இந்த நவீன காலத்தில் புதுப் புது பெயர்களுடன் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமான வியாதிகள் மனிதனை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது
இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையில் எத்தனையோ மருத்துவர்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற புது புது பயங்கரமான நோய்களுக்கு இப்போதெல்லாம் நமது பாரம்பரிய வைத்தியம் என்றும் பாட்டி வைத்தியம் என்றும் கூறப்படுகின்ற சித்த மருத்துவத்தை மக்கள் தேடத் துவங்கி விட்டார்கள் இந்த காலகட்டத்தில் நம் வீட்டில் இருக்கும் மிக சாதாரணமான உபயோகப் பொருட்களை வைத்துக் கொண்டு மிகப்பெரும் வியாதிகளை எப்படியெல்லாம் குணப்படுத்தலாம் என்கின்ற தேடுதலில் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு என்கின்ற இந்த அருமையான மருந்தை வைத்து பெரும் பெரும் வியாதிகளை எப்படி எல்லாம் ஓட ஓட விரட்டலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்
பூண்டு என்பது “ALLIUM SATIVUM “ஆலியம் சட்டிவம்” என்ற ஆங்கில சொல்லால் குறிக்கப்படும் தாவரச் செடியாகும். கோரை, அருகம்புல், வெங்காயம், வெள்ளைப் பூண்டு போன்றவற்றை பூண்டு வகை என்ற போதிலும் சிறப்புத் தன்மை வெள்ளை பூண்டு. மட்டுமே குறிக்கும். நடைமுறையில் கார்லிக் “KARLIC” என்று சொல்லப்படும்.
வெங்காயம் அடுக்குமுறை தோல் உரியும் அமைப்பு கொண்ட கிழங்கு வகையாகும். பூண்டு பல்லடுக்கு அமைப்புக்கு உள்ளாக ஓரிரு அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும். மலைப்பூண்டு, நாட்டுப்பூண்டு என இரு வகைப்படும். மலைப்பூண்டு பல் பெரிதாகவும் – மருத்துவத்திற்கும் பயன்படும். நாட்டுப்பூண்டு பல் சிறிதாக – வீட்டு சமையலில் பெரும்பங்கு வகிக்கும்.
பூண்டின் தாயகம் மத்திய ஆசியக் கண்டமாகும். நமது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பூண்டின் பயன்பாடு அதிகம். சீனாவில் உற்பத்தி அதிகம்.
பூண்டானது எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் அமில நெடியுடையது.
பூண்டின் மருத்துவ பயன்கள் – பாட்டி வைத்தியம்
பூண்டு, மனித இனத்தின் நோய் தடுப்பு மண்டலத்திற்கு (AntiBiatic) உறுதுணையானது. புற்று நோய் உட்பட பல்வகை நோய் தொற்றுகளையும் எதிர்க்கும் குணமுடையது. வெள்ளணுத் திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கும் சக்தி படைத்தது. தண்டுவடத்தை பாதுகாக்கும் அரணானது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நீரழிவு, மாதவிடாய்க கோளாறுகளுக்கு அரும் மருந்து.
இரத்த அழுத்தம் (BLOOD PRESSURE), மாரடைப்பு (Heart Attack) போன்றவற்றில் இருந்து மீள பூண்டை தினசரி, ஓரிரு பல்களை அரைத்து கூழாக்கி பாலை சுண்டக்காய்ச்சி, மிகக்குறைவான அளவில் சர்க்கரை சேர்த்தோ இல்லாமலோ அருந்தி வரவேண்டும். பூண்டை ஊறுகாயாகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட தொங்கு சதை குறையும். உடல் எடை குறைந்து சீராகும். இலேசான உடல் அவசியம். பயிற்சி, நடைப்பயிற்சி –
உடலில் தீராத சிலந்திக்கட்டிகள் கரைய பூண்டை கலப்படமின்றி அரைத்து பற்றுபோட பனிக்கட்டி போல கரையும்.
தீராத வயிற்றுவலி வாய்வுக் கோளாறு (Gas Trouble) மூச்சுப்பிடிப்பு போன்றவற்றிற்கு பூண்டை பாலில் போட்டு குழைந்த சாதம் போலாக்கி, மத்தால் கடைந்து, கூழ்வடிவில் அதனுடன் பனங்கருப்பட்டி அல்லது பனஞ்சீனி, தேன் – சுக்குத் தூள் கணிசமாக போட்டு மீண்டும் இலேசாக காய்ச்சி – இளகலான முறையில் தயார் செய்து தினசரி 10 கிராம் லேகியம், உருண்டை வடிவில் அமைத்து மாத்திரை போல சாப்பிட்டு வர வயிற்றுவலி, வாயுக்கோளாறு குணமாகும்.
பூண்டு ரசம், பூண்டு வத்தல் குழம்பு சாப்பிட்டால் குளிர் தொல்லை நீங்கும் (குளிர் ஜூரம் – காலத்தில் பூண்டு ரசத்தில் சிறிய அளவு குழைந்த சாதத்தை மத்தால் கடைந்து திரவ வடிவில் சாப்பிடலாம்.)
பூண்டு சாறு: காதுவலி சமயத்தில் ஓரிரு சொட்டுகள் போட்டால் காதுவலி குணமாகும்.
பூண்டை சாதாரணமாக தோலை நீக்கி சாக்லெட் வடிவில் கையில் வைத்து எந்த நிலையிலும் சாப்பிடலாம். சகிப்புத் தன்மை முக்கியம். கெட்டியான சளி, கபத்தை கரைத்து வெளியேற்றும். மலம் வெளியேற்றத்திற்கும் இளக்கும் தன்மையில் செயல்படும். மலச்சிக்கல் வராது.அசைவ உணவுகளான ஆட்டுக்கறி, கோழி, மீன், மூட்டை குழம்பு, குருமாக்களில் பூண்டை கணிசமாக சேர்த்து உணவே மருந்து, மருந்தே உணவு கொள்கையை மறைமுகமாக கடைபிடிக்கிறோம்.
2 (GARLIC CHICKHEN, MAT- TON, FISH என்ற இறைச்சி, கோழி, மீன்) பூண்டு கலந்த குழம்பு
வகைகளாக நாகரீகமான முறையில் சாப்பிட்டு நமது உடல் வலிகளை குறைத்துக் கொள்ளலாம்.
குழந்தை மருத்துவ பாதுகாப்பு: குழந்தை பருவத்தில் அதிகளவு இனிப்பு திண்பதால் வயிற்றுப் பூச்சிகள் உருவாகி தொல்லைப்படுத்தும். அவைதீர குப்பைமேனி இலை சாற்றுடன் பூண்டு சேர்த்து சாறு எடுத்து தரவேண்டும். எளியமுறையில் பூச்சிகள் வெளியேறி – குழந்தைகள் நலம் பலம் பெறுவார்கள். பூண்டு, ஓமம், கசாயம் தந்தால் – குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறை நீங்கும். வகைகள்
உடலில் சுளுக்கு ஏற்பட்டால் பூண்டு சாறுடன் உப்பு சேர்த்து பூசினால் சுளுக்கு மாயமாகும். பூண்டு வெல்லம் கலந்து சாப்பிட உடல் வலி – அசதி நீங்கும். சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். தேமல், தொடை இடுக்கிலுள்ள குளியறை படை, சொறி சிரங்கு புண்கள் குணமாக – வெள்ளைப் பூண்டு, வெற்றிலை சேர்த்து பசைபோல தயார் செய்து, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை தேமல், படை, சொறி, சிரங்கு புண்கள் மீது போட்டுவர தோல் மென்மைத் தன்மையும் குணமாகி புதுப்பொலிவு பெறும்.
நமது உடல் சருமத்தில் ஏற்படும் கோடை கால வெக்கை நமச்சல், அரிப்பு நீங்க பூண்டு தைலம் தேய்த்து வர தோல் மிருதுவாகி குணமாகும். சிறு எரிச்சல் இருக்கும், தவிர்க்க தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்க்கலாம்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீராதவலி தீர பூண்டு, மிளகு, துத்தி இலை சமமாக 50 கிராம் அளவெடுத்து, இவைகளுடன் பாதிஅளவு (25கிராம்) வசம்பு சேர்த்து நன்றாக அரைத்து, தினசரி 5 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர சூதக கால்வலி தீரும். வாய்வு தொல்லை நீங்க பூண்டை நெய்யில் வதக்கி வறுத்து, உணவுடன் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட்டு குணமாகலாம்.
சளி, கபம், தீராத காச நோயாளிகள் (டி.பி.நோயாளிகள்) பூண்டு சாறு, பருகி வந்தால் டி.பி. குறையும். பீடி, சிகரெட், மதுபானம் தவிர்க்க வேண்டும்.
Read Also ; சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும்
தீய சக்திகளை விரட்டும் பூண்டு – பாட்டி வைத்தியம்
வீட்டில் தீயசக்தி அண்டாமல் இருக்க பூண்டை விரளி மஞ்சள் நசுக்கி. அரைத்து கரைத்து, வீடு முழுக்க முன்பின் பகுதிகளில் தெளித்திட்டால் துஷ்ட சக்திகள், நல்லபாம்பு, போன்ற ஊர்வன படை எடுக்காது.
பூண்டில் மக்னீசியத்தாது, வைட்டமின் 6, செலினியம் சக்தி நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி உள்ளது. செரிமான சக்தி சீராக பூண்டு பயனுள்ளது.
இல்லற வாழ்க்கை- காதல் வசப்படும் சமயம், பொது இடங்களில் “பூண்டு” வாசனை குறிப்பிட்டு அடையாளப்படுத்தும்.
மற்றபடி “பூண்டு” நமது பாரம்பரிய பாரதத்தின் பரம்பரையான நோய், பேய், பகை வெல்லும் அற்புத குணாதிசயமிக்கது.
நமது பண்டைய சமையலறை “அஞ்சறை பெட்டி” பொருட்களில் பூண்டு தலைமையானது. தலைசிறந்தது. பூரண நலம் காக்கும் பூண்டு, நமது பாரதத்தின் சொத்தாகும். அதை உரிய முறையில் பாதுகாத்து பயன்படுத்துவோம்.
Read Also ; பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்
மஞ்சள் தரும் மங்கல வாழ்வு
இந்த உலகில் புல் பூண்டுகள் தோன்றியபின் விருட்சங்கள் தோன்றின. முதலில் தோன்றியது அறுகம் புல் ஆகும். அதனால்தான் ஆதிகணபதிக்கு அறுகம்புல் மாலை போடுகின்றார்கள். முற்காலத்தில் மூலிகைகளும் மற்றும் மனிதனிடம் பேசியுள்ளன. மரங்களும் பின் ஏதோ முனிவர் சாபத்தால் அவை பேசவில்லை எனப் புராணங்களில் குறிப்பு வருகின்றது. கேரளாவில் நாய்கள் குரைப்பதில்லை. காக்கை கரைவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தர்ப்பைப் புல்லை அனைத்துக் காரியங்களுக்கும் உபயோகிப்பது வேதகாலத்திலிருந்து நடைமுறையில் உள்ளது.
நீங்கள் ஒரு தர்ப்பைப் புல்லைக் கையில் வைத்து மனச் சங்கல்பத்தால் இதர லோகங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
மனிதனின் கிரஹஸ்த வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது உப்பும் மஞ்சளும்
ஆண்களுக்கு உப்பும் பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும். பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யூத மன்னர்களின் மனைவியர் அந்தப்புரத்தில் மஞ்சள் குளியல் தொட்டிகள் அமைத்து அதன் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
மஞ்சள் செடி கிழங்குப் சார்ந்தது. சமசீதோஷ்ணப் பிரிவைச் பகுதிகளில் செழிப்பாக வளரும். மஞ்சள் செடி சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இதன் தண்டு கூவைச் செடியின் தண்டைப் போன்றது. இலை, கூவைச் செடியின் இலையைப் போன்றுமிருக்கும். சாதாரணமாய் மஞ்சள் கிழங்கை நாம், வீடுகளில் கறி வகைகளுக்கும், உடல் பூச்சுக்கும் உபயோகப்படுத்துகிறோம். உடல் நலத்துக்கு மிகச் சிறந்தது. இதன் இலையைக் கசக்கி முகர்ந்தால், மாங்காய் வடுபிஞ்சு மணம் உடையதாய் இருக்கும் மஞ்சளின் சுவை கார்ப்பும், துவர்ப்பும் கலந்தது. மஞ்சளில் பல இனங்கள் உண்டு. அவைகளில் முக்கியமானதும், பயன்படக்கூடியதுமானது என்னவென்றால்,
(1) கறி மஞ்சள்,
(2) கஸ்தூரி மஞ்சள்,
(3) மரமஞ்சள்,
(4) காட்டு மஞ்சள்,
(5) குரங்கு மஞ்சள்,
(6) பலா மஞ் சள்,
(7) காஞ்சிரத்தின் மஞ்சள்,
(8) நாக மஞ்சள் வகைகளாக அறியமுடிகின்றது. மேலும் வேறுசில பிரிவுகளும் இருக்கின்றன. அவைகள் பொன்குறட்டு மஞ்சள், கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள்,
குட மஞ்சள் முதலியனவாகும்.
இறந்த ஆவிகள் சுத்தமில்லாத பெண்களைப் பற்றிக்கொண்டு கணவர்களோடு ஆடுவதும் சண்டைபோட பாடு பாடுத்துவதும் வைத்துச் சூட்சுமத்தில் அந்தப் பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும் காலங்காலமாக நடந்து வருகின்றது. இது அனைத்து ஜாதி மதங்களிலும் உண்டு. இதைத்தவிர்க்க மன அமைதியையும் குடும்ப சுக வாழ்க்கையையும் வழங்குகிறது மஞ்சள் எனக் கண்டு கொண்டனர். எனவே மஞ்சளைப் பல வழிகளில் உபயோகிக்கத் தொடங்கினர். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுகின்றனர். தீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின்போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் மணப்பெண்ணுக்கும் மஞ் சள் காப்புக் கட்டுகின்றனர். மணமேடைகளில் இருக்கும்பொழுது மஞ்சள் தோய்ந்த ஆடைகள் உடுத்துகின்றனர். திருமாங்கல்யக் கயிறும்
மஞ்சள்தான். மணமக்களுக்குத் திருஷ்டிபடாமலிருக்க புரோகிதரும் மற்றும் இதர உறவினர்களும் மஞ் சள் கலந்த அட்சதையைத் தூவுகின்றனர். மஞ்சள் பொட்டு அணிகின்றனர். மாரியம்மன் கோவிலில் பிரதான பிரசாதம் மஞ்சளும் எலுமிச்சம் பழமும்தான். மஞ்சள் பொடி போட்ட எலுமிச்சை சாதம் மாரியம்மனுக்கு மிகவும் பிடித்தமானது.
Read Also : https://www.dailythanthi.com/others/devotional/glory-of-manjal-kungumam-1118716
மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி, எலுமிச்சைச்சாறு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம்,
பசு நெய் போட்டுத் தயார் செய்வது. இது நெற்றியில் வடு ஏற்படுத்தாது. பெண்கள் கர்ப்ப காலத்தில் பிரசவத்திற்கு முன்பும் பின்பும் மஞ்சள் உபயோகித்து வந்தனர். அதனால் அவர்களுக்கு வசீகர சக்தியும் பொன்நிறக் குழந்தைகளும் பிறந்தன. எல்லோர் வீடுகளிலும் துளசிச் செடிபக்கம் மஞ்சள் செடி வைத்து வளர்த்தார்கள். பச்சரிசி மாக்கோலம் மஞ்சள் பொடி கோலம் போட்டு வீட்டை அலங்கரித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில் இந்துமத சடங்குகள் என்னும் தலைப்பில் ஆறு தினங்கள் வகுப்பு மகான் மிஸ்டிக் செல்வம் அவர்கள் பாடம் நடத்தினார். அதில் M.A., M.Phil., PH.D மாணவர்கள் கலந்து கொண்டு பாடம் கற்றனர். கேள்விகள் கேட்டனர். அதில் மஞ்சள் பிரதானமாக இருந்தது.
கந்தகம் தான் ஆதிபராசக்தி. அருள்வாக்கு சொல்ல, நிலத்தடி நீர் கண்டுபிடிக்க, தேவி உபாசனை செய்ய, ஆண்களை வசீகரம் செய்யக் கந்தகம் அவசியம் வேண்டும். இக்கந்தகம்
மஞ்சளில்தான் அதிகம் உண்டு. பெண்கள் மட்டும் மஞ்சள் அதிகம் உபயோகிக்கலாம்.
ஆண்களுக்கு ஏற்படும் சாமியாட்டத்தைப் போக்க மஞ்சள் பால் கொடுத்து சாமியை மலை ஏறவைப்பார்கள். மஞ்சள் பட்டிற்கும் இதே குணங்கள் உண்டு. மஞ்சள் சேலை அணிந்தாலும், கனக புஷ்பராகம் அணிந்தாலும், மஞ்சள் பட்டுத்துண்டு அணிந்தாலும் எதிரிகளின் அபிசார பிரயோகங்களான ஹோமங்கள் பயனற்றுப் போய்விடும். எவ்வளவு உயர்ந்த படிப்புப் படித்திருந்தாலும் வளமான செல்வங்கள் இருந்த போதும் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டிற்குக் காரணம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்காததும் அசைவ உணவு சாப்பிடுவதும் என ஆராச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மேற்படிக் காரணங்களால் பெண்களின் உடலில் எதிர்ப்புக் கதிர் வீச்சுகள் கூடுதலாகிப் பெண்களுக்கே உண்டான வசீகர சக்தி மற்றும் ஆகர்ஷண சக்தி குறைகின்றது.
Sub title பெண்களுக்கு மிக அவசியம் மகளிர் மட்டும்
வெள்ளரிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுவலி, தொண்டை வலி குணமாகும்.
” பாம்பு கடித்தவர்களுக்கு வாழைப்பட்டையின் சாற்றுடன் சிறிதளவு தும்பை சாறு கலந்து குடிக்க கொடுக்கலாம்.
கல்லீரலில் ஏற்படும் நோய்கள் தீர்ந்திட ஆப்பிள் பழம் சிறந்த மருந்தாகிறது.
நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்களில் இருந்து தற்காலிகமாக விடுபட, பஞ்சவர்ண திரியினால் தீபம் ஏற்றி வழிபடலாம்.
வெள்ளிக்கிழமைகளில் பூஜைக்கு தேவையான பூஜா பாத்திரங்களை வியாழக்கிழமையே தேய்த்து வைத்திட வேண்டும்.
சளி, வறட்டு இருமல் நெஞ்சிலோம், தீராத காய்ச்சல், கோழைகட்டுதல் போன்றவற்றிற்கு சித்தரத்தை, பேரிச்சம் பழம், சுக்கு, அதிமதுரம் இவற்றை தலா 20 கிராம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மேற்கண்ட நோய்கள் தூர ஓடி விடும்.
வெள்ளரிக்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தனிந்து, உடல் ஊட்டம் பெறும்.
ஆன்மீகக் குறிப்புகள்
1. தவக்கரை, கோவைக்கு அருகே உள்ளது. இந்த ஊர். இந்தியாவிலேயே மிக உயரமான நந்தி இங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுமார் 31 அடி உயரமும், 22 அடி அகலமும், 24 அடி நீளமும் கொண்டதாகும்.
2. “கௌரி தாண்டவம்” காண விரும்பி தவம் செய்த மகாலட்சுமிக்கு. இறைவன் காட்சி அளித்து. ஆடல் புரிந்து தலம் திருபத்தூர் இது குன்றக்குடி. பிள்ளையார்பட்டிக்கு அருகே உள்ளது. இறைவன் பெயர் திருத்தளி நாதர்.
3. சிவனுக்கு நிகராகத் தன்னைக் கருதி, சாபம் பெற்ற பிரம்ன் சாப விமோசனம் பெற்ற தலம் திருப்பட்டுர். இது திருச்சி, பெரம்பலூர் வழியில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் பிரம்ம புரீசுவரர்.
4. காரைக்குடியில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலயத்தில் “தக்காளி” மாலையாக அணிவிக்ப்பெறுகிறது.
5. திருக்கடையூர் அபிராமி கோயிலில் சிவன் கால சம்ஹார மூர்த்தியாக விளங்குவதால் அங்கு நவக்ரஹங்களுக்கென்று தனிச் சன்னதி கிடையாது.
6. சூரபத் மனை கந்தன் அழித்ததால் “கந்த சஷ்டி” கொண்டாடப்படுவது போல். சம்பாசுரனை காலபைரவர் அழித்ததால் கொண்டாடப்படுவது “சம்பா சஷ்டி” ஆகும்.
7. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது திருவேங்கை வாசல் திருத்தலம். இறைவன் “திருவேங்கை நாதர்” என்றும் “வியாக்ர புரீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். புலிக்கால் முனிவர் வியாக்ர புரீஸ்வரர் வழிபட்ட ஆலயம் இது. சிறந்த குருப்பரிகாரத்தலமாகவும் இது விளங்குகிறது
8. . மேலும் இது போன்ற
9. உங்களுக்கு உபயோகமாக இருக்கும் பல்வேறு அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
10. நவசக்தி பாபா வுடன் இனைந்து இருங்கள்
11. மீண்டும் வேறு ஒரு அழகான அற்புதமான பதிவில் சந்திப்போம்