சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும்
புசங்கத் ராசு மூர்த்தி, தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக் பிட்சாடனர் உருவத்தை தாங்கி, முனிவர்களின் மனைவிகள் கற்பை நழுவச் செய்தபோது, முனிவர்கள் அபிசார யாகம் புரிந்து, அதிலிருந்து வந்த பாம்பை சிவன் மேல் ஏவ. அவர் விளையாட்டாக அதை எடுத்து ஆபரணமாகத் தரித்துக் கொண்டு நடனமாடிய கோலம்.
கந்த புராணம் இதைக் கூறுகிறது. சில கலையழகு வாய்ந்த ஆலயத் தூண்களில் இக்கோல மூர்த்தியைக் காணலாம்.
கங்காதர மூர்த்தி, இதைப் பற்றிய புராணங்கள் பல உள்ளன. வைணவப் பெருமையை நிலைநாட்டும் கதையும், உண்டு. சைவ நூல்களின் படி சிவபெருமானும் உமையும் கயிலையங் கிரியில் வீற்றிருக்கும் போது விளையாட்டாக உமை. சிவனின் கண்களை மூட உலகமே இருண்டு. சகல ஜீவராசிகளும் ஒடுங்குகின்றன. அந்த அச்சத்தால் பார்வதியின் உடலில் வியர்வை பெருக. அதுவே கங்கையாக மாறியது என்பது ஒன்று மகாவிஷ்ணு திரிவிக்ரம அவதாரம் எடுத்து ஒரு காலால் புவியை அளக்க, ஒரு கால் விண்ணோக்கி எழும்பி வைகுண்டம் எட்டியது. அப்பொழுது அங்கு இருந்த பிரம்மன் புனித விஷ்ணுவின் பாதங்களை கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய, அதுவே கங்கையாய்ப் பெருகியது என்பதும் ஒரு புராணம். முதல் புராணத்தின்படி கங்கை பெருக சிவன் காத்தாவாயிருந்தபடியால் சிவன் கங்காதரமூர்த்தி ஆனார். அக்கங்கையை தன் சடையில் சிவன் தரித்தார்.
திருவாசகம் இதனை உரைக்கின்றது.
பல்லவர்களை வெகுவாக இப்புராணம் கவர்ந்தது. அதிலும் இராசசிம்ம பல்லவன் தான் எடுப்பித்த தளிகளில் இச் சிற்பத்தைச் செதுக்கி உள்ளான். திருச்சிராப்பள்ளி மலைக்குகையில் மகேந்திர வர்மன் செதுக்கிய கங்காதர சிற்பமே மிக நேர்த்தியானது.
Read Also கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும்
கங்காவிசர்சன மூர்த்தி
அயோத்தி அரசனான சகரன் ஒரு அசுவமேத யாகம் செய்து குதிரையை அனுப்பினான். அமரேசன் என்னும் ஒரு அரசன் அக்குதிரையை அனுப்பினான். அமரேசன் என்னும் ஒரு அரசன் அந்த குதிரையைப் பிடித்து கபிலர் தவம் செய்யுமிடத்தில் அவர் பக்கத்தில் கட்டிவிட்டான்.
சகரரின் மைந்தர்கள் அதை அலைந்து கண்டுபிடித்து, கபிலர்தான் கவர்ந்தார் என நினைத்து விட்டார்க்ள. அவரை வதைக்க அவர் கோபத்துடன் விழிக்க, அவ்வளவு பேரும் சாம்பலானார்கள். இக்குலத் தோன்றல் பகீரதன் தன் மூதாதையர்களை எழுப்ப கங்கை நீர் உதவும் என்பதால், சிவனை நோக்கித் தவமியற்றினார். சிவனும் கங்கையை வரவழைத்து,
தன் சடையில் அடக்கி அதன் வேகத்தைக் குறைத்து பூமியில் புரளவிட்டார். இக்கோலமே சங்காவிசர்கன் மூத்தியாகும். கங்காதர சிற்பங்களே இம்மூர்த்திக்கும் பொருந்தும். இராமாயணம், விஷ்ணு புராணம், தசமஸ்கந்தம் சிரந்தங்களில் இக்கதையை காணலாம்.
திரிபுர ரந்தக மூர்த்தி
மூன்று அரக்கர்கள் தாரகாட்சன், கமலாட்சன் வித்யுன்மாலி, பொன் வெள்ளி, இரும்பினால் கோட்டைகள் கட்டிக் கொண்டு தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தனர். தேவர்கள் அஞ்சி, சிவனிடம் சரண்புக, அவர் அரக்கர்களை அழிக்க ஆயத்தமானார்.
போருக்குத் தேர் தயாராகிவிட அந்தத் தேருக்கு சந்திரர் சூரியர் சக்கரங்களாகவும், தாரகைகள் விதானமாகவும், மோட்ச லோகம் மேல்வீரியாகவும், நதிகள் கொடியாகவும் அஷ்டபர்வதங்கள் தூணாகவும், புராணம், ஆகமம். சாஸ்திரம் மணிகளாகவும் அமைக்கப்பட்டன.
வேதங்கள் நான்கும் குதிரைகளாகின. பிரும்மா தேர்ச்சாரதியாக கங்கை, யமுனை சாமரம் போட மேரு மலையை வில்லாக்கி, வாசுகியை நாண் ஆக்கி, விஷ்ணு பாணம், அக்கினி அம்பின்கூர், வாயு அம்பிற் கட்டிய இறகு, இவ்வளவையும் தயாராக்கிச் சிவன் முன் நிறுத்தினர்.
மனிதனும் தெய்வம் ஆகலாம்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்
ஆரம்பத்தில் அறிவுதேடல், நல்லோர் இணக்கம், மிகவும் அவசியம். அன்பு, பணியு இந்த இரண்டும் பறவைகளின் இறக்கைகள் போ நமக்கு அவசியம் இதையே “பணிவுடையன். இன்சொலன் ஆதல்” என்ற குறள் வலியுறுத்துகிறது. நம்மிடையே எழக்கூடிய சங்கடங்கள், துன்பங்கள் யாவும் பணிவின்மை, இனிய சொற்களைப் போலத் தெரியாமையாலேயே ஏற்படுகின்றன. அன்பு, நாண், ஒப்புரவு. கண்ணோட்டம், வாய்மையோடு ஐந்து சால்யூன்றிய தூண் என்றார் வள்ளுவர். இவை ஐந்தும் கட்டிடத்தை தூங்கும் தூண் போன்றவை. நாம் இந்த தூண் இல்லாமல் காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டுமே ஏதோ முட்டுக்கொடுப்பதுபோல ஏதோ செய்து கொள்கிறோம்.
ஆரம்பம் முதல் கடைசிவரை இத்தூண்களை யாரும் வைப்பதில்லை. அதனால் நாம் வாழ்க்கையில் பெரும்பாலும் தோல்வி, விரக்தியையே சந்தித்து, அதனால் மனம் பாதிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டு மண்டயைப் போடுகிறோம்.
மக்களிடையே தெய்வப் பற்றும், தன்னம் பிக்கையும் இருப்பின் வாழ்க்கை தென்றலைப் போல இருக்க வயது. உணவு, சூழ்நிலை. காரணமாக சில பாதிப்புகள் ஏற்படலாம். சுதந்திரம் பெற்றபின் தற்போதுள்ள அரசியல்வாதிகள் மக்கள் மொழி குறுகிய பற்று, ஜாதி உணர்வுகளைத் தூண்டி, வெளியேற்றி தாங்கள் மட்டும் பலவற்றுள் உபர்த்திக் கொள்கிறார்கள். மக்கள் நிலையில்தான் உள்ளனர். பாமர ஜனங்களைச் சுமை தாங்கிகளாகவும் கோஷம் போடவும் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கீழ்க்கண்ட சில கோட்பாடுகளையும் மனித வாழ்வில் கடைப்பிடித்தோமானால் வாழ்க்கை பாரமாக இருக்காது. மனதில் சுமையும் இருக்காது.
1. சுறுசுறுப்பு
2. நேர்மை
3. பணிவு
4. அன்பு
5. முகமலர்ச்சி (அழுதுவடியாமை)
6. அனுசரணை
7. ஒவ்வொரு கணமும் உயிர்ப்புடன் செயலாற்றுதல்.
8. மறந்துகூட பிறருக்குத் துன்பம் தராமை
9. நல்லொழுக்கம்
10, இறைப்பற்று இவை மிக மிகத் தேவை.
ஒரு பந்துக்குள் காற்று எவ்வளவு உள்ளதோ அவ்வளவுக்கு பந்து குதிக்கும். எழும்பும். காற்று குறைவாக இருப்பின் அதற்கேற்பத்தான் பந்து உபரவோ, தாழவோ குதிக்கும். பாபா கூறுவார்.
1 ஒவ்வொரு நாளையும் அன்பிலே துவங்கு.
2. நாளை அன்பிலேயே கழிக்கவும்.
3. மனம் என்ற பையில் அன்மையே நிரப்பிக்கொள்.
4. ஒவ்வொரு நாளும் அன்பிலேயே முடி
அந்தக் காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மெட்ரிக்குலேஷன் படிச்சிருக்கான் என்று கூறிக் கொள்வார்கள். ஏதோ ஐ.ஏ.எஸ். படிச்சமாதிரி. பிள்ளைகளிடம் பொய் சொல்லாமை, கறுகறுப்பு, பணிவு, முகமலர்ச்சி, சோம்பேறித்தனம்இல்லாமை இருப்பின் எல்லோரும் அப்படிப்பட்ட விரும்புவதுடன். வேலைக்கும் எடுத்துக்கொள்வார்கள். எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் நல்ல குணம் உடையவன். எப்போதும் துரு துரு என்று இருப்பான். ஆனால் படிப்பு மட்டும் வராது. அந்தப் பையன் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் பேசிவேன், நாள் சைக்கிள் கடை அல்லது ஸ்கூட்டர் ரிப்பேர் செய்யும் கடைகளில் சம்பளம் இல்லாமல் வேளை கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள் என்றேன்.
ஓரிரு வருடம் கழித்து அந்தப் பையனைச் சந்திக்க நேர்ந்தது. தான் ஸ்கூட்டர் ரிப்பேர் செய்து சம்பளம் பெறுவதுடன், வீட்டிலும் வாகனங்களை ரிப்பேர் செய்து வருமானமும் பெறுகிறான்.
இன்னும் சிலர் சமையல்காரர்களுடன் வேலைக்குச் சென்று சமையல் கலைகளைக் கற்று இன்றுபேர் பெற்ற சமையல் கலைஞராக உள்ளனர். அரசாங்கம் நமக்கு வேலை தரும் என்று காலரை உயர்த்திக் கொண்டு போனால் கொடி கட்டவும், பசை தடவி நோட்டீஸ் ஒட்டவும். ஜே போடவுமே நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள். தற்கால அரசியலைப் போல மோசமான ஒன்று கிடையாது. நல்லவர்களை அரசியலில் பார்ப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. எங்கும் ஊழல், சுயநலம். பேசக்கற்றுக் கொண்டால் தலைவராகி விடலாம். என்றோ ஒருநாள் சாயம் வெளுக்காமல் போகாது.
ஒவ்வொருவரும் தலையில் மிளகாய் அறைக்க தலை கிடைக்குமா என்று அலைகிறார்கள். திறமை, புத்திசாலித்தனம் இல்லையேல் நம் தலைகள் இவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளும், பிழைப்பதற்கு ஒரு வேலையை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் முன்னேறக் கற்றுக் கொள்வது அவசியம். தறு தலைகளுடன் சுற்றாமல் நல்லவர்களுடன் நட்பு கொள்வது மிக அவசியம். இளவட்டங்கள் காதல். கீதல் என்று தங்களை லைலா-மஜ்னு போல் நினைத்துக் கொண்டு அலையக்கூடாது. தினமும் செய்தித்தாளில் காதல் பிறகு நோதல் அதன்பின் சாதல் என்ற விஷயங்களைத்தான் பார்க்க முடிகிறது. இதற்குப் பெற்றோரும் காரணம், பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியர்களின் லீலைகளும் அவ்வப்போது செய்தியாக வருகிறது. ஆசிரியர்கள் தெய்வத்துக்குச் சமமானவர்கள் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகக்கவனமாக இருப்பதுடன், பயிற்சிப் பள்ளியில் நல்லொழுக்கமும், இறையுணர்வுக்கு முக்கியத்துவமும் தர வேண்டும்.
இப்போது எந்த துறையானாலும் நன்கொடை லஞ்சம் கொடுத்துதான் இடம்பிடிக்க வேண்டியுள்ளது.
ஆசிரியர்களிடம் உண்மையான இறையுணர்வு கிடையாது. நேர்த்திக் கடன் செலுத்திவிட்டால் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணத்தை கொட்ட மாட்டார். நாடு முன்னேற உலகில அமைதி ஏற்பட, மக்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவோம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிவகைகளைக் காண்போம்.
பக்தியில் உயர்ந்தது குருபக்தியே
பக்தி முக்தி தரும். பக்தி என்ன செய்யாது? அது எல்லாம் செய்யும் திறம் உடையது என்கிறார் ஆதிசங்கர்.
“பக்தி கிம் ந கரோதி” என்பது அவருடைய திருவாக்கு. பக்தி என்பது ஒரு விருட்சம். இதற்கு மூன்று கிளைகள் உண்டு.
1. தெய்வ பக்தி
2. குரு பக்தி
3. அடியார் பக்தி (ஜங்கம் பக்தி) இந்த மூன்றில் குருபக்திதான் உயர்ந்தது.
குரு பக்தியினால் நலம் பெற்றவர்கள் பலர். அப்பூதி நாயனார், பெருமழலைக் குறும்பர். குரநமசிவாயர், உபமன்யு, ஏகலைவன் முதலியோர் என உணர்க. குருநாதர் நமது கருமேனியைக் கழிக்க வந்த திருமேனி உடையவர். குருநாதரை மனிதனாக எண்ணுவது பாவமாகும். அவரைக் கடவுளாக எண்ணி வழிபட வேண்டும்.
அருணகிரிநாத சுவாமிகள் இறைவனைக் குருவடியாக வந்து அருள்புரியுமாறு வேண்டுகிறார். “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”. அவரின் வேண்டுகோளின்படி மூவருக்கும் தேவருக்கும் எட்டாத முழுமுதற் கடவுளாகிய முருகப்பெருமான் குருவடிவில் வந்து அவருக்குப் பரிபூரண அருள் புரிந்தார்.
“திருவடியுந் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப் பொரு வடிவேலு கடம்பும் தடம்புயம் ஆறிரண்டு மருக வடிவான வதனங்களாறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்து என்உள்ளங் குளிரக் குடி கொண்டவே”
தியாக பிரம்மம் கூறுகின்றார்:
“குரலேக எடுவண்டி குனிகிதெலியக போத என்று திருப்பெருந்துரையில் மணிவாசகருக்குக் குருந்த மரத்தின் கீழ் வாங்கருணைத் தடங்கலாகிய பரமேசுவரன் குருவடிவாய் வந்து ஆட்கொண்டு அருளினார்.
இதனை, “செந்தழல் புரை திரு மேனியுங்காட்டி திருப்பெருந்துரையுறை அந்தணனாவதுங் என்றதாலும், கோயிலுங்காட்டி, காட்டிவந்தாண்டாய்” “கோகழியாண்ட குருமனிதன்தாள்வாழ்க” என்ற திரு வாக்கினாலும் உணர்க.
குரு பக்தியினால் உயர்ந்தவர் ஆரணி, இது இவர் வரலாறு. கங்கைக் கரையில் அயோத தௌமியர் என்ற ஒரு மாமுனிவர் ஒரு குருகுலம் அமைத்து மாணவர்களுக்கு வேதவேதாந்தங்களை உபதேசித்து வந்தார்.
அவர் ஞானபானுவாக விளங்கினார். அவரிடத்தில் ஐம்பது மாணவர்கள் அடக்கமே வடிவாக இருந்துக் கொண்டு கலை நலம் பெற்றுக் கொண்டு வந்தார்கள். பாஞ்சால அரசகுமாரனாகிய ஆரணி என்றவன் தலை மாணாக்கனாக விளங்கினான். அசையாத குருபக்தியும், திண்ணிய நுண்மதியும் அடக்கமும் பண்பும் பொருந்தி விளங்கினான்.
ஒருநாள் காலை குருநாதர் ஆரணியைப் பார்த்து “ஆரணி! நமது குருகுலத்திற்கு சொந்தமாகிய வயலில் மடை உடைத்து தண்ணீர் வீணே போகின்றது. நீ போய் மடையை அடைத்து வருக” என்று கட்டளையிட்டார்.
ஆரணி என்றவன் அரசகுமாரனாகிய தனக்கு வயல்வேலையை குருநாதர் தருகின்றாரே என்று எண்ணாமல், குரு வார்த்தைக்கு மறுவார்த்தை இல்லை என்று எண்ணி மண்வெட்டியை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு வயலுக்கு சென்றான். புல்லுடன் கூடிய களி மண்ணை வெட்டி வெட்டி மடையை அடைக்கலானான்
. ஆனால் மடை அடைபடாமல் தண்ணீர் ஏகமாக ஓடி மடையை உடைத்துக்கொண்டே இருந்தது. காலை தொடங்கி மாலைவரை இடையறாது மடையை அடைத்தும் மடை அடைபடவில்லை.
ஆரணி உள்ளம் நொந்து குருமொழியை நிறைவேற்றாத இந்த உடம்பு இருந்து என்ன பயன்? என்று கருதி மடையில் மண்வெட்டி இட்டு அதன் மீது தலைவைத்து, சேற்றில்படுத்துக்கொண்டான். அவனுடைய அசைவில்லாத குரு பக்தியைக் கண்டு வெள்ளப் பெருக்கு அஞ்சி அவனைத் தாண்டாமல் அணை போட்டதுபோல் தடைபட்டு நின்றது.
ஆரணி சேற்றில் தண்ணீருக்குள் கிடந்தான். இரவில் விளக்கின் முன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்த அயோத தௌமியர் முன் வரிசையில் அமர்ந்து, கூரிய அறிவுடன் பாடம் கேட்கும் ஆரணியைக் காணாது திகைத்தார்.
“மாணவன்களே! ஆரணி எங்கே?” என்று கேட்டார். மாணவர்கள், மாணவர்கள், “குருநாதா! ஆரணி காலையிலே மடை அடைக்கச் சென்றவன் திரும்பி வரவில்லை” என்றார்கள்.
குருநாதர், “மடை அடைப்பது சிறிய வேலைதானே? ஆரணி உத்தமமான மாணவன். அவன் வீண் காலம் கழிக்க மாட்டானே, எங்கு சென்றான். என் உத்தரவில்லாமல் எங்கும் செல்லமாட்டானே” என்று எண்ணினார். தீவட்டியை ஏந்திக்கொண்டு வயல்புறம் சென்றார். அங்கு ஆரணியைக் காணாது உள்ளம் உலந்தார்.
“மகனே ஆரணி கண்ணா ஆரணி” என்று உரத்த குரலில் அழைத்தார். தண்ணீருக்குள் கிடந்த ஆரணி “குருநாதா நான் தண்ணீருக்குள் இருக்கிறேன்” என்றான். “என்ன காரணம்?” என்று கேட்டார்.
“சுவாமி காலை தொடங்கி மாலை வரைக்கும் மடை அடைத்தேன். அது அடை படாமையால் என்னையே தியாகம் செய்து கொண்டு மடையில் படுத்துவிட்டேன். இப்பொழுது பெருக்கெடுத்த வெள்ளம் அடைபட்டு விட்டது”.
“மகனே! எழுந்து வா” என்றார். ஆரணி தண்ணீரைப் பிளந்து கொண்டு எழுந்து வந்தான். அதனால் அவனுக்கு உத்தாலகன் என்ற பெயர் ஏற்பட்டது. உத்தாலகன் என்ற சொல்லுக்குப் பிளந்து கொண்டு வந்தவன் என்பது பொருள்.
சாத்திரங்களில் உத்தாலகனைப் பற்றிப் இடங்களில் வருகின்றன. பல
குருநாதர் ஆரணியின் எல்லையில்லாத குருபக்தியைக் கண்டு திருவுளம் மகிழ்ந்து, அவன் தலையில் கைவைத்து, “உனக்கு எல்லா ஞானங்களும் உண்டாகும்.” என்று பரிபூரண ஆசி புரிந்து அனுப்பி வைத்தார்.
மேலும் இது போன்ற ஆன்மீக மற்றும் ஜோதிடம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள
நவசக்தி பாபா டாட் காம் மூலம் இனைந்து இருங்கள்