முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் 

முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் 

முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள்

முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் – சென்னை மாநகரின் தெற்குக் கரையோரம் அடையாற்றுக்கு தென் பாகத்தில் மயிலாப்பூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் மயில்கள் மிகுந்திருந்தது. அவற்றின் ஆர்ப்பரிப்பினால் இந்திருத்தலத்தை மயில் + ஆர்ப்பு + ஊர் = மயிலாப்பூர் என வழங்கினர். இத்திருத்தலம், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர் முதலான சைவ சான்றோர்களும் திருமங்கையாழ்வார் எனும் வைணவப் பெரியாரும் பாடிப் பரவிய பெருமையுடைத்தது.

 

திருமயிலைத் திருக்கோயில்

திருமயிலையில் அன்னை பராபரையாள் தானே விரும்பி வந்துதோன்றி அனைவருக்கும் அருள்பாலித்து வரும் புனித இடமே முண்டகக் கண்ணி அம்மன் திருக்கோயிலாகும். மக்களின் அழைப்பினை ஏற்று அன்னை வந்து போகும் இடங்களைக் காட்டிலும் அவள் தானே விரும்பி வந்து குடி கொண்டிருப்பதுமேலும் சிறப்பானதாகும்.

துண்டாகத் தோன்றும் விழிகள்: முண்டு என்றால் ‘சிறு துண்டு’ என்றும் பொருள் ‘துண்டாகத் தனியாக அமைந்தாற்போல் விளங்கும் எடுப்பான கண்களை உடையவள்’ என்பதால் முண்டகக் கண்ணி என்று அழைத்தனர்.

அன்னையின் கோயில் அமைப்பு: இத் திருக்கோயில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. மூன்று நிலைகள் கொண்ட இராஜகோபுரம் பொலிவுடன் விளங்குகிறது. இராஜகோபுர வாயிலில் நின்றாலே கருவறையில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு வடிவமான அன்னை முண்டகக் கண்ணியைத் தரிசிக்கலாம்.

Also Read: மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்

நாகம் வழிபடும் அன்னை

அன்னையின் கர்ப்பக் கிரகத்துக்குப் பின்புறமுள்ள புற்றிலிருந்து ‘நாகம்’ ஒன்று நாள்தோறும் இரவு வேளையில் வெளியே வந்து அன்னையின் திருவடிகளைப் பணிந்து செல்லுகின்றது. இதுவும் இக்கோயிலில் உள்ள மற்றொரு நிகழ்ச்சியாகும்.

நாகக்குடையும், மலர் இருக்கையும்: அம்பிகையாளின் சுயம்பு வடிவத்துக்கு மேலாக தாமரையில் அமர்ந்திருப்பவளாக அவளைப் புனைந்து காட்டும் ஒரு சிறிய விமான அமைப்பைக் காணலாம். அவள் தலைக்கு மேலாக ஐந்து தலைநாகம் படம் விரித்து அவளுக்கு நிழல்தரும் குடைபோல் விளங்குகின்றது.

 

அம்மை நோயை தீர்ப்புகள் தனிப்பவள்:

வைசூரி பொதுவாக ‘வைசூரி” என்னும் அம்மை நோய்வந்து விட்டால் இந்தக் கோயிலிலே வந்து வழிபடுபவர்கள் பெருகி விடுகிறார்கள். அம்மை ஒரு தொத்து நோய் என்று இந்தக்கால டாக்டர்கள் சொன்னாலும் மக்கள் இந்த அம்மனையே துணையாக நம்புவார்கள்.

நாகதோஷம்

‘நாகதோஷம்’ என்பது பொதுவாக ராகு. கேதுக்களின் பாதகமான அமைப்பை வைத்து அறியப்படுவது. இந்த தோஷம் பெற்ற பெண்கள் அம்பானைத் தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும். அவன் அருளால் தோஷத்திலிருந்து உறுதியா

விடுபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வந்து வழிபடுவது மிகவும் நல்லது என்பார்கள். இப்படி வழிபட்டு வந்த கன்னிப் பெண்ணின் திருமணம் விரைவில் கை கூடியுள்ளது. ஜென்ம ராசி அல்லது ஜென்ம இலக்கினத்தில் பாவக்கிரகங்கள் வலுத்திருந்தாலும், சப்தம ஸ்தானத்தில் பாபங்கள் வலுத்திருந்தாலும் திருமணம் சீக்கிரம் நிகழாமல் தடைபடலாம். நல்ல கணவன் வாய்க்காமல்போகலாம். இந்த தோஷத்திலிருந்து விடுபடவும் அம்பாளை பூசித்து நற்பலன் கண்டவர்கள் பலர்,

மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம் என்பது எட்டாமிடத்தில தீய கோள்களின் வலுவான அமைப்பால் குடும்ப வாழ்வும், கணவனின் ஆயுளும் பாதிக்கப்படுவது ஆகும். எட்டாமிடத்தில் வலுவான பாபங்கள் பார்த்தாலும் இந்த தோஷம் ஏற்படும். இந்த தோஷம் விலகவும் அம்பாளை வணங்கி அருள்பெற்று நன்மை கண்டவர்கள் பலர்.

புத்திர தோஷம்

புத்தரதோஷம் என்பது புத்திர ஸ்தானமோ, புத்திர காரகனோ, புத்திர ஸ்தானாதிபதியோ கெடுதலாக அமைவதால் ஏற்படுவது, இந்த தோஷமும் அம்பாளை வழிபட்டால் விலகி விடுகின்றது.

குடும்ப வாழ்வையும், தொழில் மற்றும் உலக வாழ்வையும் பாதிக்கும் கிரக தோஷங்களை எல்லாம் நீக்கி அருளுகின்றாள். அம்பிக்கையாகிய முண்டகக் கண்ணி அன்னை பதினாறு பேறும் தரும் பராபரையாக அம்மா இங்கே விளங்குகின்றன.

தோஷம் விலகும்

இத்தகைய தோஷம் அமையப் பெற்றவர்கள் இந்த முண்டகக் கண்ணி அம்மனை தொடர்ந்து ஏழு செவ்வாய் கிழமைகளிலோ, வெள்ளிக் கிழமைகளிலோ வந்து தரிசித்துப் பூசித்து வந்தால் இந்த தோஷங்கள் எல்லாம் விலகி, நன்மைகள் ஏற்பட்டு வருகின்றதைக் காணலாம்.

செவ்வாய்க்கு ‘மங்களம்’ என்று ஒரு பெயர். செவ்வாயின் அருட்பார்வை மங்களகரமான செயல்களையும், நிகழ்ச்சிகளையும் வாழ்வில் ஏற்படுத்தும்.

நாகாபரணியான அம்பாளைத் தரிசித்துத் தொழுதவுடன் புற்றுவழிபாட்டையும் மேற்கொண்டு, நாகத்தையும் முறையாக பூஜிக்க வேண்டும்.

சிவாலாயங்கள்

இத் திருத்தலத்தில் புகழ்பெற்ற ஏழு சிவாலயங்கள் உள்ளன. இத் திருத்தலத்தில் திருவள்ளுவர் திருக்கோயில் பின்னாளில் எழுந்தது. செல்வ நலம் மட்டும் அல்லாமல், கல்வி நலமும் இவளே தருகின்றாள்.

எடுத்த முயற்சிகளில் வெற்றியும் தந்து வாழ்த்துகின்றாள். அஷ்டலட்சுமியும் இவளே! இவள் கருணையிருந்தால் எல்லாத் தெய்வங்களும் உதவி செய்ய ஓடோடி வருகின்றன, அவைகளை இயக்கும் ஆதி சக்தி இவளே அல்லவா!•

 

சிவகுளிகை மருந்து பயன்கள்

எக்காலத்திற்கும். ஏற்றுக்கொள்ளக்கூடிய சித்த மருத்துவ முறைகளில் எளிதானது சிவகுளிகை ஒன்றேயாகும். இது

செய்முறைகளில் முழுக்க முழுக்க மூலிகை இனங்கள் சார்ந்துள்ளது. வேதியியல் மருந்து வகை அறவே சேர்க்கப்படாதது. சிவகுளிகை செய்முறை பாடல்களில் கூறியவாறு மருத்துவத்துறையில் அனுபவம் பெற்று வாழையடி வாழையாக வரும் பாரம்பரிய செய்முறை கைபக்குவம் அவசியம் தேவைப்படுகிறது.

இந்த சிவகுளிகை பல்வேறு துணை மருந்துடன் இணைந்து கொடுக்க சிறு குழந்தை முதல் பெரியோர் வரை கொடுக்க தீர்வு காண இயலாத பல நோய்கள் குணப்படுத்தப்பட்டுள்ளது.

சிவகுளிகைத் தொடர்புடைய எட்டு பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதனைபதிவு பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் படித்து பட்டம் வாங்கியுள்ள மருத்துவர்கள் எளிதாகக் கூறப்பட்டுள்ள சிவகுளிகை மருந்து செய்து நோய்களை எளிதில் குணப்படுத்திவிடலாம்.

 

பாடலும் எளிய பொருளுரையும்:-

 

பாரப்பா சித்தரெல்லாஞ் சொன்ன மார்க்கம் பாங்கான வைத்தியரே இந்நூல் பாரு பாரப்பா மாந்தமுதற் பிணிகட்கெல்லாம் பாடினேன் குளிகை ஒன்று பண்பாய்க்கேளு சேரப்பா பதினெட்டுப் பேருங்கூடித் திறமாகக் கோர்வையாய் பாடினார்கள் ஆரப்பா அதைக் குறுக்கி குளிகைக்குள்ளே

அட்டமா சித்திகள் பெறலாம்.

 

ஆச்சப்பா சிவகுளிகை ஒன்று சொன்னேன் அப்பனே நூல்களில் சொல்லவில்லை காச்சப்பா குளிகையுட கருவைச் சொன்னால் காணாம் லோடுமடா பிணிகளெல்லாம் போச்சப்பா பிணிகள் முலைப் பாலிலிட்டால் பேரான முப்பத்திரண்டு தோடம் போகும் ஆச்சப்பா மாந்த மெலா மாண்டுபோகும் அப்பனே வேலியுட சாற்றிற்போகும்.

 

பொருள்:-

தாய்ப்பாலில் சிவகுளிகையை உரைத்து கொடுத்தால் பெரும் பேருடைய முப்பத்திரண்டு வித தோடங்கள் (குற்றங்கள்) போக்கும்.

சித்திர மூல சாற்றில் சிவகுளிகை உரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் அனைத்தும் அடிபட்டு மடிந்து மண்ணாய்ப் போகும்.

பெருமைக்குரிய இஞ்சிக் கிழங்கு சாற்றில் உரைத்து கொடுத்தால் முட்டு தோடம் என்பதும் குணமாகும்.

இதமான வெந்நீரில் சிவகுளிகையை உரைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் பெண்களால் வரும் குளிதோடம், பட்சிதோடம் பதினெட்டும் பறந்து விடும்.

பொதிகை மலையை இருப்பிடமாகக் கொண்ட அகத்தியர் சொன்ன மருந்தியல் முறைகள் தவறாது. ஒருநாளும் உழைத்த பலன் வீண் போகாது. இந்த சிவகுளிகையை பார்த்த அன்பர்கள் அனுபவத்தில் கண்டால் எல்லாம் சித்தியாகும்.

கேளப்பா யெங்களிட குளிகைக்கெல்லாம் கிருபையாய் நொச்சிலை சாற்றிலோடும் வாளப்பாசன்னியோடு சயயிருமலுக்கு மைந்தா வேலியுட சாற்றிற்போகும் வாளப்ப கரப்பானுக் கெல்லாமைந்தா வளமான அமுக்குராச் சாற்றிற்போகும் ஆளப்பா குழந்தை கட்கு வந்த நோய்கள் அப்பனே குளிகையினாலடக்கலாமே.

பேரிரக்கம் கொண்டு உயரிரக்கம் காட்டி நொச்சி இலை சாற்றில் உரைத்து பெரியோர்களுக்கு கொடுத்தால் உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.

 

மகனே சன்னி ஈளை இருமல் – சயம் காசம் போன்ற நோய்களுக்கு சித்தர மூலச்சாற்றில் வெண்ணெய்க் கலந்து சிவகுளிகை உரைத்துக் கொடுத்தால் குணமாகும்.

 

வளமான வாழ்வு பெற அமுக்குரா சாற்றில் சிவகுளிகை உரைத்து கொடுத்தால் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.

 

சிறு குழந்தைகளுக்கு வரும் அனைத்து நோய்களும் சிவகுளிகை ஒரு மருந்தே போதும். அதில் எல்லாம் அடங்கி விடும் என்பதாகும்.

 

சித்த மருத்துவம் பயின்ற பட்டதாரி மருத்துவர்கள்,

பதிவு பெற்ற மருத்துவர்கள், பாரம்பரியமாக வரும். மருத்துவர்கள் இம்மருந்து எளிய முறையில் கூறியிருப்பதால் சிவகுளிகை செய்து வைத்துக் கொண்டிருந்தால் எல்லா நோய்களும் உடனுக்குடன் குணமாகும்.

ஏதாவது ஓர் தெய்வ வழிபாடு செய்பவருக்கு எளிதில் கைக்கூடும்.

மருத்துவச் சிகிச்சையில் குணம் கண்டால் சமூகத்தில் நல்ல பெயரும் மதிப்பும், புகழும் உயரும். ஆனால் நவநாகரிக உலகத்தில் இம்முறை சிறிது சிறிதாக மறைந்து வருவது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

இதற்கு அகத்தியரே துணை நிற்க வேண்டும் என்று இறைஞ்சி இறையருளால் நிறைவு பெறுகிறது.

மேலும் இது போன்ற பல்வேறு விதமான ஜோதிட மற்றும் ஆன்மீக தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நவசக்தி பாபா டாட் காம் மூலம் இனைந்து இருங்கள் மீண்டும் வேறு விதமான சிறப்பான பதிவில் சந்திப்போம்

சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த எத்தனையோ அம்மன் தலங்கள் இருக்கின்றன நம் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அம்மனுடைய

வரலாறுகள் அவர்களுடைய அற்புதங்கள் குறித்து தொடர்ந்து நாம் பார்க்கலாம் சென்னையில் திருவேற்காடு திருவேற்காட்டில் அமைந்திருக்கின்ற

தேவி கருமாரியம்மன் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாரியம்மன் கோவிலிலுக்கும் மூல ஸ்தலமாக விளங்குவது தேவி கருமாரியம்மன் ஆலயம் தான் அதேபோல சென்னையில் அமைந்திருக்கின்ற பல்வேறு

ஆலயங்களில் சிறப்பும் பெருமையும் வாய்ந்த ஸ்தலம் என்று சொன்னால் ஒவ்வொரு ஸ்தலமும் மிகவும் பெருமை வாய்ந்த சக்தி வாய்ந்த ஸ்தலங்கள் தான் மண்ணடி மாரியம்மன் போன்ற எத்தனையோ அம்மன் கோயில்கள் இருக்கிறது தொடர்ந்து ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அம்மனாக பார்க்கலாம்

சென்னையில் மிகவும் பிரபலமான அம்மன் ஆலயங்களில் காளிகாம்பாள் ஆலயமும் ஒன்று இந்த காளிகாம்பாள் ஆலயத்தில் உள்ளே ஸ்ரீ வீர பிரம்மேந்திரர் மற்றும் குரு தட்சணாமூர்த்தி சுவாமிகள் மற்றும் பிரித்திங்கரா தேவி போன்ற பல்வேறு தெய்வங்களும் அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் துன்பங்களால் துயரங்களால் வாடிக் கொண்டிருப்பவர்கள் செய்வினை சூனியக்

கோளாறுகளால் அவதிப்பட கூடியவர்கள் இவர்கள் அனைவருமே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்கு நடக்கின்ற ராகு கால பூஜையில் கலந்து கொண்டால் மிகப்பெரிய அளவில் அதற்கு உண்டான பலனை பெறலாம் திருமண தடைகள் நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வீடு கட்டுவது போன்ற நிம்மதியான வாழ்க்கை

நமக்கு கிடைப்பதற்கு இந்த சக்தி வாய்ந்த காளிகாம்பாள் அருள் புரிவார் இப்படிப்பட்ட சக்தியும் மகிமையும் வாய்ந்த காளிகாம்பாள் ஆலயத்திற்கு ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்து வருவது நாம் செய்த பாக்கியம் என்று தான் கருத வேண்டும்

இந்த பெருமைமிகு காளிகாம்பாள் ஆலயத்தில் ராகு தோஷம் நிவர்த்தி பெறுவதற்காகவும் கேது தோஷம் நிவர்த்தி பெறுவதற்காகவும் அதற்குண்டான வழிபாடுகள் என்பதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் வெகு ஜோராக வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ராகு கேது தோஷங்கள் அளவில் இருந்து விடுபட

வேண்டும் என்று இங்கே ராகு கேது பரிகாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது அர்ச்சனை செய்து வழிபடுவது போன்ற பல்வேறு வழிபாடுகள் இருந்தாலும் நவக்கிரகங்களில் எந்த

விதமான கிரகங்களாக இருந்தாலும் எல்லா விதமான கிரக கோளாறுகளிலிருந்தும் நம்மை காத்து ரட்சித்து அருள் புரிவது காளிகாம்பாள் என்பது எவராலும் எந்த சூழ்நிலையிலும் மறுக்க முடியாத உண்மையாகவும் அனுபவ ரீதியாக உண்மையாகவும் இருக்கிறது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *