தொண்டை நாடு 67 601 புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வெண்பனி வட்டம் அருகில் மேகங்கள் விளையாட்டாய் மோதி விளையாடும் மலைகளும் குன்றுகளும் சூழ அடர்ந்த வனங்கள் நிறைந்தும் பூத்துக்குலுங்கும் சோலைகளும் துள்ளி விளையாடும் புள்ளி மான்களும் புள்ளினங்களின் இசையும் நீர் நிறைந்த வயல்வெளியும் கணவிளைந்த நெல்மனிகள் காற்றில் ஒலிக்கும் சங்கீத ஓசையும் இயற்கை அன்னை இயல்பாக அமர்ந்து வசிகரிக்கும் மாட்சிமை பொருந்திய. பெரியாண்டவர் அற்புதங்கள்
எழில் நிறைந்த திருநிலை கிராமத்தில் கிழக்கு முகம் வாசல் கொண்டு ஆலயத்தின் வடபுரம் சித்தாமிர்தம் என்ற குளக்கரையும் தென்புரம் ஏரிக்கரையும் கொண்டு இருகறை மத்தியில் தென்றல் தவழும் சூழலில் சிவபெருமானே மனித வடிவம் தாங்கி உலகெல்லாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாளிக்கின்றார்.
இந்த ஆலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கை கூப்பிவணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
இந்த ஸ்தலத்தின் தல வரலாற்றை காண்போம்
முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும்.
மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால், இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர்.
தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்ணத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.
அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும் உடனே புறப்படு என்று கூறி நின்றார்.
ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வராததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியானத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர் எம்மில்பாதியாக விளங்குபவர் தானே ஆகவே, நீரும் ஒரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார்.
உமை அவதாரத்தின் ஆழமும் அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலானோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.
உடனே, தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள். அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி வீழ்ந்தன. பின் அவைஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார்.
பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும், பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன. பெரியாண்டவர் அற்புதங்கள்
Read Also : சித்தர் ஓதசுவாமிகளின் மகிமைகளும் அற்புதங்களும்
திரு நிலை என்று அழைப்பதன் காரணம் – காஞ்சிபுரம் மாவட்டம்
ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன் மேலும், உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி என அழைக்கப் படுவாள் என்று வாழ்த்தினார். இந்த வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்.
மேலும், பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருளினார்.
இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் தீபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு
பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.
Read More : சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள்
ஜோதி வெளிப்பட்ட சுயம்பு லிங்கம் – காஞ்சிபுரம் மாவட்டம்
மேலும், ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி வீழ்ந்து பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இவ்வாலயத்தில்பெரியாண்டவர் சிவகண பூசை செய்வோர் அவர்கள் உறவினருடன் சேர்ந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கு ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். பெரியாண்டவர் அற்புதங்கள்
நந்தி பகவானும் மனித வடிவில் தோன்றி சிவனைபோன அருள்வது இங்கு காணலாம். சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும். தலம்.
நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும். காஞ்சிபுரம் மாவட்டம்
மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபோது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர்.
அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடீர் என காணாமல் மறைந்து இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒரு ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரியாண்டவர் அற்புதங்கள்
திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்காதவை.
மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன் வழங்கி மனநலம் கண்டோர் வாழ்வில் நலவளம் வழங்கி மணமாகாதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்சித்து உழைத்து ஊர்காக்கும் உழவர்களின் பயிர் வாழமழைவளம் அளித்து கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம். பெரியாண்டவர் அற்புதங்கள்
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது. செங்கல்பட்டில் இருந்து தினமும் திருநிலை பெரியாண்டவர் கோவிலுக்கு திருகழுக்குன்றம் வழியாக டி11 என்ற பேருந்து காலை 9 மணி மற்றும் மாலை 2 மணி இரவு 9.00 மணிக்க சென்று வருகிறது.
Read More : பாட்டி வைத்தியம் பூண்டு ரகசியம்
ஜோதிட விதிகளை மாற்ற வேண்டும்! –
பெரியாண்டவர் அற்புதங்கள்
சித்தர்கள் உருவாக்கியது ஜோதிடம்! ஜோதிடம் என்றால் என்ன? எதிர் காலத்தில் நடக்கப் போவதை முன்னமே தெரிந்து கொள்ள நமது முன்னோர்கள் ஆக்கி வைத்த மிக அற்புதக் கலையாகும். எந்த விஞ்ஞான சாதனையும் இதற்கு இணையாகவே முடியாது. காரணம் விஞ்ஞானத்தால் வியப்பு தரும். விந்தைகளை செய்து மனித மேம்பாட்டிற்கு உதவி வருகிறது. எல்லா துறையையும் ஆய்ந்து முடிவு கண்டது. இன்றும் ஆய்வு நெறியில் வளர்ந்து வருகிறது.
இந்த உடலை ஆய்ந்து பல விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்தி மருத்துவக் கலையை மேம்படுத்தியது. ஆனால். மனிதனை ஆய்வு செய்த விஞ்ஞானம் மனித மனத்தை மட்டும் ஆய்வு செய்யத் தயக்கம் காட்டுகிறது ஏன்? மனோவியலை விஞ்ஞானம் சரியாக ஆய்வு செய்தால் மனம் அது தொடர்பான பிரபஞ்சம் பற்றி மிக சரியான தொடர்புகளை அறிந்து நன்மை பெற முடியும். பெரியாண்டவர் அற்புதங்கள்
ஆதிகாலச் சித்தரும் முத்தரும் மகான்களும், மகரிஷிகளும் மனம்தான் இந்த பிரபஞ்சம். பிரபஞ்சம் தான் இந்த மனம் என்று கூறிவிட்டு போனது செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. இது ஒரு செப்படி வித்தை என்று விஞ்ஞானம் ஒதுக்கி தள்ளுகிறது.
எந்த சித்து வேலையானாலும் அது விஞ்ஞான அறிவியலுக்கு கட்டுப்படாத பார்முலாவாக இருக்க முடியாது. அப்படி கட்டுப்பாடு அற்று இயங்கினால் அது பொய்யாகிவிடும். அது ஒரு மாய தோற்றம் என்றாலும் அதன்விதியை விஞ்ஞானம் மூலம் நிரூபிக்க முடியும். பெரியாண்டவர் அற்புதங்கள்
ஆகவே, ஆன்மீக அறிவியலை ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
மனிதன் எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள பல நுணுக்கமான வழிகளை நமது முன்னோர்கள் தந்தார்கள் அவை, சகுனம், நாள், நிமித்தம், புள்நிமித்தம் (பறவை) பிறவற்றின் நிமித்தம் அசரீரி கேட்டல் சாமுத்திரிகா லட்சனம், கனவுப் பலன் என்று பல வழிகளை தெரிவித்தார்கள்.
வானவெளியில் உலவும் கிரக சஞ்சாரங்களை கணித்து அவைகளின் அசைவு நெளிவு சுளிவுகள் கண்டு அதன் மூலம் எதிர்கால பலன்கள் அறிய வழி செய்திருக்கிறார்கள்.
நமது முன்னோர்கள் எந்த நுண் கருவிகளும் இல்லாமலேயே நுண்ணியிர் வூட்டத்தால் கண்டுணர்ந்த கருத்துப்படி உள்ள கணிதமே நம்மிடம் உள்ளது. பெரியாண்டவர் அற்புதங்கள்
தற்சமயம் விஞ்ஞானக் கருவி மூலம் கானும் போது சற்று வித்தியாசம் இருக்கவே செய்யும் என்பதை மறுக்கவே முடியாது.
நிலநடுக்கோடு வடக்கே, அதாவது வட துருவத்திற்கு அருகில் நாம் இருக்கிறோம். அதனால்தான் வட துருவ விண்மீன்களைக் காணமுடிகிறது. தென்துருவ விண்மீன்களை நாம் எப்பொழுதும் காண முடிவதே இல்லை.
ஒரு விந்தையான செய்தி என்னவென்றால் நமது வானசாஸ்திரம் காலபோக்கில் ஒன்றை மறந்தேவிட்டது அதுதான் வானரகசியத்தின் ஒன்றான துருவப் பெயர்ச்சி. ஆம் துருவம் இடம் பெயர்ந்து விட்டது. தற்சமயம் இடம் பெயர்ந்து கொண்டுதான் உள்ளது என்று விஞ்ஞானம் கூறுகிறது. பெரியாண்டவர் அற்புதங்கள்
வடதுருவத்தை தொடர்ந்து இடைவிடாது 70 ஆண்டுகள் கவனித்து வந்த வான இயல் மேதைகள் வடதுருவம் என்பது 72 அடி சதுரம் கொண்டது என்றும். நமது பூமியின் உச்சிப்பகுதி அதுதான் முடி சூட்டியதுபோல உள்ளது என்றும் தொடர்ந்து 70 ஆண்டுகள் அந்த உச்சியை கவனித்து வந்தபோது 6 அங்குல தூரம் உச்சிபகுதியானது கீரின்லாந்தை நோக்கி நகர்ந்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.
பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழலும்போது பூமியின் பரப்பு ஒவ்வொன்றும் மேற்கண்ட துருவ மையத்தைத் தொடாமல்இடம் மாறி இடம்மாறித்தான் சுழலும். ஆனால், ஏதாவது ஒரு சமயம் துருவ முனையை பூமியின் மேல் நேர்கோட்டை சந்தித்தால் அதன் நேர்கோட்டின் பார்வையில் உள்ள கடல், மலை, காடு. நகரம் எதுவானாலும் பூமிக்குள் அமுங்கிவிடும் என்றும் இவ்வாறு கணக்கற்ற தீவுகள் மறைந்து விட்டன என்ற அதிசய உண்மையை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதையும் நம் முன்னோர்கள் கருத்தில் கொண்டுதான் கணித்து இருப்பார்கள் என்பது சாத்தியம் இல்லை.
மேலும், நமது பூமி வாட்டிட் யூடுகள் தொடர்ந்து ஒவ்வொரு டிகிரியாக சாய்ந்து சரிந்து வீழ்ந்துக் கொண்டேதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பது இப்பொழுதுதான் தெரியவரும் உண்மையாகும்.
இந்த வாட்டிட்யூடுகளின் ஒரு டிகிரி சாய்வு ஏற்பட 72 ஆண்டுகள் ஆகலாம் என்ற யூகம் உள்ளது. பூமி சாய்ந்து கொண்டுதான் போகிறது என்பதற்கு சான்றுகள் நிறையவே உள்ளது (200 ஆண்டுகளுக்கு முன் கூட்டிய காஞ்சிபுரம் கைலாய நாதர் கோயில் வடகீழ் திசையாக மாறிவிட்ட மர்மம் என்ன திசை தெரியாமல் கட்டி விட்டார்கள் என்ற கூற முடியாது.
ஆக அதிகாலத்தில் இருந்த பூமியின் நிலைவேறு தற்கால பூமி நிலை வேறு அப்படி இருக்கும்போது பழங்கால பாட்டை இன்றும் பாடி ஜோதிடம் பார்க்கலாமா? காலத்திற்கேற்ற கணிப்பை வழங்கவேண்டாமா? மாற்றம் செய்ய வேண்டாமா – இதற்குமுன் பலமாற்றங்கள் நிகழ்ந்தே இருக்கின்றன. பெரியாண்டவர் அற்புதங்கள்
ஜோதிடம் தோன்றிய காலம் தொட்டு வருடபிறப்பு கார்த்திகை என்றும் ஆவணி என்றும் இருந்ததை மாற்றி “தை” என்றும் மாறியது. அதையும் மாற்றி சுமார் 1700 ஆண்டுகளாக சித்திரைத்தான் ஆண்டுத்துவக்கம் என்றும் விஷு வஸந்த காலம் புண்ணிய காலம் என்றும் அதாவது சூரியன் வசந்த விஷு தக்ஷணாயனம் துலா விஷு உத்திராயணம் போன்றவை புண்ணிய காலமாக கருதி சித்திரை 1 ஆம் தேதி விழா கொண்டாடுகிறோம்.
12 ராசியில் உள்ள ஒவ்வொரு டிகிரியாக மெல்ல மெல்ல கடந்து தனது நீண்ட பயணத்தை 365 நாட்களிலும் விஸ்ராந்தியாக அமர்ந்து வருவது இந்த சித்திரை 1 ஆம் தேதிதான் என்று கொண்டாடி வருகிறோம்.
கிரகம் நட்சத்திரம் செல்லும் திசை போல் அல்லாமல் இந்த விஷு புண்ணிய காலம் எதிர்நோக்கி தனது யாத்திரையை நடத்தி வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியது உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அவர்கள்
கூற்றுப்படி இந்த சித்திரை 1ந்தேதி வஸந்த விஷு பங்குனி 7ந் தேதி ஆரம்பம் ஆகிவிட்டது. அதாவது 23 நாட்கள் முன்னமே வஸந்த விஷம் கடந்து விடுகிறது, அதன் பிறகே நாம் கொண்டாடுகிறோம்.
72 ஆண்டுகளுக்கு விஷுவின் நாட்களை அந்தந்த காலத்தில் உலக சான்றோர் எந்தவகையான கருவிகள் உதவி இல்லாமல் மனம் -சிந்தனையின் தீட்சன்யதால் தான் கண்டு அந்த மாற்றத்தை ஒரு தோராய மாற்றம் தந்து வந்தனர்.
இன்று நாம் கருவிகள் மூலம் சரியான கணிப்புக்கு வரவேண்டும் என்பதுதான் நமது விருப்பம். பெரியாண்டவர் அற்புதங்கள்
இன்றைய விஞ்ஞானம் சந்திரனை தொடர்ந்து 30 நிமிடம் பூமியிலிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்து அதை ஆய்வு செய்த போது, சந்திரனின் நீல் வட்டபாதையில் ஒழுங்காக செல்லவில்லை சந்திரன் அதிர்ந்து அதிர்ந்துதான் கீழும் மேலும் குதித்து குதித்துதான் செல்லுகிறது ஆக பூமியை நெருங்கியும் விலகியும் தான் ஒரு உதறலான பயணமாக உள்ளது
ஒரு நேர் கோட்டில் பயணமாகவில்லை.
இதை வைத்து பார்த்தால் சந்திரனைப் போலவே மற்ற கிரகங்களும் இப்படி உதறலாகத்தான் பயணம் செய்யும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. ஆக இந்த உண்மையால் நமது முன்னோர்கள் கணிப்பிற்கும் இன்றைய விஞ்ஞான கருவிகள் கணிப்பிற்கும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லை.
மேற்கண்ட விஞ்ஞானத் துல்லியக் கணக்குப்படி மாற்ற வேண்டிய கணிப்புகள் நிரம்ப இருந்தாலும் மற்ற பல்வேறு காரணங்களிலும் ஜோதிட கணிப்பில்நிரம்பவே மாற்றம் செய்ய வேண்டியவைகள் உள்ளன.
ஜோதிடம் அந்த கால மனிதன் இருந்த நிலைக்கு ஏற்றவாறு எழுதப்பட்டது. நாம் மறுக்கக் கூடாது. அந்தக் காலம்
விளக்கு வெளிச்சம் இல்லாத காலம். பயணத்திற்கு வாகன வசதி இல்லாத காலம். உலகம் மிகவும் விரிந்து இருந்தது. அன்றைய நாகரீகம் பண்பாடு, காலச்சாரம், ஆட்சியர் தன்மைக்கு ஏற்றவாறு எழுதப்பட்டது. ஜோதிடம் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
விளக்கு வெளிச்சம் இல்லாததால் குடும்ப விழா, சமூக விழா போன்ற முக்கிய விழாக்களை முன்நேரத்து நிலவு காலங்களில் அதாவது வளர்பிறையில் அமைத்தார்கள். கோயில் விழாக்களும் நடந்தே செல்ல வசதிக்காக அமைக்கப்பட்டது. இன்று நமக்கு எல்லா வசதியும் உள்ளதே! நல்ல நாள் என்பது என்ன? நாம் துவங்கி நடத்தும் செயல் செவ்வனே செய்ய இயற்கை தடையில்லாமல் சரியான காலம் என்பதை மட்டும் குறிப்பதே நல்ல காலம்
அந்த காலம் மட்டுமே எதிர்காலத்தை முழுவதும் ஆளுமை செய்து நிர்ணயம் செய்து விடாது. நாம் துவங்கும் செயல் நல்ல முறையில் நடக்கும் அவ்வளவு தான். நல்ல நாளில் திருமணம் செய்த தம்பதிகள் எல்லோரையும் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றி விட்டதா? வீடு கட்டும் முகூர்த்தமும் அப்படித்தான் வீடு சரியாக பூர்த்தியடையுமே தவிர வீட்டின் ஆயுள்காலம் வரையும் யோகம் தரும் என்று கூறமுடியாது
நாம் மாற்றத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலத்தின் ஓட்டத்தில் தானாகவே மாறத்தான்வேண்டும். நாம் மாற்றவில்லை என்றால் தானாக மாற்றிக் கொள்ளும் என்பதை பழங்கால நிலையை ஆராய்ந்தால் புலனாகும்.
பழங்காலத்தில் பால்ய விவாகம், எரிமூழ்குதல், எரிபுகுதல், தீய்ப்பாய்தல் என்று கணவன் இறந்த பிறகு மனைவி உடன் கட்டை ஏறுதல் என்ற வழக்கம் சங்க காலத்திலிருந்தே. அதாவது கி.மு. 3ம் நூற்றாண்டு மற்றும் கி.பி.3ம் நூற்றாண்டிலும் இருந்ததை புறநாநூறு பாடல் 2ல் வலியுறுத்தி கூறியது. மேற்கண்ட கருத்தையே தொல்காப்பி யனாரும் “நல்லோன் கணவனொரு
கூதளி நளியழவ் சுட்டுகிறது. புகுவதை’ ”
இவைகள் யாவும் கிரகங்களின் தன்மைகளால் நிகழந்த அகோர நிலைகள் தானே – கிரகம் அனுமதிக்காமல் பால்ய விவாகம் விதியூட்ட முடியுமா?
அந்த கிரகம் இன்று ஏன் பால்ய விவாகம் செய்ய வில்லை. 1921ம் ஆண்டு இந்திய புள்ளி விபரப்படி இந்தியாவில் 4 கோடி குழந்தைகள் இருந்தனர் என்றும் ஒரு வயதிற்கு கீழ் குழந்தை விதவைகள் 612 என்று புள்ளி விபரம் கூறுகிறது.
இந்த நிலையை காலப்போக்கில் எதிர்க ஆரம்பித்தனர்.மக்கள் கொதித்தனர். ஆட்சியரும் எதிர்த்தனர். அக்பர் சக்கரவர்த்தியும் எதிர்த்து இருக்கிறார், தடுக்க முடியவில்லை. ஆனால் 1772 – 1833ல் வாழ்ந்த அறிஞர் ராஜாராம் மோகன் ராய் போன்ற பெரும் தலைவர்களுடைய கடும் எதிர்பினை செம் பெரும் முயற்சியாலும் ஆங்கில ஆதிக அரச பிரதிநிதி “பென்ரிக் பிரபு” வின் செயல்பாடு சிறப்பும் சேர்ந்து 1829ம் ஆண்டு பெண்கள் கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுவதை தடை சட்டமாக கொண்டு வந்தபிறகு உடன்கட்டை ஏறுவது நிறுத்தப்பட்டது.
சட்டம் வந்தபிறகு இந்த கிரகங்கள் தன் சக்தியை இழந்து விட்டதா?
கி.பி. 1819ல் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் வந்து 1964 ல் சட்டமாக மாற்றப்பட்ட பிறகு ஆணுக்கு 21 வயது பெண்ணுக்கு 18 வயது என்ற பிறகு! “குரு பலம்” என்ன ஆயிற்று.
பூமியின் சாய்வு கோணம் மாறிக் கொண்டே வருவதால் பழமையான ஜோதிட கணிப்புகளை மாற்றத்தான் வேண்டும் என்பதே எனது கருத்து ஆகும்.
ஜோதிடம் தொடர்பாக ஆலோசனை பெற சித்தர் தாசன் அவர்களை தொடர்பு கொள்வதற்கு
9962027265
மேலும் இது போன்ற ஆன்மீக மற்றும் ஜோதிடம் தொடர்பாக செய்திகளுக்கு இணைந்திருங்கள் நவசக்தி பாபா டாட் காம்
Read More ; https://www.periyandavar.com/