,மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்- ஓரிஸா மாநிலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 64 யோகினிகள் உள்ளடக்கிய இரண்டு ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மலைவாழ் மக்களால் புனிதமாக வணங்கப்பட்ட சௌன்சட்டி (அறுபத்தி நாலு என்பது)மன்திர் என்ற பெயரில் இருந்த ஆலயங்கள் அவை. அந்த 64 யோகினிகள் உள்ள ஆலயங்களில் சுமார் நான்கு மட்டுமே தற்போழுது உள்ளதாகக் கூறுகின்றனர்.
அவற்றில் ஓரிஸாவில் புவனேஸ்வர் நகரத்தின் அருகில் உள்ள ஹீரார்பூர் என்ற இடத்தில் உள்ள மஹாமாயா என்ற ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. மற்ற இரண்டும் போலாங்கீர் என்ற மாவட்டத்தில் உள்ள இராணிமுர் -ஜாரிலால் என்ற பகுதியில் உள்ளன.
மேலும், எகித்தியப் பிரதேசத்தில் கஜேராஹோ என்ற இடத்திலும் இரண்டு மோகினி ஆலயங்கள் உள்ளன. யோகினி, தக்ஷணி மற்றும் மோகினி எனக் கூறப்படும் அனைத்துமே ஒன்றையேக் குறிப்பவைதான். சுமார் முப்பது அடி அகலத்தில் வட்டவடிவில் அமைந்து உள்ளது ஹிரார்பூர் ஆலயம்.
Read About Siddhars : https://navashakthibaba.in/18-siddhar-temples-in-chennai/
மேல் கூறை இல்லாமல் அதைக் கட்டியவர்கள் பௌவிமா மற்றும் சோமவம்சி அரசக் குடும்பத்தினர். மஹாமாயா தேவி சிவப்பு நிறத் துணிகளைப் போட்டப்படி. மத்தியப் பகுதியில் இருக்க தக்ஷிணி அல்லது மோகினிக்கள் எனப்படும் அவர்களின் இரண்டு அடி உயரசிலையின் பிம்பங்கள் 64 சன்னதிகள் போல அமைக்கப்பட்டு உள்ள தனி தனி தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சில சிலைகள் இரண்டு கைகளுடனும் சில நான்கு கைகளுடனும் காட்சி அளிக்கின்றன. அவைகளில் சில மிருகங்களின் தலைகளையும், சில கடவுட்களின் தலைகளையும் கொண்டும் காட்சி தருகின்றன.
ஒவ்வொரு மோகினினியின் சிலையும்
துண்டிக்கப்பட்ட தலை மீது நின்றபடி, ஒரு கையில் ஆயுதங்களைக் வைத்துக் கொண்டும் இன்னொரு கையில் மூளை ஓட்டுக்களை பிடித்தபடியும் இருக்கும் வகையில் வடிவடைக்கப் பட்டு உள்ளன.
அந்த தஷ்ஷிணிகள் அல்லது மோகினிக்கள் காளி தேவதைக்கு பணி புரிந்தவை. நுழை வாயிலில் காவலில் உள்ள சீலைகளின் கழுத்தில் பாம்பு மாலைகள் தொங்க, கைகளில் மனித தலையும், மனித ஓடுகளும் உள்ளது.
ஆகவே அவர்கள் பக்கத்தில் நரிகளுக் ஓடிக் கொண்டு உள்ளன. அது மட்டும் அல்ல மற்ற எந்த ஆவயல்களிலும் இல்லாத காட்சிப்போல ஆலயத்தின் வெளிச் சுற்றிலும் பல சிலை வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு அபூர்வக் காட்சியாகும். மோகினி ஆலயங்களில் சிவனைத் தவிற மற்ற தெய்வங்கள் பெண் உருவிலேயே சித்தரிக்கப்பட்டு உள்ளன.
பைரவரும் சாமுண்டியும் சிவனுக்கு அடுத்த பிரதானமான அங்கம் வகிக்கின்றன. சாமுண்டிக்கு உயிர் இனங்களைப் பலி கொடுக்கும் பழக்கம் இருந்தாகத் தெரிகின்றது.
மேலும், இந்த யோகினி ஆலயங்கள் சிவ தத்துவத்தை உள்ளடக்கியும் ஏராளமான தந்திர மந்திர சித்திக்களை உள்ளடக்கிக் கொண்டவை யாகவும் உள்ளன.
அந்த ஆலயத்தில் யோகினி அனைவருக்கும் ஒரு சேரவே பூஜை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. 9-10 அல்லது 11ஆம் நூற்றாண்டுகளில் இந்த யோகினி ஆலயங்களில். பூஜைகள் செய்து பைரவர் பூஜைகளும் செய்து பல மந்திர சித்திகளைப் பெறுவது உண்டு. ஒவ்வொரு யோகினிக்கும் மிக அதிகமான சக்தி இருந்தனவாம்.
யோகினிகளுக்கு இரத்தம் குடிக்கும் பழக்கம் உண்டாம். அதனால்தான் யோகினி மற்றும் மோகினிப் பேய்கள் பிடித்தவர்கள் இரத்தம் கக்கி மரணம் அடைவதாக் கூறுவது உண்டு.
யோனிகள் ஒருவரின் தோற்றத்தைக் கூட மாற்றக் கூடிய மத்திர சக்தி பெற்றவை. ஒருவரின் உருவத்தை சிறியதாகவோ, பெரியதாகவோ மாற்றவோ, கைகால்களை முடமாக்கவோ, பறவைகளைப் போலவோ, விலங்குகள் போலவோ மாற்ற முடியும்.
இரத்தம் குடிக்கும் யோகினிகள் அல்லது மோகினிப் அல்லது பேய்களை பற்றிய பல கதைகள் உள்ளன. சண்டி புராணம் என்ற நூலின் செய்தியின் படி மகிஷாசுரனை போரிட்டு வென்ற சண்டிதேவி அவன் பிடித்து வைத்திருந்த பல யோகினிக்களை விடுதலை செய்தாள்.
அந்த விடுதலை பெற்ற யோகினிக்களே இரத்தப்பசி கொண்டவை. யுத்தத்தில் அவை எதிரிகளின் பல ஆயிரக்கணக்கான பிராணிகளை கொன்று தீர்த்தன. மேற்கு வங்கத்திலும் ஒரிசாவிலம் உள்ள சண்டாள் என்ற மலைவாழ் மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் இன்றும் அர்த ஜாம பூஜை செய்வதும் மந்திர சித்திகளைக் கையாடலும் உள்ளன.
சண்டால் என்ற அந்த மலைவாழ் இனப்பெண்கள் நள்ளிரவு கணவன் தூங்கியதும் காட்டின் உள்ளே சென்று நிர்வாணமாக பேய் பிசாசுகள் எனப்படும். மோகினிகளுடன் நடனம் ஆடுவது உண்டு.
அந்த நடனத்தின் பொழுது மந்திரங்களை ஜெபித்தபடி பயங்கரமான சிங்கங்களை துணைக்கு வைத்துக் கொண்டு அதனுடன் சேர்ந்து நடனம் ஆடுவதும் உண்டு.
ஒரு புராணக் கதையின் படி சிவபெருமான் காளி இருந்த இடத்தில் ஒரு முறை தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்திற்கு நான்கு திசைகளை நோக்கி நான்கு வாயில்கள் அமைந்து இருந்தன. அந்த நகரத்தின் மத்தியில் காளிதேவி தனக்கு பணி புரிய 64 மோகினிகளை வைத்து இருந்தாளாம்.
இரக்தபீஜா என்ற அசூரனுடன் துர்கை போரிட்ட பொழுது அவள் உடலில் இருந்து எட்டு யோகினிகள் வெளிவந்து அவளுக்கு உதவினதாக ஒரு கதை இங்கு உண்டு. மார்கன்டேய புராணத்திலும் அது பற்றி கூறப்பட்டுள்ளது.
இரக்தபீஜா என்ற அசுரன் பெற்றிருந்த
ஒரு வரத்தின் பயனாக அவன் உடலில் இருந்து கீழே விழும் ஒவ்வொரு இரத்த துளிகளும் இன்னும் ஒரு அரக்கனாக உருவெடுக்கும். அதனால் அவனை வெள்ளமுடியாமல் இருந்தது.
அதற்காக துர்கை தன் உடலில் இருந்து பல யோகினிக்களை வெளிப்படுத்த அந்த யோகினிகளும் அவன் உடலில் இருந்து கீழே
விழுந்த இரத்த துளிகளை பூமியில் விழும். முன்னரே பிடித்து குடித்ததினால் அவன் படைபலம் இழந்து அழிந்தான்.
மேலும், இதனால் தான் யோகினிக்களுக்கும் இரத்த பலியிடும் பழக்கமும் வந்திருக்க வேண்டும் என்று கருத வேண்டி உள்ளது. மற்றும்
ஒரு கதையிட்படிஅந்தகாரா என்ற அசுரன். ஒரு முறை கையிலைக்குச் சென்று பார்வதியை கவர்ந்து செல்ல முயன்றான். அவனுக்கும் இருந்த சக்தியினால் அவனுடைய ஒவ்வொரு இரத்தத் துளிகளும் கீழே விழுந்தால் மற்றம் ஒரு அகரனாக மாறிவிடும்.
அதனால் அவனை அழிப்பதற்காக சிவ பெருமான் இரத்தம் குடிக்கும் பல யோகினிகளைப் படைத்தார். அந்த அசுரன் அழிந்த பின்னரும் சிவ பெருமான் படைத்த அந்த யோகினிகள். இரத்த வெறி கொண்டு அலையத் துவங்க, வேறு வழி இன்றி திருமாலின் அவதாரமான நரசிம்மரின் உதவியை சிவ பெருமான் நாடினார்.
நரசிம்மரும் அந்த யோகினிகைகளை விட மிக பலசாலியான யோகினிகளைப் படைத்து அந்த யோகினிகளை அடக்கி வைக்க வேண்டியதாயிற்று.
ஆலயத்தின் உள்ளே நுழையும் பொழுதே நம்மை மீறி ஒரு பயம் உள்ளத்தில் தோன்றுகின்றது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குள் நுழையும் பொழுது இரு புறமும் காட்சி தரும் பயங்கரமான சிற்பத் தோற்றங்கள் தனிமையில் சென்று அதன் அழகை அனுபவிக்க முடியாதபடி உள்ளன.
அவற்றையும் மீறி இன்றைக்கும் ஒரிஸாவில் பல கிராமங்களில் மோகினிகளை கிராமத்தின் காவல் தேவதைகளாகக் கருதி பூஜிக்கின்றனர். அந்த அந்த கிராம தேவதைகளைத் திருப்திப் படுத்த கள், சாராயம், இறைச்சி முதலியவற்றை நைவேத்தியமாகப் படைக்கின்றனர்.
மேலும், அந்த மோகினிகளில் சிலவற்றை வசியம் செய்து கொண்டு பில்லி சூனிய கொடுமைகளும் நடப்பது வதனை தரும் செய்தியாகும்
சிறுவனாக முனிவருக்கு காட்சி தந்த பெருமாள்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் சிறப்புகள் ஓங்கி உயர்ந்து மலைகள் அதில் ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள் எங்கும் வீசும் தென்றல் காற்று அதற்கு இடையே சிலு சிலுவென. ஆர்ப்பரித்து ஓடும் தெளிந்த நீர் உடைகள் நீலமகள் மீது பச்சை பட்டு உடுத்தியது போன்று பச்சை பசேல் என்று காட்சி தரும் அற்புத பூமி மனித வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் சகஜம் என்பதை பிரதிபலிக்கும் சாலைகள். இப்படி சொல்லிக் கொண்டே போனாலும் வார்த்தைகளில் அடங்கி விடாத அழகுக்கு சொந்தமாய் நிமிர்ந்து நிற்கிறது
கேரள மாநிலம் அதனால் தான் கேரளா இறைவன் வசிக்கும் பூமி என்று அனைவராலும் புகழ் பட்டு வருகிறது அப்படிப்பட்ட கேரளா மாநிலத்தின் தலைநகராக விளங்கிக் கொண்டு இருக்கிறது திருவனந்தபுரம் இந்த திருவனந்தபுரம் என்ற பெயருக்கே காரணமாக விளங்கிக் கொண்டு நகரின் மத்தியில் அனந்த சமயத்தில் வீற்றிருக்கிறார் பத்மநாபசுவாமி .
பத்மநாத சுவாமி கோவிலின் தலபுராணம் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டது என்றால் மிகையாகாது இன்றைய திருவனந்தபுரமாக காட்சியளிக்கும். இடம் அந்த காலத்தில் அனந்தன் வனமாக இருந்து வந்தது
அந்த காலகட்டத்தில் மங்களூர் ஆனால் பகுதியில் உள்ள கும்பலாவில் அதற்கு தேசத்தில் திவாகர முனிவர் வசித்து வந்தார் மிகச் சிறந்த பக்தரான அவர் விஷ்ணுவின் தரிசனத்தை. பெறுவதற்காக கடுமையான தவம் இருந்து வந்தார்
இந்நிலையில் அவர் வசித்த பகுதியில் ஒரு அழகிய சிறுவன் நடனமாடி கொண்டிருந்தான்
சிறுவன் விதித்த நிபந்தனை
சிறுவனை பார்த்ததும் நீ யார் உன் தாய் தந்தையார் எங்கு இருக்கிறார்கள் என்று அன்புடன் விசாரிக்க தொடங்கி விட்டார் திவாகர முனிவர் அந்த சிறுவனும் தனக்கு என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று கவலையுடன் கூறினான்
அந்த சிறுவன் மீது பரிதாபப்பட்ட முனிவர் தன்னுடனே வசிக்கும் படி கேட்டுக் கொண்டார் அதற்கு அந்த சிறுவன் நான் எத்தனை குறும்புகள்..
செய்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் அதை மீறி என் மீது கோபம் கொண்டால் நான் இங்கிருந்து சென்று விடுவேன் என்று ஒரு நிபந்தனையை விதித்தான் அதற்கு அந்த முனிவரும் சம்மதம் தெரிவித்தார்..
பல நாட்கள் முனிவருடன் சிறுவன் வசிக்க ஆரம்பித்தான் ஆனால் அவன் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அதை அன்புடன் முனிவர் பொறுத்துக் கொண்டே, வந்தார் அந்த சமயத்தில் ஒரு நாள் சாளக் கிராமத்தில் முன்னாள் அமர்ந்து முனிவர் தியானம் செய்து கொண்டிருந்தார்..
அப்போது அங்கு வந்து சிறுவன் சாளக்கிராமத்தை எடுத்து தனது வாயில் போட்டுக் கொண்டான் இதை பார்த்த முனிவர் விஷ்ணுவின் அம்சமான சாளக்கிராமத்தை மாசுபடுத்தி விட்டதாக நினைத்து சிறுவனை கோபத்தால் திட்டினான்..
இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுவன் தான் விதித்த நிபந்தனையை மீறியதால் அங்கிருந்து புறப்பட தயாரானான் நீங்கள் வாக்கு தவறிவிட்டீர்கள் . எனவே இனி உங்களுடன் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் இனி தாங்கள் என்னை காண விரும்பினால் ஆனந்த வனத்திற்கு தான் வர வேண்டும் என்று முனிவரிடம் கூறிவிட்டு அந்த சிறுவன் புறப்பட்டு சென்று விட்டான்..மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்:
இந்த உலகத்தில் விஷ்ணுவின் தரிசனம் ஒன்று தனது லட்சியம் என்று தவம் இருந்து வந்தவர் திவாகர முனிவர் அவர் தன்னிடம் இருந்த சிறுவனிடம் மிகவும் அன்பு காட்டு வந்தார்.. அதனால் சிறுவனின் பிரிவை தாங்க முடியாமல் அவதிப்பட்டார் அவன் பிரிந்து சென்றது முதலே முனிவர் பசி தாகம் உறக்கம் ஆகிவிட்டது மருந்து சிறுவன் நினைப்பிலேயே அங்கும் இங்குமாக அலைந்தார் சிறுவன் குருச்சென்ற அனந்த வனம் எங்கு இருக்கிறது என்று அறிய துடித்தார்.
எனவே தான் வசித்து வந்த இடத்தில் இருந்து முனிவர் தந்துசை நோக்கி அனந்தவனத்தை தேடி புறப்பட்டார் பல தினங்களாக. நடந்த உடல் சலிப்படைந்து ஒரு வனத்தை அடைந்தார் அதுதான் அனந்தன் காடு என்பது அவருக்கு தெரியாது
மேலும், அங்கு தன்னுடன் வசித்த அந்த சிறுவன் நிற்பதை பார்த்து ஆனந்தத்தில் உள்ளுதித்து அவனை பிடிப்பதற்காக ஓடினார் ஆனால் அதற்குள் .. அந்த சிறுவன் ஒரு மரத்திற்குள் சென்று மறைந்து விட்டான் அதே நொடியில் அந்த மரம் முறிந்து .கீழே விழுந்து ஆதித்யாசனாகிய பாம்பின் அணையில் பள்ளி கொண்ட பரந்தாமனின் வடிவமாக மாறியது புராணங்களில்
பகவான் விஷ்ணுவின் இந்த வடிவம் 13 யோஜனை தூரம் இருந்ததாக,
கூறப்படுகிறது அதன் தலைப்பாகும் திருவல்லிக்கிழும். திருவனந்தபுரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பாதம் திருப்பாப்பூரிலும் 8 கிலோமீட்டர் தூரம் இருந்தது பகவானின்.
முழு உருவத்தையும் கண் குளிர தரிசித்த முனிவர் பூஜைக்கு. வசதியாக சிறிய வடிவத்தை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார. அதன்
பிறகு பகவான் விஷ்ணு தனது வடிவை சிரித்து ,ஆக்கிக் கொண்டார் அப்படி விவாகர முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்த இடம் தான் இன்றைய திருவனந்தபுரம்.
மேலும், அந்த இடத்தில் தான் பத்மநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.