இதிலுள்ள சகல இயற்கை பொருள்களும் நமக்குத்தான் (மனிதர் களுக்காக)
ஆண்டவனால் படைக்கப்பட்டுள்ளது என்றாலும், ஒரு சில குறிப்பிட்ட வஸ்துக்களை நாம் தொடக்கூடாது என்ற பொருள்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளில் கொய்யா மரம் ஒன்று. கொய்தல் என்றால் பறிப்பது. ஆகவே, கொய்யா (பறிக்காத) மரம் ! பெயரே எவ்வளவு எச்சரிக்கை செய்கிறது பாருங்கள். பறிக்காத மரம் என்றால் பின் இது யாருக்காகத்தான் பயன்படும் என்கிறீர்களா? வசந்த காலத்தை அறிவிக்கும் குயில் இனங்கள் கிள்ளை மொழிபேசும் கிளி போன்ற பறவை இனங்களுக்காக சர்வேஸ்வரனால் படைக்கப்பட்டது, “எல்லாவித பழங்களுமே பறவை இனங்களுக்குச் சொந்தம்தானே? அவைகள் சுவைத்த பின்புதான் எஞ்சியவை நமக்கு மட்டும் ஏன் உரிமை கிடையாது? என்ற ஐயப்பாடு சிலருக்கு எழக்கூடும். இதற்கு பதில் “கொய்யா” என்ற பெயரிட்ட தமிழ் “சித்தர்களை” த்தான் போய் கேட்க வேண்டும்!
இப்படி இறைவனால் பறவை இனங்களுக் காக ஒதுக்கப்பட்ட கொய்யா மரமும் சில சந்தர்ப்பங்களில் மருந்தாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மனிதர்களுக்கு உரிமையுண்டு. கொய்யா மரத்தின் இலையும், வேரும், மிகுந்த மருத்துவ பயன் உடையதாகும். மரம்தான் எல்லோருக்கும் தெரியுமே! அதைப்பற்றி விமரிசனம் தேவையில்லை, அடிமரமும் கிளைகளும் வழவழப்பான சருமம் போன்று மிருதுவாக இருக்கும். மரத்தில் ஏறினால் வழுக்கி விழ நேரிடும் எனவே “என் மீது ஏறாதே” நான் உனக்காக அல்ல என்று சொல்லாமல் சொல்லி விடுகிறதல்லவா?
மருத்துவபயன்
இதன் இலையை மட்டும் எடுத்து குறுக அரிந்து ஒரு கைப்பிடி அளவு மண்சட்டியில் போட்டு ஒரு உலர்ந்த மிளகாய் தட்டிப்போட்டு வதக்கி பின்பு இரண்டு குவளை தண்ணீர்விட்டு ஒரு குவளையாகச் சுண்டகாய்ச்சி அரைமணிக்கு ஒருதரம் ஒருமுடக்கு வீதம் குடிக்க வாந்தி,பேதி என்ற காலரா,மந்தம், வாய்வு, பொருமல்,வரட்சி, தாகம்,ஆகியன அடங்கி போகும்.
அஜீரணம், செரியாமந்தம், குடல்,வாய்வு உண்டான போது கொய்யா இலை கொழுந்தாக எடுத்து காலையில் சிறிதளவு பச்சையாகவே மென்று தின்றுவிட்டு, பகல் (மதிய உணவு) கஞ்சி போன்ற லகுவான உணவு எடுக்க காலை உணவு நிறுத்தி விடவேண்டும்.
வேண்டும்.
வேர் முதல் இலை வரை மருத்துவமே
பல்வலி உபத்திரம் தாங்க முடிய வில்லையா? எந்த பல்பொடி தேய்க்கலாம் என்று யாரையும் போய் ஆலோசனை கேட்க வேண்டாம். நாள் தோறும் தோட்டத்திலுள்ள கொய்யா இலைகளை பறித்து வாய் நிறைய போட்டு நன்றாக மென்று குதப்பி பற்களை தேய்த்து சுத்தம் செய்து வர பல்வலி நீங்கிபோகும்.
இலைக்கு துவர்ப்புத்தன்மையுடையதால் நீரைக்கட்டும் குணத்தை மிகுதியாக பெற்றுள்ளது. அத்துடன் காரல் கருணையின் நமைச்சல் செய்கை அடங்கிப் போக அதனுடன் இந்த இலையை வேக வைத்து சுத்தம் செய்து லேகியம் செய்வது சித்தர் வைதியத்தின் முறைகளில் ஒன்றாகும்.
வேர்
இந்த மரத்தின் வேரும் ஊரில் பரவி தொற்றிவரும் காலரா நோய் காலங்களில் கொய்யா இலை கஷாய முறைப்படி போட்டுக் குடித்துவர நோய்வராமல் தடுக்கவும். வந்தபின் குணமாக்கும் சக்தியும் கொண்டது.
ஒரு பலம் மெல்லிய வேரை எடுத்து அதை நசுக்கி அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறப்போட்டு வைத்து, காலையில் இந்த ஊரல் கஷாயத்தை ஒரு சங்கு அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வர நிற்காத பேதியும் நின்று போகும். இந்த ஊரல் நீரைக் கொண்டு ஆசனத்தில் வெளித்தள்ளும் வளையம் போன்ற சதை மூலத்தைக் கழுவி வர அது சுருங்கி போகும். வேர்
இந்த மரத்தின் வேரும் ஊரில் பரவி தொற்றிவரும் காலரா நோய் காலங்களில் கொய்யா இலை கஷாய முறைப்படி போட்டுக் குடித்துவர நோய்வராமல் தடுக்கவும். வந்தபின் குணமாக்கும் சக்தியும் கொண்டது.
ஒரு பலம் மெல்லிய வேரை எடுத்து அதை நசுக்கி அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறப்போட்டு வைத்து, காலையில் இந்த ஊரல் கஷாயத்தை ஒரு சங்கு அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வர நிற்காத பேதியும் நின்று போகும். இந்த ஊரல் நீரைக் கொண்டு ஆசனத்தில் வெளித்தள்ளும் வளையம் போன்ற சதை மூலத்தைக் கழுவி வர அது சுருங்கி போகும்.
பழம்
மிக இனிப்புச்சுவை உடையது. ஆனால் அவ்வளவும் உடம்புக்கு கெடுதல் தான் போங்கள்! ஒரு பழத்தை சாப்பிட்டால் போதும் அன்று நீங்கள் என்ன சாப்பிட்டாலும் சரி, கொய்யா பழத்தின் அஜீரண வாசனைத்தான் வரும். அதுமட்டுமா? டைபாயிட், நிமோனியா போன்ற சன்னிப்பாதம், சளி, சுரம், மயக்கம், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பொருமல் போன்றவைகளும் தானாக வந்து விடும். வாத, பித்த, சிலோத்துமங்களின் நிலை மாறி தலைகீழாக போகும். கொய்யா பழத்தை வெகு பிரியமாக சாப்பிடும் அன்பர்கள் என்னடா இந்த மனுஷன் கொய்யா பழத்துக்கு ஒரேடியாக இவ்வளவு கெடுதல் சொல்கிறாரே! என்றும் ஆயாசப்படலாம். நான் என்ன செய்யட்டும்? நமது நாட்டின் சித்தர்வாகடம் அப்படித்தான் கூறுகிறது. இன்னும் கேளுங்கள்!
”திரிதோஷம் சென்னித் திருப்பம் அரோசியமும் பொருமாந்தம் வந்திப்பொருமல்- கரப்பானும் மெய்யாகப் பரவும்- மெத்தலம் விடும்
Read also : ஆகவே சர்க்கரை நோய்க்கு பாட்டி வைத்தியம்
முன்னோர்கள் புகழ்ந்த கொய்யாப் பழம்
கொய்யாப் பழத்தினால் கூறு”
நமது நாட்டின் பண்பாடறிந்த பெரியோர் கொய்யாப் பழத்தை சுவாமி நைவேந்தியங்களிலும் வைத்து படைப்பதில்லை இவ்வளவு கெடுதலை தரும் இந்த பழம். மலத்தை மட்டும் இளக்கி வெளித்தள்ளும் சக்தி கொண்டது. எனவே மலத்தை வெளித்தள்ள வேண்டும் என்பதற்காக மற்ற தீய சக்திகளை உள்ளுக்கு புகுத்து கொண்டு விடலாமா? கொய்யா பழம் எந்த விதத்திலும் பகுத்தறிவற்ற பறவை இனத்திற்குத்தான் என்பது இதனால் தெரியவருகிறது.
சில மேனாட்டு நூல்களில் கொய்யா பழத்தை பற்றி வானளாவப் புகழ்ந்து ‘ஏ’ வைட் டமின் முதல் ‘இஸட்’ வரை இருக்கிறது என்பதெல்லாம் வெறும் வியாபார நோக்கம் கருதி மாத்திரை செய்யும் வியாபாரக் கம்பெனிகளுக்குத் தான் என்றால் மிகையல்ல.
மனிதாபிமானம் என்பது நமது நாட்டில் நாகரீக முற்போக்கால் மறைந்து வருகிறது.
மனித னுடன் மற்றைய மிருகங்களும் பறவையினங்களும் ஒட்டித்தான் வாழவேண்டும். எட்டி வாழக்கூடாது என்பதற்காக பல விதிகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். வீடுகட்டும் போது உயரத்திலே கிளிக் கூண்டுகளை மறக்காமல் கட்டி வைப்பார்கள்.
தோட்டத்திலே கொய்யா கொறுக்காப்புளி போன்ற மரங்களை வளர்ப்பார்கள் பறவை இனங்களும் கூடிக்கழித்து விடியற்காலை தூங்கும் நம்மை இனிய குரலில் பாடி மகிழச் செய்து எழுப்பும். தற்கால கட்டிட பிளானில் பறவைக்கூடு, சே! சே! இது என்ன வீட்டுக்கு திருஷ்டி பரிகாரமாட்டம் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.
போகட்டும் கொய்யா மரத்தை மருந்துக்காகுமே, என்று தன் (மனித) சுயநலத்துக்காகவாவது பயிரிட்டு வளர்ப்பது நல்லதல்லவா? மனிதனுக்கு இந்த கொய்யாக்காய் சாப்பிடுவது சர்க்கரை நோய்களுக்கு நல்லது.
மேலும் இது போன்ற ஆன்மீக ஜோதிட மற்றும் சித்தர்கள் குறித்த வரலாறுகள் கோவில்களின் தல வரலாறுகள் ஜோதிட நுட்பங்கள் பாரம்பரிய மருத்துவம் காய்கறிகள் மருத்துவம் சித்த மருத்துவம் மற்றும் மறைக்கப்பட்ட மருத்துவர் ரகசியங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாடுகள் போன்ற பயனுள்ள அரிய அற்புதமான ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள நவசக்தி பாபா டாட் இன் உடன் இணைந்திருங்கள் மீண்டும் வேறொரு சுவாரசியமான நல்ல பதிவில் சந்திப்போம்
Read also : பாட்டி வைத்தியம் பூண்டு ரகசியம்
தெய்வீக வேப்பமரங்கள்
1. வெள்ளை இலை வேம்பு /சக்தி வேம்பு
வெள்ளை இலை / பழம் சாப்பிட்டால், எல்லா நோய்களும் குணமாகும். இந்த மரத்தை சுற்றி, மெதுவாக ஓடி ஓடி மூர்ச்சையாக கீழே விழும் வரை, ஓட்ட பிரதக்ஷிணம் செய்யலாம். கும்பகோணம்-மன்னார்குடி மார்க்கத்தில் திரு ஆலங்காடு (20 கிலோ மிட்டர்) அருகில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் / மஞ்சள் ஆறு கரையில் உள்ள,மாரி அம்மன் கோவிலில் இந்த வெள்ளை இலை வேப்ப மரம் ஸ்தலமரமாகும்.
2.சதா பூக்கும் / காய்க்கும் வேப்ப மரம்
இந்த வேப்பமரம், தஞ்சாவூர் ஜில்லா வைத்தீஸ்வரன் கோவில் ஸ்தல மரமாகும். 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதான வேப்ப மரம். இதன் இலை /பழத்தை சாப்பிட்டால், தீராத நோய்கள் குணமாகும்.
3. காரை வேம்பு (Hyena Triyuga/ Trichelia emitica)
கோவை மாவட்டம், காரைமேடு பெருமாள் கோவில் ஸ்தல மரம்.சந்தான வேம்பு மரம்: இந்த வேம்பு
இலை / பழத்தை சாப்பிட்டு,வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.
4.வேங்கை வேம்பு மரம்
முருகன் மரம் / வெங்கடேஸ்வர மரம் /உதர வேங்கை மரம் (Priyamku Tree)/ இரத்த பால் சுரக்கும் வேப்ப மரம்
விரதமுறைகள்
மகா சிவராத்திரிக்கு முதல் நாள, ஒரே ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும்.
தூய ஆடை உடுத்தி தூய்மையோடு சிவபெருமானை வழிபட வேண்டும். அன்று இரவு நல்ல சிந்தனையோடு உறங்க வேண்டும்.மறுநாள் சிவராத்திரியன்று, அதிகாலையில் எழ வேண்டும்.நல்ல தண்ணீரில் குளிக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பே சிவசிந்தனையோடு கோவிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும்.
பகல் முழுவதும் உணவு எதுவும் உட்கொள்ள கூடாது. இறைவனையே நினைத்து திருவாசகம் முழுவதும் ஓதுதல் வேண்டும். இரவு முழுவதும் பஞ்சாட்சர ஜெபம் மற்றும் வேதபாராயணம் செய்து சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் இரவு நடக்கும் நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவனின் அருளை பெற வேண்டும்.
கொய்யா பழங்கள் மட்டும் இன்றி மேலும் பல்வேறு விதமான பழங்கள் நோய்களை தீர்ப்பதில் முதலிடம் வகிக்கிறது இதைப்பற்றி பழம்பெரும் சுவடிகளிலும் சித்தர்கள் குறிப்பிடும் மருத்துவத்தில் எந்த அளவுக்கு பழங்கள் பங்காற்றுகிறது என்பதையும்
நமக்கு முன்கூட்டியே ஞானிகளும் சித்தர்களும் உணர்த்திருக்கிறார்கள் ஆனால் சமீபகாலமாக இந்த பழங்கள் மருத்துவ குணம் என்பதை மறந்து அதை ஜூஸ் போட்டு குடிப்பது வேறு வகையில் அதை உபயோகிப்பது போன்ற வகையில்
நாம் இறங்கி இருந்தோம் ஆனால் இப்போது கண்ட கண்ட வியாதிகளும் புது புது நோய்களும் மக்களை மிரட்டி கொண்டிருப்பதால் மீண்டும் பழமையை நோக்கி நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம் இந்த வகையில் நம் நாட்டு உள்ளூர் காய்கறிகளான
கத்தரிக்காய் முருங்கைக்காய் தக்காளி பழம் நெல்லிக்காய் பப்பாளி பழம் போன்ற பல்வேறு விதமான பழங்களையும் காய்கறிகளையும் நோய் தீர்க்கும் மறு மருந்தாக நான் இப்பொழுது தேடி படையெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம் அடுத்தடுத்து வருகின்ற
பல்வேறு பதிவுகளில் ஒவ்வொரு காய்கறிகளை பற்றியும் ஒவ்வொரு பழங்கள் பற்றியும் ஒவ்வொரு கீரை வகைகள் பற்றியும் அதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் அதனுடைய சாதகப் பாதகங்களை மிகவும் தெளிவாக குறிப்பிடுவோம் சித்தர்களது வாக்கு எந்த காலத்திலும் வைப்பது இல்லை
அந்த காலத்தில் உணவே மருந்து மருந்தே உணவு என்று நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருட்களை வைத்து நமக்கு வருகின்ற எவ்வளவு பெரிய வியாதிகளையும் குணப்படுத்துகின்ற வல்லமையை சித்தர்கள் கண்டு நம் முன்னோர்கள் கண்டு நமக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஏனோ சில காரணங்களால்
அந்தப் பழங்களிடமிருந்தும் பாரம்பரிய மருத்துவர்களிடமிருந்தும் விலகி இருந்த நாம் மீண்டும் அவற்றை நோக்கியே படை எடுக்க ஆரம்பித்திருக்கிறோம் ஒரு ஒரு பதிவிலும் சுவாரஸ்யமான பல்வேறு கட்டுரைகளை இனி உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்போம்