின் • திருவிளையாடல் சிறப்பு மிக்கது ஆகும். • ஒருமுறை நாட்டில் கடும் பஞ்சம் 5 ஏற்பட்டது. அப்போது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். அவ்வூர் மக்களும் பசியால் துடிப்பதை கண்டு வருந்திய அருளாளன், ‘நீ இருக்கும் இடத்தில் இப்படி மக்கள் பசியால் வாடவிடலாமா? இது என்ன நியாயம்?’ என்று – முறையிட்டார்.
சிவபெருமானிடம்பசி கொடுமையால் கோவில் அர்ச்சகரும் பூஜை செய்ய வருவதை நிறுத்திக் கொண்டார். தினமும் மாலை நேரம் ஒரு விளக்கை மட்டும் ஏற்றி வைத்த ஊழியனும் கீழே விழுந்து காயமடைந்து விளக்கு வைப்பதையும் நிறுத்திவிட்டான்.
கோவில் விளக்கு ஒளி இல்லாமல் இருட்டில் சுவாமி இருப்பதை கண்ட அருளாளன், திடீரென கோவில் வாசல்படியில் மோதி அழுதான். இதனைக் கண்டதும் இறைவன் திருவுறுளம் இரங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்து ஊரே வெள்ளக்காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அதை அருளாளன் கையில் எடுத்தான்.
உடனே, ‘அருளாளா? இது அள்ள… அள்ள அன்னம் குறையாத அட்சயபாத்திரம். இதை வைத்து நீ அனைவருக்கும் அன்னம் கொடு’ என்று அசரீரி ஒலித்தது. அருளாளன் அந்த பாத்திரத்தை கையில் வைத்து ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக கொடுத்து மக்களின் பசியை தீர்த்தான். ஒரு பக்தனுக்காக இறைவன் செய்த அருள் ஊர்மக்கள் அனைவரது உயிரையும் காத்தது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னாபிஷேக விழா சிறப்பு வாய்ந்தது ஆகும். இதில் ஏராளமான கலந்துகொள்வார்கள். பக்தர்கள் இந்த அன்னாபி.ஷேக விழா சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.திருசோற்றுத்துறை ஓதனவேஸ்வரர் கோவிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. தல தீர்த்தம் காவிரி, காவிரி தென்கர தலங்களில் 13வது தலமாக இந்த திருசோற்றை திருத்தலம் விளங்குகிறது. இங்குள்ள சுவாமியை, திருஞான சம்பந்தர், திருநாவுகரசர், திருசுந்தரர் ஆகிய மூன்று அடியார்களும் தரிசித்து மனம் மகிழ்ந்து கவி பாடியுள்ளார்.
திருச்சோற்றுத்துறை இறைவன் தன்னை
வழிபடும் அடியார்களின் பசிப்பிணி தீர சோறு வழங்குபவன் என்றும், உயிர்களின் பிறவிப்பணி தீர வீடுபேறு (முக்தி) தருபவன் என்றும் போற்றப்படுகிறான்.
திருச்சோற்றுத்துறை இறைவனை பிரம்மா, மகா விஷ்ணு, இந்திரன், கவுதம் மகிரிஷி, சூரியன், அருணகிரிநாதர், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் செய்ய. வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது ஆனால் அந்த இடத்தில் சிறிதளவு கூட தண்ணீர் என்பதே இல்லை அகஸ்து என மனதை அறிந்த சிவன் தனது தலையில் இருந்து கங்கை நீரை அந்த இடத்தில் ஓட விட்டார் அந்த நீர் தீர்த்தமாக அங்கு தேங்கியது இந்த தீர்த்தம் தான் ஜடா கங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோவிலுக்கு அருகில் உள்ளது பின்னர்
அந்த நீரை எடுத்து அகஸ்தியர் ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழங்கினார் அபிஷேகம் முடிந்ததும் சிவனுக்கு படைக்க பழங்கள் இருக்கிறதா என்று தேடினார் அகஸ்தியர் அதனையும் அறிந்த சிவன் அருகில் இருந்து பனை மரத்திலிருந்து கனிகளை உதிரச் செய்தார் அதனை சுவாமிக்கு படைத்து வழிபட்டார் பனங்காட்டில் எழுந்தருளியதால் சுவாமிக்கு தலபுரிஸ்வரர் என்ற பெயர் வந்தது தாளம் என்றால் பனை என்ற .பொருள் உண்டு இந்த கோவிலில் தாழபுரீஸ்வரர் கிருபா புரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர் அகஸ்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர் தல பூரீஸ்வரருக்கு அருகிலேயே மற்றோர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் இந்த லிங்கம் தான் கிருபாபுரீஸ்வரராக
அருள் பாலிக்கிறார் இரு மூலவர்கள் இருந்தாலும் இவரும் ஒருவராக சூரியனின் உடலில் நந்தி தோன்றும் சந்திரனின் தலையில் பிறை சந்திரன் இருப்பதும் யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பது இந்த கோவிலில் வித்தியாச தோற்றங்கள் ஆகும் வழிபடுவது தான் சிறப்பு ஆகும் கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவார பாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது சூரியனின் உடலில் நந்தி தோன்றும் சந்திரனின் தலைய ர் திரைச்சந்திரன் இருப்பதும் யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பது இந்த கோவிலின் வித்தியாச தோற்றங்கள் ஆகும் பூரிஸ்வரர் கோவிலில் ஆண் பெண் என்று இரண்டு பனை மரங்கள் தல விருட்சமாக உள்ளன கிருபாபுரீஸ்வரருக்கு நேராக பிரதான வாயில் அமைந்துள்ளது இரு மூலவர்களும் தனித்தனியே கஜபேஸ்ட்ட விமானத்தில் கீழே அமர்ந்துள்ளனர் தலாபுரீஸ்வரரின் கருவறை சுவரின் லிங்கோத்
பவர் துர்க்கை அம்மன் கிருபாபுரீஸ்வரர் கருவறையில் பின்புறம் மகாவிஷ்ணு இடது புறத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் இரு மூலவர்களுக்கும் அம்பாள்கள் தனித்தனி சன்னதியில் தெற்கு நோக்கி அடுத்தடுத்து இருக்கின்றனர் இதில் பிரதான அம்பாள் அமிர்தவல்லி உயரமாகவும் கிருபாபுசூரம் வாழ் சற்று உயரம் குறைந்தவர்களாகவும் காட்சி தருகிறார்கள் தட்சிணாமூர்த்தியின் தன் இடது காலை மடக்கி வைத்த படி வித்தியாசமாக காட்சி தருகிறார்
இவருக்கு கீழே நந்தியும் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு இடது புறத்தில் நாக தேவதையும் வலதுபுறத்தில் மடியில் அம்பாளை வைத்தபடி மற்றோர் விநாயகரும் இருக்கின்றனர் கோவிலுக்கு வெளியே வன்னி மரத்தின் அடியில் சனிஸ்வரர் அமர்ந்துள்ளார் இவரை வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை பிரகாரத்தில் நடராஜர் திருப்பதி வெங்கடாஜலபதி மீனாட்சி சொக்கநாதர் மகாலிங்கம்
ஆகியோரும் அருள்வாக்குகின்றனர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துவது நன்மை பயக்கும் குழந்தை ,பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர் மேலும் தல விருச்சத்தை சுற்றி வந்து சிவனை வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் ஐதீகமாக என்பதும் பக்கமாக உள்ளது .
மேலும் இது போன்ற ஆன்மீக மற்றும் ஜோதிடம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள நவசக்தி பாபா டாட் காம் மூலம் இனைந்து இருங்கள்