சென்னையை அடுத்து மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களிக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன. சித்தர்கள் என்பவர்கள் இம்மண்ணில் அவதரித்த மகான்கள், அவர்கள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,ஆச்சரியம் என்ற இந்திரிய சுகங்களை துறந்தவர்கள். அனுபவித்து, ஆய்ந்து, குழம்பி, குருவருள் பெற்றுத் தெளிந்து பரிசுத்தநிலை அடைந்தவர்கள்.
“18 சித்தர்களும் பூஜை மலர்களும்”
18 சித்தர்களும் அவர்களுக்குரிய பூஜை முறைகளையும் பார்ப்போம்.
ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் ; சிவ சிவ என்ற ஜபத்துடன் இவர் அவதரித்ததால் ‘சிவ வாக்கியர்’ என்று நாமம் பெற்றார். ‘சித்தத்தில் சிவனை வைத்தால் தங்கமாக தரணியில் பவனி வருவீர்கள்’ என்று உபதேசித்தவர் இவர் பாடல்களில் ‘சிவ’சொற்கள் ஏராளம் உள்ளதால் ‘சிவ வாக்கியம்’ எனப்படுகிறது.
சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை நீக்குபவர். இவரை முறைப்படி வழிப்பட்டால் மன வியாதி, மன அழுத்தம், மன சஞ்சலங்கள் தீரும்.
ஸ்ரீ கைலாய கம்பளிச் சட்டை முனி சித்தர் : உரோம ரிஷி எனப்படுபவர். ரோமாபுரியிலிருந்து வந்தவர் அஷ்டமா சித்தி பெற்றவர். இவரது பாடல்களில் உவமை, சிலேடை நயம் மிகுந்து இருக்கும். இயற்றிய நூல்கள் உரோம ரிஷி வைத்தியம் 1000, நாகா ரூபம்.
சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் சந்திர கிரக தோஷங்களை நீக்குவர். மனப் பிரச்சினைகள் சகலமும் தீரும். திங்கட்கிழமைஇவருக்கு சிறப்பானது.
Also Read: https://navashakthibaba.in/guava-fruit-is-a-secret-to-the-world/
மகா போகர் சித்தர்
பழனி முருகனுக்கு நவபாஷானச் சிலையை உருவாக்கியவர்.
இயற்றிய நூல்கள் போகர் வைத்தியம் 1000, போகர் 12000 ஆகியன. பழனி மலையில் முருகன் கர்ப்பகிரகத்துக்கு அருகில் சித்தி அடைந்தார்.
இவருக்கு ஜாதிபுஷ்பம், சாமந்திப்பூ, சம்பங்கிப்பூ கொண்டு பூஜிக்கலாம்.
செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிக்கும் இவர் செவ்வாய் தோஷத்தை போக்குவர். நிலத்தகராறு, திருமணத்தடை நீங்கி வெற்றி கிடைக்கும்.
செவ்வாய் கிழமை போகருக்கு உகந்த நாளாகும்.
ஸ்ரீ காக புஜண்டர் சித்தர்
திருச்சியில் அவதரித்தவர். எதிலும் உண்மைகாணும் மகான். ‘மாசிலா மனமே மகேசனின் மாளிகை’ என்று தன் ஞான பாடல்களில் சித்தர் தத்துவத்தை சிறப்புடன் கூறியவர். பிரலய காலத்தில் கிருஷ்ணனின் சுதர்சன சக்கரத்தை கட்டுப்படுத்தியவர்.
இயற்றிய நூல்கள் காக புஜன்ட ஞானம், காக புஜன்ட காவியம் 33 ஆகியன. நீலோத்பவம், நீல சங்கு, தவனம், மரு ஆகிய புஷ்பங்களில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
குருபகவானை பிரதிபலிப்பவர் . குரு தொடர்பான தோஷங்கள் விலக்குவர். பயணம், புத்திரன், வியாபார நஷ்டம், வயிறு பிரச்சனைகள் தீர்ப்பவர். இவருக்கு ஏற்ற கிழமை வியாழன்.
ஸ்ரீ புலிப்பாணி சித்தர்
போகரின் முதல் மாணவரான இவர் சீனாவில் ஜனித்தவர். புலியின் மேல் தண்ணீர் கொண்டு வந்ததால் புலிப்பாணி சித்தர் என்றானார். காய சித்தி, ரதவாத தேர்ச்சி பெற்றவர்.
இயற்றிய நூல்கள் புலிப்பாணி ஜாலம் 325, புலிப்பாணி வைத்தியம் 500 ஆகியன .
வில்வம், சாமந்திப்பூ அல்லது அரளிப்பூ கொண்டு அர்ச்சிக்கவேண்டும்.
வில்வம், சாமந்திப்பூ அல்லது அரளிப்பூ கொண்டு அர்ச்சிக வேண்டும்.16போற்றிகளுடன் “ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி! என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.
செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர் இவர்.
செவ்வாய் தோஷத்தைப் போக்கி நிலத் தகறாறு. சொத்து தகராறு, திருமணச்சிக்கல் நீங்கும்.
இவருக்கு உகந்த நாள் செவ்வாய்.
Read Also : https://navashakthibaba.in/are-you-longing-to-build-a-house/
ஸ்ரீ சட்டை முனி ஸ்வாமி
இலங்கை தாயகம். தமிழ் நாடு வந்தவர். விவசாயக் கூலியான இவர் போகர், அகத்தியரிடம் ஞானம் பெற்றவர்.
இயற்றிய நூல்கள் சட்டை முனி கற்பகம் 100, சட்டை முனி நிகண்டு-1200 ஆகியன.
ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி அடைந்தவர். இவர் கூறிய 16 போற்றிகளுடன் ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ, வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். ”ஒம் ஸ்ரீம் சட்டை முனி ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.
இவர் கேது பகவானைப் பிரதிப்பலிப்பவர் சித்தப் பிரம்மை, பைத்தியம், மனக்கோளாறுகள், மறதி, வீண் பிரம்மை போன்றவற்றை நீக்குபவர். இவருக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை.
ஸ்ரீ அகப்பேய் சித்தர்
திருவள்ளுவர் பரம்பரையில் வந்தவர் இயற்ப்பெயர் நாயனார். வியாசரின் குரு அருள் பெற்றவர்.
வில்வம் அல்லது பச்சிலைகள், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை கொண்டு 16 போற்றிகளுடன் அர்ச்சித்து “ஒம் அகப்பேய் சித்தரே போற்றி ” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். இவர் குரு பகவானை பிரதிபலிப்பவர்!
குருதொடர்பான தோஷங்கள், பணப்பிரச்சனை, புத்திரபாக்கிய கோளாறு, வியாபார நஷ்டம், வறுமை தீரும். இவருக்கு ஏற்ற நாள் வியாழன்.
ஸ்ரீ குதம்பை சித்தர்
குதம்பை முனியின் குருவருளால் திருவருள் பெற்றவர். அமரத்துவப் பாடல்கள் பல… இயற்றியவை குதும்பை ஞானசூத்திரம்- 18 குதம்பை சித்தர் பாடல்கள் ஆகியன.
இவருக்குரிய 16 போற்றிகளுடன் “ஒம் ஸ்ரீ குதம்பை சித்தரே போற்றி” என்று 108 முறை கூறி ஜெபிக்க வேண்டும். வில்வம், பச்சிலைகள், துளசி, கதிர்பச்சை, 3 விபூதிப்பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
நவகிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால் சித்தபிரமை,
மனக்கோளாறுகள், ஜாதகத்தடைகள், களத்திர தோஷம் நீங்கும். இவருக்கு வெள்ளிக் கிழமை உகந்த கிழமையாகும்.
ஸ்ரீ வள்ளலார் ஸ்வாமிகள்
நீரில் விளக்கு எரிய வைத்தவர். ‘கடை விரித்தோம் கொள்வாரில்லை இனி தீபத்தினையே கடவுளாக கொண்ட ஜீவ காருண்ய நெறியில் உய்யுங்கள்’ என்றவர்.
இவருக்குறிய 16 போற்றிகளை விபூதியும், ஜாதிப்பூவும் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.பிறகு ‘ஓம் ஸ்ரீம் வள்ளலார் சித்த சுவாமியே போற்றி’ என்று 108 முறை கூறி ஜெபிக்க வேண்டும். “அருட் பெருஞ்சோதி – தனிப் பெருங்கருணை இவரது மூலமந்திரமாகும்”.
நவகிரகங்களில் இவர் புதன் பகவானைப் பிரதிபலிக்கிறார். புதபகவானால் ஏற்பட்ட தோஷங்கள் இவரை துதித்தால் விலகும். கல்வி தடை, வியாபாரம், பிரச்சனை, தோல்வியாதிகள் சரியாகும். கற்பனை திறன், கலைத்திறன் பெருகும். இவருக்கு புதன் கிழமை உகந்த நாளாகும்.
ஸ்ரீ இடைக்காடர் சித்தர்
யாதவர் குலத்தில் பிறந்த இவர் பெருமாளின் அவதாரமாக பேசப்படுகிறார். நவபாத சித்தரிடமிருந்து வைத்தியம், ஜோதிடம், ஞானம், யோகம் ஆகியவற்றை கற்றார்.
இவருக்குகந்த தென்னம்பூ, மல்லிகைப்பூ கொண்டு 16 போற்றிகளை கூறி அர்ச்சிக்க வேண்டும். பின் ‘ஒம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் ஸ்வாமியே போற்றி’ என்று 108 முறை ஜெபிக்கவேண்டும்.
புதன் பகவானை பிரதிபலிக்கும். இவரை வணங்குவதால் புதனால் வரும் தோஷம் போகும். கல்வி, வரிகள், வியாபாரம் இவற்றால் வரும் |பிரச்சனை விலகும். உகந்த நாள் புதன். கல்வி, கலைத்திறன் பெருகும்.
ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர்
பெரும் வணிகரான இவருக்கு சிவபெருமானே மகனாக கிடைத்ததால் திருவெற்றியூரில் முக்தி அடைந்தார். பல அதிசயங்கள் நிகழ்த்தியவர்.
இவருக்கு மருதாணிப்பூ, சம்பங்கிப்பூ, மரு ஆகியவற்றால் அர்ச்சித்து 16 போற்றிகளை கூறிஅர்ச்சிக்க வேண்டும். பின் ‘ஒம் ஸ்ரீம் பட்டிணத்தடிகளார் சித்தர் ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை ஜெபிக்கவேண்டும்.
சூரியனை பிரதிபலிக்கும் இவரை வழிபடுவதால் சூசிய நோஷம் விலகும், முன்றிணை கோளாறுகள், தந்தை மகன் பிரச்சனை, இதய நோய் ஆகியவை தீரும் இவருக்கு ஏற்றநாள் ஞாயிறு.
ஸ்ரீ கடுவெளி சித்தர்
சீர் பெற்ற பிரபஞ்சமே சுத்தவெளி என்றவர். ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி’ பாடல் பாடியவர். ‘கடுவெளி சித்தர் பாடல்கள்’ இவர் இயற்றியதாகும். கிரகங்களில் சூரியனை பிரதிபலிப்பவர். இவரை வழிபடுவதால் சூரியனால் ஏற்படும் தோஷம் போகும். சொத்து தகராறு, புகழ்இன்மை சரியாகும். அரசியல் வெற்றி, கல்வி, வெற்றி இதய நோய் தீர்வு கிடைக்கும். உகந்த நாள் ஞாயிறு.
ஸ்ரீ கஞ்சமலை சித்தர்
மலைகளிலேயே பிறந்து வாழ்ந்தவர். மூலிகைகளையே ஆடைகளாய் அணிந்து வந்த மருத்துவ சீலர்.
சுக்கிரனை இவர் பிரதிபலிக்கிறார். ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்குவார். இவரை வழிபடுவதால் களத்திற தோஷம். திருமணத்தடை, கணவன் மனைவி, மாமியார் மருமகள், பிரச்சனைகள் தீரும். இவருக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை.
ஸ்ரீ சென்னிமலை சித்தர்
பிளவுபட்டு இரண்டு நாக்கு உடையதால் இவர் பிண்ணாக்கீசர் என்ற காரணப்பெயர் பெற்றவர். பாம்பாட்டி சித்தரிடம் ஞானம் பெற்றவர். தீராத நோய்களை எல்லாம் போக்கியவர். நவகிரகங்களில் சுக்கிரனை பிரதிபலிக்கும் இவரை முறைப்படி வழிப்பட்டால், சுக்கிர தோஷம் விலகும். திருமணத்தடை, குடும்ப பிரச்சனைகள், பழிபாவம் பிரச்சனை விலகிப்போகும். லஷ்மி அருள்கிட்டும் இவருக்கு ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை.
“கபிலர் சித்தர் சாபம் நீங்கிய அற்புதம்”
ஸ்ரீ கபிலர் சித்தர்
சாபம் பெற்று சிவபெருமானால் சாப விமோசனமும் பெற்றவர். அப்படி இவருக்கு காட்சியளித்த சிவன் ‘தேனு புரீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றவர். இவரது பலபாடல்கள் கடைச்சங்க இலக்கிய நூல்களில் உள்ளன.
சனியை பிரதிபலிக்கும்
இவரை வணங்குவதால் சளி தோஷம் விலகும். ஏழறை சளி, அஷ்டம் சனி, கண்டச்சனியால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். படிப்பு மந்தம். வியாபார மந்தம், தோல்வியே தொடரும் நிலை, எழும்பு நோய்கள் விலகும் பிரம்மஹரத்தி தோஷம் நீங்கும்
இவருக்கு ஏற்ற நாள் சனிக்கிழமை. ஸ்ரீ கருவூர் சித்தர் ஸ்வாமிகள்
சோழ நாட்டில் கருவூரில் பிறந்தவர் இளம் வயதிலேயே ஞானியான இவர் இரசவாதம் கைவரபெற்றவர். காசி சென்று தங்கலிங்கம் செய்தவர்.
இவரை வழிபடுவதால் ஜாதகத்தில் உள்ள சனி தோஷம், ஏழரைசனி, அஷ்டம சனி, கண்டசனி போன்ற குறைகள் போகும். இரும்பு, மோட்டார். பிரச்சனைகள், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இவருக்குரிய நாள் சனிக்கிழமை,
ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்
இவரை மருதமலைச் சித்தர் என்றும் அழைப்பார்கள். இவர் இளம் வயதிலேயே பாம்புகளுடன் பழகியவர். பாம்பு விஷமெடுத்து சேமிப்பது, விற்பது விஷமுறிவு செடிகளை காடுகளில் தேடுவது வைத்தியம் செய்வது என்றிருந்தவர். சிறந்த மருத்துவர் மருதமலையில் விஷவைத்திய ஆய்வுக்கூடமே நடத்தியவர். ரசவாதம், கைவரபெற்றவர்.
நவக்கிரகங்களில் இவர் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபடுவதால் நாக தோஷம் அகலும், கவலை அகன்று மனதெளிவு ஏற்படும். கணவன்- மனைவி பிரச்சனை திரும் போதை, புகை, குடிப்பழக்கம் அகலும், களத்திரதோஷம் நீங்கும். வீண் பயமகன்று நிம்மதி கூடும். இவருக்கு பூஜை செய்ய சிறந்த நாள் சனிக்கிழமை.
இந்த தகவலை ஆலய நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் 18 சித்தர்களில் மிகப் பிரபலமான கோரக்கர் சித்தர் இங்கு இல்லையே? என்கிற ஏக்கம் நீங்கவில்லை. ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஆலயம் நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல் நாரில் உள்ளது.
நான்கு ஜாம பூஜைகளும்,
அபிஷேகங்களும்
மகா சிவராத்திரி நான்கு ஜாமமும் சிவலிங்க பூஜையும், வழிபாடும் நடைபெற வேண்டும்.
சிவ பூஜை வழிபாடு செய்வோர் ஒவ்வொரு ஜாமமும் செய்ய வேண்டிய அபிஷேகங்களும் அர்ச்சனை செய்ய வேண்டிய பூக்களின் விவரங்களும் வருமாறு;-
முதல் ஜாம பூஜை
முதல் ஜாம பூஜை போது மூலமூர்த்திக்கு பஞ்ச கவ்யத்தினால் அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு சாத்தி வில்வம், தாமரை மலர் போன்றவற்றால் அர்ச்சித்து, பயிற்றம் பருப்பு அமுதினை (பச்சை பயிறு பொங்கல்) நிவேதனம் செய்து பூஜிக்க வேண்டும்.
இரண்டாம் ஜாம பூஜை
இரண்டாம் ஜாம பூஜையின் போது பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து அகிற்குழம்பு (அகில்) சாத்தி, வில்வம், தாமரை, துளசி முதலியவற்றால் அர்ச்சனை செய்து பாயாசம் நிவேதனம் செய்து வழிப்பட வேண்டும்.
மூன்றாம் ஜாம பூஜை
முன்றாம் ஜாம பூஜையின் போது தேன் அபிஷேகம் செய்து, பச்சை கற்பூரச் சுண்ணம் சாத்தி,வில்வம்,செண்பகமலர் கொண்டு அர்ச்சித்து, எள்அண்ணம் நைய்வேத்யம் செய்து வழிபட வேண்டும்
நான்காம் ஜாம பூஜை
நான்காம் ஜாம பூஜையின் போது கருப்பஞ்சாற்றினால் அபிஷேகம் செய்து, குங்குமம் சாத்தி, வில்வம் நந்தியாவர் தனம்பூக்கள் கொண்டு அர்ச்சித்து, சுத்ததானம் படைத்து பூஜை செய்யவேண்டும் முக்கியமாகும்.
ஜாம பூஜையின் போது வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது முக்கியமாகும்.
செவ்வாய் தோஷமா ? பயப்படாதீங்க!
எந்த ஒரு ஜாதகத்தையும் மேலோட்டமாக பார்த்துவிட்டு, உடனே இதில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று பீதியை கிளப்பிவிடும் சில அரைகுறை ஜோதிடர்களால் பல ஜாதகர்களது திருமண வாழ்வு தள்ளிப்போவதும், தடைபடுவது மாக இருக்கிறது. ஆகவே, அனுபவபூர்வமாக சில விஷயங்களை தெரிந்து கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.
லக்னம், சந்திரன்,சுக்ரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷஜாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற பாப கிரகங்கள் இருந்தாலும் இப்படியே கணக்கில் கொள்ள வேண்டும்.
செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரத்தில் இருந்தால் தோஷம் இல்லை. சூரியன், குரு, சனி ஆகியவர்களுடன் சேர்ந்தோ அல்லது பார்க்கப்பட்டிருந்தாலோ தோஷம் ஆகாது. இந்த செவ்வாய் தோஷம், தம்பதிகளில் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாமலிருந்தால் தோஷமாகும்.
ஆகவே, இப்படி இருப்பவர்களுக்கு திருமணம் செய்யகூடாது. இவை சாதாரண பொது விதிமுறை மட்டுமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தேவகேரளம் முதலிய சாஸ்திர கிரந்தங்களில் செவ்வாய் தோஷத்தின் பரிகார விதிமுறைகளாக பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அத்தகைய விதிவிலக்காகிய பரிகாரங்களும் இல்லாவிட்டால்தான் ஜாதகங்களை செவ்வாய் தோஷம் என்று ஒதுக்க வேண்டும். இனி விதி விலக்காக கூறப்பட்டவை பார்போம்.
1. கடகலக்னம், சிம்ம லக்னம் என்ற இந்த இரண்டு லக்னங்களிலும் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
2. செவ்வாய் இருக்கும் 2ஆம் இடம் மிதுனம் அல்லது கன்னியானால் தோஷம்இல்லை.
3. செவ்வாய் இருக்கும் 4ஆம் இடம் மேஷம்
அல்லது விருச்சிகமானால் தோஷமில்லை.
4. செவ்வாய் இருக்கும் 7ஆம் இடம் கடகம், மகரமாகில் தோஷமில்லை
5. செவ்வாய் இருக்கும் 8ஆம் இடம் தனுசு, மீனமாகில் தோஷமில்லை.
6. செவ்வாய் இருக்கும் 12ஆம் இடம் ரிஷபம் அல்லது துலாமானால் தோஷமில்லை.
7. சிம்மம் அல்லது குடும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
8. குருவுடன் செவ்வாய் சேர்ந்தால் தோஷமில்லை
9.சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்தால் தோஷமில்லை.
10.புதனுடன் சேர்ந்தாலும், புதன் பார்த்தாலும் தோஷமில்லை.
11.சூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் தோஷமில்லை.
12.செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கு 1,4,5,7,9,10 இவைகளில் எங்கு இருந்தாலும் தோஷமில்லை.
13. 8, 12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், விருச்சிகம், மகரமாயின் தோஷமில்லை.
14.தனது உச்ச வீடான மகரத்திலாவது, சொந்த வீடான மேஷ, விருச்சிக ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
15.சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியாவது, இவர்களால் பார்க்கப்பட்டாவது செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
6.செவ்வாய் தன் மித்ரர்களான சூரியன், சந்திரன், குரு, இவர்களது வீட்டில் அதாவது சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் எங்கு இருந்தாலும் தோஷமில்லை.
ஆகவே, எந்த ஒரு ஜாதகத்தையும் முழுமையாக அலசி ஆராய்ந்து, எந்தெந்த விஷயங்களுக்கு எதுவெல்லாம் விதி விலக்காகவும் பரிகாரமாகவும் இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து, உணர்ந்து ஜாதக பலன்களை கூறினால்தான் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி முழுமையான பலன்களை அனுபவிக்க இயலும். அப்படி இல்லாமல், மேதாவித் தனமாகவும், அரை குறையாகவும் ஜாதகபலன் கூறி ‘பீதியை’ கிளப்பிவிட்டால், ஜாதகர்களுக்கு குழப்பமும், ஜோதிடம் மீது அவநம்பிக்கையும் ஏற்படுவதோடு, கிரகதேவதா தோஷபீடை ஏற்பட்டு அவதிப்பட நேரிடும் என்பதை அறிந்து கொள்ளவும்.