மனித ஜோதியை ஆங்கிலத்தில் ஆரா (AURA) என்று கூறுவார்கள். மனித ஜோதி என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது?
நமது உடல் மின் சக்தியைத் தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. எந்த ஒரு மின் கடத்தியைச் சுற்றிலும் மின்சாரம் பாயும்போது கட்டாயமாக ஒரு மின் புலமும், ஒரு மின் காந்த மண்டலமும் உருவாகிறது என்று பெளதீகம் கூறுகிறது. நமது உடலைச் சுற்றியிருக்கும் காந்த மண்டலம் நமது சூட்சும உடலின் பயோ – ப்ளாஸ்மா வெளியிடும் வீச்சுகளாகும்.
மனித ஜோதி என்னும் ஆரா ஒரு மேகம்போல வெவ்வேறு வண்ணங்களின் கூட்டுகளாக மனித உடலைச் சுற்றி வியாபித்துள்ளது.இந்தப் படர்ச்சி ஆறு முதல் எட்டு அங்குலம் வரை உள்ளது. ஜீவ முக்தி
நோய்கள், மனோநிலை. விருப்பு, வெறுப்புகள் ஆகியவைகள் இதன் நிறத்தை மாற்றுகின்றன. மின் புலங்கள். காந்தப் புலங்கள் ஆகியவற்றில் உடல் இருக்கும்போதும், ஹிப்னாடிச உறக்கத்தில் இருக்கும்போதும் இந்த மனித ஜோதி அதிகமாக மாறுதல்களை அடைகிறது.
இந்த மனித ஜோதியை சிலர் வெறும் கண்களாலேயே பார்க்க முடிகிறது. மனிதன், விலங்கு, தாவரம், புழு, பூச்சிகளுக்கும் இந்த ஜோதி உள்ளது.
இந்த மனித ஜோதி என்னும் ஆரா. மனிதன் இறந்த பிறகும் ஆறு மணி நேரம் மிகுந்த ஒளிர்வோடு இருந்த பின்பு மங்கலாகிப் போகின்றன. ஆனால் இந்த ஜோதி மூன்று நாட்கள் வரை உடலைச் சுற்றிலும் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனித ஜோதியை எளிதில் காண முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்து இருந்தனர். ஆனால் மார்க்ஸ்மித் என்ற அமெரிக்கர் தன் ஆராய்ச்சியினால் மனித ஜோதியை எவர் வேண்டுமானாலும் காணலாம். அதற்கு சிறிய பயிற்சியே தேவை என்று குறிப்பிடுகிறார். அவர் கூறிய பயிற்சியினையும், உபகரணங்களையும் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்குகிறேன். பயிற்சி செய்து பலன் அடையவும். உங்களுடைய ஜோதியைக்காண.
1. பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிக்கு (மேஜை கண்ணாடி) முன்பு நிற்கவும். நிற்கும் தூரம் 18″ (பதினெட்டு) அங்குலமாகவோ அல்லது அதற்கும் மேலுமாகவோ இருக்க வேண்டும். மனித ஜோதியை
2. கண்ணாடிக்குப் பின்னால் வெள்ளை நிற சுவராக இருந்தால் மிகவும் நல்லது.
3. ஓய்வாக இருங்கள். மூச்சை ஆழ்ந்து சுவாசிக்கவும். மெதுவாக இந்தப் பக்கம், அந்த பக்கமாக அசைத்துப் பார்க்கவும்.
4. கண்ணாடியில் சுவற்றையோ கவனிக்கவும். உள்ள பேப்பரையோ வெள்ளை கூர்ந்து மனித ஜோதியை
5. கண்ணாடியில் தெரியும் உங்கள் உருவத்தின் தலையையோ, நெஞ்சின் மேல் பாகத்தையோ கண் இமைக்காமல் பார்க்கவும். சிறிது நேரம் கழிந்தவுடன் உங்கள் தலைக்கு மேல் மங்கலான வெள்ளை ஒளி தெரியும். உடல் முழுவதும் தெரியும்.
6. இந்த உங்களுடைய ஜீவ ஜோதி அதிக பிரகாசமான இடத்திலும் இருட்டறைகளிலும் தெரியாது. பார்க்கவும் முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால் அந்த முயற்சி வீண் ஆகும். ஜீவ முக்தி மனித ஜோதியை
7. ஜீவ ஜோதியின் நிறம் முதலில் நீங்கள் அணிந்திருக்கும் உடையின் நிறத்தில்தான் தெரியும். பிறகு உங்களுக்கு வேண்டிய நிறத்தில் தெரிய வேண்டும். என்று நினைத்தால் அவ்வாறே தெரியும். ஆனால் மனித ஜோதியை
இது பழக்கத்தினால் தான் வரும். தினமும் நினைத்து, நினைத்துப் பழகவும். ஜீவ முக்தி மனித ஜோதியை
8. உங்களுடைய சுவாசத்திற்கு ஏற்ப உங்கள் ஆரா (மனித ஜோதி ) பெரியதாகவோ, சிறியதாகவோ தெரிய வரும்.மனித ஜோதியை
Read More : வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்…
பிறப்பும் இறப்பும் – ஜோதி தரிசனம் ஜீவ முக்தி
(ஓர் ஆய்வு)
அண்ட சராசரங்கள் பலகோடி படைத்து மண்ணுலகில் பலகோடிக் கணக்கான இந்த உயிரினங்களைப் படைத்துள்ளான். இங்கு இறப்பு எப்படி நிச்சயமாகிறதோ அப்படியே பிறப்பும் உறுதியாகிறது.
இதில் எவ்வித மாற்றமும் இல்லை. உலக இயக்கம் இந்த நியதியில் இயங்கிவருகிறது. பிறப்பும் இறப்பும் சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப விளையின் தாக்கத்தால் கணக்கிடப்பட்டு உயிரினங்கள் பிறவி எடுக்கின்றன. மனிதனாக இருந்தவன் மனிதனாகவே பிறக்க வேண்டும் எண்பது விதியல்கல
ஆவியுலக ஆய்வாளர்கள், உலக அறிஞர்கள் பலரும் இவ்வாறே கருதுகிறார்கள். “மரணத்தின் பின் மனிதர் நிலை” என்ற தமது நூலில் தமிழறிஞர் மறையங்கள் பல சான்றுகளுடன் விளளார்கள். அதைப் பின்பற்றி மதுரை ஆதினமும் இக்கருத்துக்களை வலியுறுத்தி நூல் எழுதியுள்ளார்.ஜீவ முக்தி
இம்மண்ணுலகிற்கு பல சிறப்பு அம்சங்கள் உண்டு. உயிரினங்களின் வளர்ச்சிக்குப் போதிய அளவு பஞ்ச பூதங்களின் தாக்கம் இருப்பதைக் காணலாம். மலைகள், காடுகள், ஆறுகள், குளங்கள், கடல்கள், ஏரிகள், தடாகங்கள், சோலைகள்,அருவிகள் போன்ற இயற்கைச் செல்வங்களும் குறைவின்றி உள்ளன.
கருணைக் கடலான பரம்பொருள் இவ்வுலகில் என்ன குறை வைத்துள்ளான்? சொல்லுங்கள்? பிற உயிரினங்கள் மேலே கண்ட இயற்கைச் செல்வங்களை நெறி பிறழாமல் அளவோடு முறையாக அனுபவித்து வாழ்ந்து மடிகின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் நெறிபிறழ்ந்து தவறான முறையற்ற வழிகளில் பயன்படுத்தி வருவதன் விளைவே இத்தகையே பேரழிவைச் சந்திக்க நேரிட்டது. ஜீவ முக்தி
இது எப்படி இருந்த போதிலும் பிறப்பும்இறப்பும் ஒரு நியதிக்கு உட்பட்டு முறையாக நடந்து வருவதைக் காணலாம்.
நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல தெய்வங்களை நியமித்து அருளாட்சி செய்கிறான் பரம் பொருள்! அவன் கருணைதான் என்னே! என்னே!
துர் தேவதைகள், பேய்கள், பிசாசுகள் தீய ஆவிகள் போன்றவைகளை ஏன் படைக்க வேண்டும்? பிற உயிர்களுக்குக் கேடுகளே விளைவிக்கும் இவைகள் ஏன் படைக்கப்பட்டன? நியாயமான கேள்வி.
பிறவி எடுக்கும் உயிர்கள், முற்பிறவியில் செய்த கொடிய பாவங்களுக்கு உரிய தண்டனையை இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். இவைகளையெல்லாம் நிறைவேற்றவே மேல கண்ட தீய சக்திகள் படைக்கப்பட்டன. அவைகளும் தமக்கு உரிய சக்தி அளவுதான் செயல்பட முடியும்! மீறிச் செயல்பட இயலாது; முடியாது! ஜோதி தரிசனம் ஜீவ முக்தி
பள்ளியில் முதல் மாணவனாக விளங்குபவனைத் தலைமை ஆசிரியர் பரிசு அளித்துப் பாராட்டுகிறார். அதே சமயம் தவறு செய்யும் மாணவனைத் தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்குகிறார். இதுபோல்தான் உலக இயக்கமும்!
பிறவிக் கடலை முழுமையாகத் தாண்டிப் பேரின்ப வீடு அடைந்தவர்களுக்கு மட்டுமே பிறவி இல்லாமற் போகிறது. பாவச் சுமைகளை முழுமையாகக் கரைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தே ஆகவேண்டும்.
மக்களுக்கு நல்வழிகாட்டவே இப்புண்ணிய பூமியில் அவதார புருஷர்கள், ஞானிகள். யோகிகள், மகான்கள், ரிஷிகள், முனிவர்கள் தோன்றினார்கள். ஜீவ முக்தி
காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசக சுவாமிகள், வள்ளலார் போன்ற மகான்கள் எல்லாம் பிறவி எடுத்ததின் சிறப்பையும் அதை நல்ல முறையில் பயன்படுத்திப் புண்ணியம் சேர்த்துப் பிறவாப் பேரின்ப நிலையடைய வேண்டும் என்றும் அருளிச் சென்றார்கள்.
இம்மண்ணுலக வாழ்க்கையினின்றும் நாம் அறிந்து கொள்ளும் சில முக்கியமான உண்மைகள்:
1. பிறப்பு எப்படி நிச்சயமாகிறதோ, இறப்பும். அதேபோல் உறுதியாகிறது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை! ஜீவ முக்தி
2. பரம் பொருளின் திருவடிகளை நிலையாகப் பற்றும்வரை பிறப்பு இறப்பு என்ற சுழற்சிக்கு உட்பட்டே ஆக வேண்டும்.. கர்ம வினைகள், பாவ புண்ணியங்கள் இவைகளுக்கு ஏற்பவே பிறவி அமைகிறது! மனிதன் மனிதனாகவே பிறக்க வேண்டும் என்பது நியதியல்ல!
4. மலம் தின்னும் பன்றிகள், நாய்கள் போன்றவை முற்பிறப்பில் மகாக்கொடிய பாவங்கள் செய்தவைகளே என ஆவியுலக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
5. மகாப் புண்ணிய சீடர்கள் அவதாரப் புருஷர்களாகப் பிறந்து மக்களுக்கு நல்வழிகாட்டிச் செல்கிறார்கள்.
6. காலம் நமக்காகக் காத்திருப்பதில்லை. கருணைக் கடலான பரம்பொருள், காலத்தைப் பொன்னைப்போல் போற்றி வாழ வேண்டும் என்பதற்காகவே அளித்துள்ளான்.
8. நன்மை செய்யாவிடினும் தீங்கு, கேடு செய்யாது இருப்பதே கோடி புண்ணியம் ஆகும்.
9. பூவுலகில் நாம் வாழ்கின்ற காலத்தில் ஏற்படும் துன்பங்கள், கேடுகள் இவைகளைத் துடைத்து நல்வழிகளும் ஆலோசனைகளும் அளிக்க விண்ணுலகப் புண்ணிய சீடர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பேருண்மையை இம்மண்ணுலக வாழ்க்கையில்தான் அறிய முடிகிறது.
எனவே பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியினின்றும் விடுபட்டுப் பரம்பொருளின் திருவடிகளை நிலையாகப் பற்ற நமக்கு எல்லாம் வல்ல கருணைக்கடல் அருளாசி வழங்க வேண்டுமென வணங்கி விடைபெறுகிறோம், வணக்கம். மனித ஜோதியை
எல்லாம் நன்மைக்கே
ஒரு ஊரிலே நேர்மையான மக்கள் போற்றும் ராஜா ஒருவர் ஆட்சி செய்தார். ராஜாவுக்கு ஏற்றவர்போல் மதிநுட்பமான மந்திரி ஒருவர் இருந்தார். ராஜாவுக்கு அவர் கேட்கும்போதும், கேட்காதபோதும் சிறந்த ஆலோசனைகள் வழங்குவதில் மந்திரியின் பங்கு அளவிட முடியாதது. ராஜாவைப் போற்றிப் புகழும் மக்கள். மக்களின் நலனையே முதற் கடமையாக நினைக்கும் அரசன். இப்படி மங்களகரமான ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மனித ஜோதியை
ராஜாவின் பொழுது போக்குகளில் மிகவும் விருப்பமானது காட்டிற்கு சென்றுவேட்டையாடுவது. வேட்டைக்குச் செல்லும் போதெல்லாம் மந்திரியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அன்றும் அப்படித்தான் மந்திரியை அழைத்துக் கொண்டு நீண்டதூரம் காட்டிற்குள் சென்றுவிட்டார். மதியம் காட்டில் பசி. சரியான உள்ள பழங்களைப் பறித்து ராஜாவின் முன்பு வீரர்கள் வைத்திருக்கிறார்கள். மனித ஜோதியை
ராஜா மகிழ்ச்சியோடு தான் இடுப்பில் சொருகி இருந்த கத்தியால் வெட்டி வெட்டி பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்படி சாப்பிடும் பொழுது தவறுதலாக பழம் மேல் பட்ட கத்தி நழுவி ராஜாவின் சுண்டு விரலில் பட்டுவிட்டது. ரத்தம் பீறிட்டு வந்த உடன் வீரர்கள் கொண்டு வந்த மூலிகைகளை கசக்கி விரலின் மேல் வைக்க ரத்தம் வழிவது நின்று விட்டது.மந்திரியிடம் ராஜா சொன்னார். “மந்திரியாரே இன்று நான் மகிழ்ச்சியாக இருந்தேன். மதிய உணவு உண்ட பிறகு மேலும் தீவிரமாக வேட்டையாடலாம் என்று இருந்தேன்.
ஆனால் நான் நினைத்ததற்கு நேர்மாறாக ஆகிவிட்டது. சரி வாருங்கள் அரண்மனைக்கு திரும்பலாம்” என்று சொன்னார். உடனே மந்திரி, “பரவாயில்லை மகாராஜா. எல்லாம் நன்மைக்குத்தான்” என்று சொன்னதுதான் தாமதம் ராஜாவுக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது. “என் விரல் வெட்டுப்பட்டது. உனக்கு நன்மையா?” மந்திரி உடனே குறுக்கிட்டு சொன்னார். “இல்லை மகாராஜா சிலநேரங்களில் இதுகூட நன்மையாகத்தான் முடியும்”. உடனே ராஜாவுக்கு கோபம் உச்சத்திற்கு போய்விட்டது.
Read More : ஜோதி தரிசனம் ஜீவ முக்தி
என் விரல் அடிபட்டது – ஜீவ முக்தி
“என் விரல் அடிபட்டது உனக்கு அவ்வளவு விளையாட்டாக போய் விட்டது. யாரங்கே. உடனே இவரை கைது செய்து சிறையில் அடையுங்கள். இது எனது கட்டளை. நான் காலையில் வேட்டையாடியதை விட இன்னும் ஒரு மடங்கு அதிகமாக வேட்டையாடிவிட்டுதான் அரண்மனைக்கு திரும்புவேன்” என்று கோபமாக கூறிவிட்டு தனது தேவைக்கு ஒரு சில காவலர்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதி வீரர்களை மந்திரியை சிறையில் அடைப்பதற்கு பாதுகாப்பாக அனுப்பி விட்டார். மந்திரியோ எல்லாம் விதிப்பயன் என்று நொந்து சிறைக்கு சென்று விட்டார்.
ராஜா ஒரு சில வீரர்களுடன் வேட்டையாடுவதில் தீவிரம் காட்டி வெகுதூரம் சென்று விட்டார். காட்டின் எல்லை தாண்டியதும் காட்டு வாசிகள் ராஜாவையும் மற்ற வீரர்களையும் சூழ்ந்து கொண்டனர். ராஜா பேசுகின்ற வார்த்தைகள் காட்டுவாசிகளுக்கு புரியவில்லை. காட்டுவாசிகளின் பேச்சு ராஜாவுக்கு விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது.
ஏதோ நமக்கு விபரீதம் நடக்கப் போகின்றது என்பது மட்டும். ராஜா நினைத்தது போலவே காட்டு காளிக்கு முன்பாக பலி பீடத்தில் ராஜாவை நிறுத்தி காளிக்கு பலி கொடுக்க தயாராகி விட்டார்கள். காட்டு ராஜா நாட்டு ராஜாவை வெட்டுவதற்கு உத்தரவு கொடுப்பதற்கு முன் பூசாரியிடம் தன் பாசையில் ராஜாவின் உடலை சோதனை செய்ய சொன்னான். பூசாரியும் ராஜாவின் உடலிலே ஏதேனும் ஆயுதங்கள், மந்திரித்து வைத்திருக்கும் தாயத்துக்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்க்கும் பொழுது ராஜாவின் கையை கவனித்து விட்டார். உடனே பூசாரி காட்டு ராஜாவிடம், ”ராஜா நாம் மோசம் போகப் பார்த்தோம். இவரின் விரலிலே வெட்டுப்பட்டு ரத்தம் வெளியேறி இருக்கிறது. எந்த குறையும் இல்லாத நாட்டை ஆளக்கூடிய மன்னனை நாம் பலி கொடுத்தால்தான் நமது கோரிக்கைகளைகாளி ஏற்றுக் கொள்வாள். இல்லை என்றால் நாம் காளியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று சொல்லி ராஜாவை பலி கொடுப்பதில் இருந்து விடுவித்து விட்டார்கள்.
ராஜாவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனது அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். பிறகுதான் அவனுக்கு மந்திரி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “எல்லாம் “நன்மைக்குத்தான்.” உடனே மந்திரியை விடுவித்து தனது ராஜ்ஜியத்தில் பாதியை மந்திரிக்கு எழுதி வைத்து மந்திரியை போற்றி புகழ்ந்தான். இந்த கதையின் மூலம் நமக்கு விளங்கும் உண்மை என்னவென்றால் சில நேரங்களில் நாம் நினைத்த காரியம், நமது எதிர்காலமே அதில்தான் அடங்கி இருக்கிறது என்று நம்பி முயற்சித்த காரியம் நடக்காமல் நின்றுவிடும். நாம் அதனை இதைவிட இரண்டு மடங்கு நன்மை கிடைக்கப் போகின்றது
என்று மனதினை தேற்றிக்கொண்டு அடுத்த காரியத்தில் நமது செயலை, மனதை செயல்படுத்த வேண்டும். நம் கண்களுக்குத் தெரியாத. புலப்படாத, நமக்கு நன்மை விளைவிக்கக்கூடிய ஆன்மாக்கள் (நம்மோடு வாழ்ந்து மறைந்த நம் வீட்டார்கள், நண்பர்கள், உறவினர்கள்) நமக்கு நாம் செய்யக்கூடிய காரியத்தை செய்யவிடாமல் தடுத்திருக்கலாம். அது அப்போதைய சூழ்நிலையில் நமக்கு அடடா காரியம் வெற்றியடையவில்லையே என்று மனசு சங்கடப்பட்டாலும் அதன் பிறகு நமக்கு கிடைக்கப்போகும், இரட்டிப்பான வெற்றி நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
எனவே இதனைப் படிக்கும் வாசகர்களுக்கு கூட ஒரு சில காரியங்கள் நடைபெறாமல் தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் நிச்சயம் அது வெற்றிக்கான முதல்படி, எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்.
Read Also ; https://tamil.vallalyaar.com/jeevakarunyam/