சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் 

சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் 

சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள்

சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் – மீண்டும் மீண்டும் பிறவி பூ ஏற்படும்.

மனிதன் பூர்வாசிரமத்தில் தர்மம் செய்தாலும் அதர்மம் செய்தாலும் பிறவி ஏற்படும். தர்மம் செய்தால் பொன் விலங்கு, அதர்மம் செய்தால் இரும்பு விலங்கு.

ஆக பிறவி என்ற விலங்கு உண்டு. ஒரு பிறவியில் செய்யும் செயலால் பல விளைவுகளை உண்டு பண்ணும் விஞ்ஞான தத்துவப்படியும் ஆக்ஷன் –  ரியாக்ஷன் கோசம் என்பதாகும்.

நாம் ஒன்றை விதைத்தால் அது விளைந்தே தீரும். அதன்படி நமது கர்மாவை நாம் அனுபவித்து தீர்க்கத் தான் பிறந்து இருக்கிறோம். ஆனால் கர்மாவின் துன்பங்கள் தாங்க முடியாத போது இறைவனை நாடுகிறோம்.

இறைவனால் நம் கர்மாவை நீக்க முடியாது. நீக்கவும் முடிவதில்லை. காரணம் கர்மாவின் வழியாக விதி உருவாகிறது என்று ஆன்மீகம் கூறுகிறது. கர்மாவை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை முறையே சஞ்சிதம் – பிராரப்தம் – ஆகாமியம் என்பதாகும்.

சஞ்சித கர்மா:

இந்த கர்மாவை ஆண்டவன் கூட அழிப்பதில்லை. ஆனால் குருவின் பார்வையாலும், உணர்வாலும் தீட்சையாலும் அனுக்கிரகத்தாலும் இது நீங்கும்

அல்லது மாறி அமையும், சித்தர்கள் மகான்கள் சாதுக்களின் தரிசனமும் இதைச் செய்யும்.

பிராரப்த கர்மா

உணர்வால் உந்தி கர்மாவைச் செய்து முடிக்க வேண்டும். அதாவது அனுபவித்து முடிப்பது. எந்த சக்தியாலும் மாற்றவே முடியாது.

ஆகாமிய கர்மா

தற்கால நடைமுறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு கர்மாவை முடிக்க அல்லது மாற்ற முயற்சி செய்வது.

Read Also: கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும்

முற்பிறவி அனுபவங்களும் மூளையின் செல்களும்

 

முற்பிறவி அனுபவங்களை Dead Cells மூலம் மனித மூளையின் திசுக்களின் ஜீன்களிலும் படிந்துள்ள அணுத் தொகுப்புகளை வாக்குகளின் மின்காந்த அதிர்வுகளால் நீக்கி புதிய அணுத் தொகுப்புகளை அனுப்பி அணுச் சேர்க்கையை உண்டாக்கலாம் என்று மனோவியல் விஞ்ஞானம் கூறுகிறது. இதைத்தான் ஹிப்னாடிசம் என்பார்கள்.

 

தொலைவில் நடக்கும் சம்பவங்களை தன் சூக்கும சக்தியால் கோசம் அறிந்து கொள்ளும் முறையே டெலிபதி என்பதாகும் இதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

 

மனோ வலிமையால் ஒருவனது நோயைக் குணப்படுத்த முடியும். நோய் நீக்க உடலை ஆராய்ந்து உணர்வதைவிட மனதை ஆய்ந்து மனதில் உள்ள நோயை நீக்கினால் உடலில் உள்ள நோய் நீங்கிவிடும்.

 

நமது உடல் ஐந்து வகையான கோசங்களின் சார்புடையவனாய் உள்ளது.

 

1. அன்னமய கோசம்இது உணவு மூலம் நிலைத்து இயங்கி வருவது நம் கண்ணுக்கு தெரியும். இந்த பரு உடல்தான் அது.

 

2..பிராணமய கோசம்

 

அது அன்னமய கோசத்தை அடக்கியாளும் சக்தியுடையது. காரணம் அன்னமயகோசம் என்ற பரு உடலைவிட இந்தப் பிராணமய கோசம் நுட்பமானது என்பதால்.

 

3. மனோமய கோசம்:

 

இது பிராணமய கோசத்தைவிட அதிநுட்பமானது. அபாரசக்தியுடையது.மனோமயத்திற்கு பிராணமயம் கட்டுப்பட்டதுதான்.

 

4. விஞ்ஞான மயகோசம்

 

இது மனோமய கோசத்தை விட மிக மிக நுட்பம் மிகுந்தது. அதிக பலம் கொண்டது. இது பிரபஞ்ச இயக்க விதிகளுடன் நுட்பமாகக் கலந்து அறிந்து கொள்ளவல்லது.

 

5..ஆனந்த மயகோசம்

 

இது விஞ்ஞான மய கோசத்தைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளும் இந்த ஆனந்த உடல்தான் என்றும் மாறாத ஆத்மா! இதில் மனதை மட்டும் பிரித்துத் தனியாகப் பேசும்போது மனதின் மூலம் பல அற்புதங்களை செய்யலாம். இதில் ஒளி நிலையாக இருப்பது துரியம். இதில் ஒலி நிலையில் இருப்பது துரியாதீதம் என்பதாகும். இவையாவும் மனோமய கோசம் வலுவடைந்து விட்டால் அதி உன்னத பலம் பிராண பலம் பெற்று இயங்க முடியம். இதன் மூலம்தான் பிரபஞ்ச விதியை மாற்றி அமைக்க முடியும்.

 

இதை கைவரப் பெற்றவர்கள் தான் சித்தர்கள், மகான்கள். இன்றும் பல ஆயிரம் கோடி சித்தர்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தாயினும் சாலப் பரிந்து வந்து மக்களின் குறைகளை நீக்கி அருளாட்சி நடத்தி: வருகின்றார்கள். அந்த வரிசையில் வந்த மகான்களில் ஒருவராக கடலூர் புதுப்பாளையம் ஸ்ரீ பகவந்த தயாநந்தர் ஆலயத்தில் உரைந்து அருள்புரியும் ஸ்ரீ பகவந்த சுவாமிகள்

Read Also: மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்

நூற்று ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்த மகான்

 

நூற்று ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து 18. 12. 1889ல் அருள் ஜோதி சொரூபத்தில் கலந்த மகான் ஆவார்.

தன்னை நாடிவந்தவர்களுக்கு காக்கும் கடவுளாகவும் தன்னை நாடாதவர்களை நாடிச் சென்று நல்ல வரங்கொடுக்கும் வள்ளலாகவும் தாயுள்ளம் கொண்ட தயாநிதியாகவும் நோக்கம் புரிந்து நோம்பிருந்து நோய் நொடிபோக்கும் அற்புதம் அனேகம் செய்த அருளாளன்.

ஒரு சமயம் கடலூரில் முதல் வகுப்பு வக்கீலாய் இருந்த ந.கிருஷ்ணய்யர் ஒரு நாத்திகவாதி. கடவுள் இல்லை என்ற கொள்கையுடைவர். எந்த துன்பம் வந்தாலும் மனம் கலங்காத தீர நெஞ்சம் கொண்டவர். ஸ்ரீ பகவந்த சுவாமிகளை காணவரும் பக்தருடன் உடன் வருவார் – சுவாமியை அணுகி எதையும் கேட்டதில்லை.

ஆனால் கிருஷ்ணய்யர் நாத்திகர் என்றாலும் சுகம் – துக்கம் இரண்டையும் சமமாக எண்ணும் அவர் பண்பு நமது சுவாமிக்கு பிரியம் வந்து வலியத் தன் கருணையைக் காட்டினார்.

ஒரு சமயம் கிருஷ்ணய்யர் வீட்டின் நெற்களஞ்சியத்தில் குதிரைக்காரன் நெல்லை களவு செய்து விட்டான். அவனை பிடித்து திருட்டு பிராது கொடுத்து தண்டிக்க வேண்டும் என்ற எண்ணமுடன் இருந்தார்.

நண்பர்களுடன் நமது சுவாமிகள் இருக்கும் தென்னந் தோப்புக்கு உலாவ வந்தபோது சுவாமிகள் கூறினார். “திருட்டுப்பயலை வீட்டுவழி வராதே என்று துரத்தி விடு. அதற்குமேல் போய் நீயும் அவனும் கோர்ட்டில் நிற்பதா புத்திசாலிக்கு அழகு”

என்று சொன்னார். தன் மனதில் உள்ளதை நாமே கேட்காமல் மனதில் தோன்றும் எண்ணங்களை படிப்பதுபோல சுலபமாக அறியும் சக்தி பெற்ற மகான் இவரே என வியந்து குதிரைக்காரனை தண்டிக்காமல் விட்டார்.

அதன்பிறகு சுவாமிக்கு தொண்டு புரியலானார். காலை போஜனம் தம் வீட்டில் இருந்தே கொண்டுவந்து சுவாமிக்கு ஊட்டி விடும்படி ஏற்பாடு செய்தார். (சுவாமிகள் தானே உணவு உண்டது கிடையாது யாராவது ஊட்டினால்தான் உணவு உண்பார்)

சிறிது காலம் சென்ற பிறகு கிருஷ்ணய்யர் சுவாமிகளை வழக்கம்போல் தரிசிக்க வரும்போது ஐயரைப் பார்த்து “உனக்கு மூன்றாந்தரம் பிளவை வரப் போகிறது” என்றார். பிறகு சுவாமிகள் மஞ் சள் கலந்த நீல நிறமான வாந்தி எடுத்தார்கள்.

அதேசமயம் கிருஷ்ணய்யரும் இதே கலரில் வாந்தி எடுத்தார். இந்த சமயத்தில் ஐயர் மனைவி சுவாமி மடாலயத்தில் தான் இருந்தார்.

சுவாமிகள் செய்த வாந்தியை தானே சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குப் போனார். வீட்டில் தன் கணவரும் சுவாமிகள் செய்த வாந்திபோல வண்ணங்கள் மாறாமல் இருப்பது கண்டு வியந்து போனார். அதிர்ந்து போனார்.

இம்மாதிரி வாந்தி வந்தால் ஐயருக்கு உடனே ராஜ பிளவை என்னும் கட்டி உண்டாவது வழக்கம். இது மூன்றாவது முறை என்பதால் பயந்துபோய் ஸ்ரீ .

குருநாதரிடம் அன்று மாலை பயபக்தியுடன் வந்து வணங்கினார். உனக்காக நாம் வாந்தி எடுத்தோம். உன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுவோம் என்று கூறியதால் ஆறுதல் அடைந்தார்.

ஐந்தாம் நாள் ஐயருடைய வலப் பொறிக்குச்சமீபத்தில் பிளவையுண்டாகிய மூன்று தினங்களில் சிறிய ஆமை அளவுக்கு பருத்து விட்டது வலது தலை முழுவதும் வலியும் தீப்பட்ட புண்ணில் எரிவது போன்ற ஓர் வேதனையால் துடித்தார்.

ஐயருக்கு வைத்தியம் செய்ய வந்த ரண சிகிச்சையில் தேர்ந்த மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ராபர்ட்சன் பிளவையை பரிசோதனை செய்துவிட்டு பொறிக்கு சமீபத்தில் கத்தியைக் கொண்டு கட்டியை கீறுவதாகவும் கூறினார். ஐயரோ சிறிதும் கலக்கமின்றி தான் ஒரு மகானின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவர் என்னை காப்பாற்றுவார்

என்றும் என் கட்டியை யாரும் கீறவேண்டாம் என்றும் சொல்லி மறுத்து தைரியமுடன் இருந்தார்.

அன்று பகல் அவர் மனைவியார் ஐயர் படும் கட்டியின் வேதனையை பார்த்து மனந்தளராமல் சுவாமிகளுக்கு பகல் உணவு எடுத்துக் கொண்டு சுவாமிகளிடம் சென்று மாங்கல்ய பிச்சை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் கண்ணீர் விட்டுக்கொண்டு சுவாமிகளிடம் சென்றார்.

சுவாமிகள் கருணையோடு நோக்கி”குழந்தையடா பாவம், குழந்தையடா பாவம்” என்று சொல்லிச் சில நிமிஷம் வரையில் வாயினால் காறி உமிழ்ந்தார். பல முறை உமிழ்ந்தபோது துப்பியதில் ரத்தம் கலந்திருந்தது.

அருகில் இருந்தவர்கள் பயந்து போனார்கள்.அந்த அம்மையார் சுவாமிக்கு அருகில் இருந்த விபூதியில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு சுவாமிகளை தியானித்த வண்ணம் வீட்டிற்கு சென்று கணவரின் கட்டியின் மேல் போட அடுத்த கணமே கட்டியின் கொடுமையான வேதனை நீங்கி குணமானார். மகா குருநாதர் தமது மனோசக்தியால் ஐயரின் கட்டியை தாமே சூஷ்மமாக வாங்கி தான் அனுபவித்து அன்பரை காப்பாற்றி விட்டார்.

மறுநாள் வந்து பார்த்த டாக்டர் மிகவும் வியப்புற்றார் ஐயரைப் பார்த்து. அந்த மகான் அபாரசக்தி (WILL POWER) உள்ளவர் என்று பாராட்டி விட்டு சென்றார். அதேசமயம் சுவாமிகளின் அழகிய மார்பில் சில சிறு சிறு கொப்புளங்கள் கிளம்பி இருந்தன. அன்பர்கள் சிகிச்சை செய்ய நெருங்கியபோது சுவாமிகள் தடுத்து அந்தப் பிராமணனுடைய கருத்தை இது அனுபவிக்கிறது. நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறி ஆறு நாட்கள் ஆகாரமின்றி நோன்பு இருந்தார். கொப்புளங்களும் முற்றிலும் மறைந்துவிட்டன.

நாத்திகனான ஐயர் ஆத்திகராக மாறிவிட்டார். மகிமை நிறைந்த மகானும் தெய்வமும் ஒன்றுதான் என்பதை பின்வரும் நிகழ்ச்சி மூலம் நிரூபித்தார்.

 

சிலகாலம் பரம்பொருளோடு சுவாமிகளின் சென்ற பிறகு ஐக்கியமான சுவாமிகள் மறுதினம் திருமேனியை அடக்கம் செய்யப்போகும் தருவாயில் அங்கிருந்தவரில் ஒருவர் சுவாமிகளின் பாதங்களுக்கு கீழ் நவரத்தினங்கள் வைக்க வேண்டும் என்று கூறினார். அந்த நேரத்தில் நவரத்தினங்கள் எங்கே கிடைக்கும் என்று ஏங்கியபோது,

 

வக்கீல் கிருஷ்ணய்யர் என் மனைவியின் திருமாங்கல்யம் நவரத்தினங்களும் இழைக்கப்பட்ட மாங்காய் மாலையில் கோர்க்கப்பட்டிருக்கிறது. அதை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு காணிக்கையாகச் செலுத்துவது என்னும் பிரார்த்தனை இருக்கிறது. ஆனால் இந்த இடம்தான் திருப்பதி. அந்த காணிக்கையை இங்கேயே செலுத்திவிட தீர்மானிக்கிறேன் என்று சொல்லி இங்கேயே செலுத்திவிடத் தம் மனைவியை அழைத்து தனது கருத்தை கூறினார். அவரும் மிகுந்த மன மகிழ்ச்சியோடு ஒரு மஞ்சள் கொம்பும் நூல்கயிறும் வரவழைத்து தம் கழுத்தில் கட்டிக்கொண்டு மேற்படி மாலையை கழற்றிக் கொடுத்தார். அது சுவாமிகளின் திருவடிகளின் கீழ் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

 

தாலிபாக்கியம் கேட்ட அம்மையாரின் தாலி பாக்கியம் நிலைத்து திருப்பதி உண்டியும் சுவாமிகளின் திருவடியும் காணிக்கை பெரும் பொக்கிஷமாக இணைந்தது.

Also Read: கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும்

இரண்டு இடங்களில் ஜீவ சமாதியான சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்

 

கர்நாடகா மாநிலத்தில் சிவ வழிபாட்டில் சிறந்த பிரபல கவுடர் குடும்பத்தில் ஸ்ரீ™ சிவலிங்கேஸ்வர சுவாமி பிறந்தார். சிறுவயதிலேயே சிவ வழிபாட்டில் ஈடுபட்டு சிவ பெருமானின் அருளால் லிங்கதீட்சை பெற்று தியானத்தில் ஈடுபட்டு தெய்வ சக்திகள் அடைந்து மக்களின் நலத்திற்காக அற்புதங்களை நடத்தினார். சிவலிங்கேஸ்வரர் பதினேழாம் நூற்றாண்டின் முடிவிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் மக்கள் முன்பு இருந்தவர். குல்பர்கா தாலுகாவில் கொல்லூர் கிராமத்தில் பிறந்தவர். இளம் வயதில் ஒரு நாள் இவர் தம் கிராமம் அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்று ஒரு பெரிய ஆல மரத்தடியில் சிவ தியானத்தில் இருந்தார்.

 

அப்போது சிவபெருமான் இவருக்கு அருள் புரிந்திட ஒரு முனிவர் தோற்றத்தில் காட்சி அளித்தார். “பாலகனே! நான் ஜங்கமர்! சிவபுரத்தினுடைய குரு சித்த கடவுள் ஆவேன்” என்று கூறி சிவலிங்கேஸ்வரருக்கு லிங்க தீட்சை அளித்தார். சடஸ் தலதத்துவத்தினை விளக்கினார்.

 

வீரசைவ தத்துவ தெளிவினை அளித்தார். அதைத்தொடர்ந்து துறவறம் பூண்ட சிவலிங்கேஸ்வரர் பெற்றோரிடம் விடைபெற்று சாவளிகே கிராமம் அருகே காட்டுப் பகுதியில் மடம் ஒன்றினை அமைத்து தன்னை நாடி வரும் மக்களுக்கு நன்மைகள் செய்து வந்தார்.

 

இவரின் மடத்தின் அருகிலுள்ள ஒரு காந்தமரம் என்ற மரத்தின் பகுதியில் “காளக” என்ற பிரம்ம ராட்சசன் இருந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரும் மக்களையும், பயிர் வகைகளையும் துவம்சம்  கோசம் எது கொண்டு இருந்தான்.ஒரு நாள் இவர் இதனை அறியாது அந்த மரத்தின் அருகே பாதங்களை பதித்தபோது திடீர் என அந்த பிரம்ம ராட்சசன் இவர் முன் தோன்றி சிவலிங்ககேஸ்வரரின் பாதங்களை வணங்கியது.

 

அத்துடன் “நான் கூளி எம்பூர் பகுதியைச் சேர்ந்த பிராமண குலத்தைச் சேர்ந்தவன் எனது குருவையே மதிக்காமல் போனதால் பிரம்ம ராட்சசனாக குருவால் சாபம் பெற்றேன். என் தவற்றினை அறிந்து நான் குருவிடம் பணிந்து பாவ விமோசனம் அளிக்குமாறு கேட்டிட மனம் இளகிய குரு, வானவர் வருகின்ற காலங்களில் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளை தரிசிப்பதன் மூலம் சாப விமோசனம் கிடைக்கும்.” என்ற விவரத்தினை கூறியதும்,

 

அந்த பிரம்ம ராட்சசனை அப்போதே சிவலிங்கேஸ்வரர் ஆசீர்வதித்து சாப விமோசனம் அளித்தார்.

 

குல்பர்கா பகுதியில் ஷாஹி மொகலாய மன்னரின் ஆட்சியின்போது மக்களால் மிகவும் போற்றப்பட்ட காஜா பந்தே நவாஸ் வலி என்கிற மிஸ்டிகா முனிவர் இருந்து வந்தார். இவர் சுபி கோசம் தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இந்த முஸ்லீம் முனிவரும் சிவலிங்கேஸ்வரரின் அறியலானார். அருமை, பெருமைகளை

 

சிவலிங்கேஸ்வரர் (இறை) சிவத்தியானம் மூலம் பெற்றிட்ட அருள் சக்தி மூலம் அற்புதங்களை மக்களின் நலனிற்காக நிகழ்த்தி வருவதை அறிய மிஸ்டிகா முனிவரும் சிவலிங்கேஸ்வரரை நேரில் சந்திக்க ஆர்வம் அளவு கடந்தது.

 

அதைத்தொடர்ந்து சிவலிங்கேஸ்வரரை தன் இடத்திற்கு வருமாறு பிறர்மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் ஏனோ சிவலிங்கேஸ்வரர் வரவில்லை. அதனால் தானே சிவலிங்கேஸ்வரர் இருப்பிடத்திற்கு செல்ல விரும்பிட்ட மிஸ்டிகா முனிவர் புலியினை வாகனமாகக் போற்றியபடி கொண்டு அமர்ந்தபடி அவரைப் பின்பற்றி விசேஷமான மேள தாளங்களுடன் பலர்புடைசூழ பின் சென்றனர். செல்ல

 

சிவலிங்கேஸ்வரர் சுவாமி மடத்தின் முன்புற திண்ணை மீது உட்கார்ந்து கொண்டு சிவபெருமானின் அருமை, பெருமைகளை பற்றி சீடர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அதே நேரத்தில்தனது ஞான திருஷ்டியின் மூலம் தன்னைக்காண புலியின் மீது வரும் முஸ்லீம் முனிவரை வரவேற்றிட எண்ணம் கொண்டார் சிவலிங்கேஸ்வரர், உடனே சிவலிங்கேஸ்வரர்தான் அமர்ந்து கொண்டு இருந்த திண்ணையினை முன்னே நகர்ந்து போகுமாறு கூறினார். அதன்படி திண்ணையானது அலேக்காக சிவலிங்கேஸ்வரரை தாங்கியபடி முன்னே நகர்ந்து கொண்டே சென்றது.

 

சிவலிங்கேஸ்வரர் திண்ணை மீது சவாரி செய்தபடி தம்மை வரவேற்க வருவதைக் கண்டு புலியின் மீது வந்த முஸ்லீம் முனிவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். உயிரற்ற பொருளையும் தன் சக்தியால் இயக்கி நம்மை வரவேற்க வரும் சிவலிங்கேஸ்வரர் சிறந்தவர் என்பதை அறிந்து புலியின் மீதிருந்து இறங்கி ஓடோடிச் சென்று சிவலிங்கேஸ்வரரின் கரம் பிடித்து மகிழ்ந்தார்.

 

சிவலிங்கேஸ்வரர் பாலகேடாவிற்கு வந்த சமயம் வரலாற்று புகழ்பெற்ற மொகலாய மன்னன் ஒளரங்கசீப் ஒருசமயம் பாலகேடா நதியில் தண்ணீர் மீது ஜலாசனம் போட்டு நமாஸ் செய்ய ஆரம்பித்தார்.

 

இந்த விஷயத்தை பக்தர்கள் மூலமாகக் கேள்விப்பட்ட சிவலிங்கேஸ்வரர் ஒருசமயம் ஒளரங்கசீப் வழக்கம்போல ஜலாசனம் போட்டு நமாஸ் செய்ய முற்படும்போது அங்கு சென்றார். ஔரங்கசீப் எதிரில் நீரின் மேல்மட்டத்திற்கு மேல் அந்தரமாக பத்மாசனம் போட்ட கோசம் நிலையில் தன் உருவினை காண்பித்தார். அப்போது ஒளரங்கசீப்பிடம் “மன்னனே இது யோகாப்பியாசம் மூலம் செய்யக்கூடிய ஒன்றே தவிர, வேறெந்த தெய்வீக சக்தியாலும் செய்யக்கூடியது அல்ல” என்று புரியவைத்தார்.

 

சிவலிங்கேஸ்வரரின் கருத்துக்களால் கவரப்பட்ட ஒளரங்கசீப் அளவில்லா ஆனந்தம் கொண்டார். ஒரேநாளில் ஒருமடம் ஒன்றினை உருவாக்கி சிவலிங்கேஸ்வரருக்கு அளித்தார்.

 

ஒருநாள் சிவலிங்கேஸ்வரர் தன்னுடன் மடத்தில் தங்கி ஆன்மீக சேவைக்கே தன் வாழ்வை அர்ப்பணித்த சரணிமுள்ளம்மாவிடம் “ஐந்து தினங்களுக்கு குகைக்குள் யோக சமாதியினை மேற்கொள்ளப் போகிறேன். அந்த ஐந்து தினங்கள் வரையில் குகைக்கு போகும் அறையின் கதவை பூட்டிவிட்டு எனக்காக காத்திருக்கவும் ” என்று கூறிவிட்டு அதன்படி குகைக்குள்ளே சென்றுவிட்டார்.

 

குகைக்குள் சிவலிங்கேஸ்வரரின் உடலானது விபூதியாக மாறிவிட்டு இருந்தது. அந்த ஐந்து தினங்கள் முடிந்தவுடனே பக்தர்கள் குகையினை திறந்து பார்த்தார்கள்.சிவலிங்கேஸ்வரர் அமர்ந்த குகையின் உள்பகுதியில் மல்லிகைப் பூக்கள் குவியலாக இருப்பதையும், அவற்றின் மையப் புகுதியில் மூன்று விபூதி குவியல் இருப்பதையும், கற்பூர ஜோதியினையும் கண்டனர்.

 

அப்போது அசரீரி குரல் ஒன்று பக்தர்கள் அனைவருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் குகை சமாதியில் வலது புறம் உள்ள திருநீற்று குவியலை ஹிரே சாவளிகே மடத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இடதுபுற விபூதி குவியலை முஷ்டக்கி சித்தராமன் வீட்டில் ஸ்தாபிதப்படுத்த வேண்டும். நடுவில் உள்ள திருநீற்று குவியல் அந்த இடத்திலேயே இருக்கட்டும். அந்த திருநீற்று குவியல் தரிசனம் கண்டு நாடிவரும் பக்தர்கள் நல்ல நிலையை அடையட்டும் என்று ஒலித்தது. இந்த அதிசய நிகழ்ச்சியினை ஆரம்பம் முதல் கோசம் கண்டு வந்த சரணி முள்ளம்மா அப்போதே ஆண்டவனோடு ஐக்கியமானார். இவ்வாறு சிவலிங்கேஸ்வரர் தன்னுடைய முதல் ஜீவ சமாதியினை ஏற்படுத்திக் கொண்ட பிறகு சில காலங்களுக்குப் பிறகு சிவலிங்கேஸ்வரர் வாழ்ந்த பகுதிகளில் கோசம் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநில வட மாவட்டங்களில் மக்களுக்கு விவசாயத்திற்கு தேவையான அளவில் மழை பெய்யாததால் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக சிவலிங்கேஸ்வரரை பின்பற்றிய வீரசைவர்கள் தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்தனர்.

 

அந்த வீரசைவர்கள் வேலூர் மாவட்டத்தில் நான் வசித்து வரும் வாலாஜா மற்றும் ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் அதிகம் வந்து வாழ்ந்திட ஆரம்பித்தனர். இவர்கள் இந்த வகையில் வாழ்ந்து கொண்டு இருக்கும்போது தற்செயலாக ஒருவரை பார்த்தபோது பரபரப்படைந்தனர். ஆச்சரியம் அடைந்தனர் கோசம். காரணம் தாங்கள் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்தபோது தாங்கள் பெரிதும் போற்றி வந்த, ஜீவசமாதி அடைந்த அதே சிவலிங்கேஸ்வரர் மீண்டும் சுமார் 800 கிலோ மீட்டர் தூர அளவிலான இந்த ஊரில் நம் கண்முன் மீண்டும் அதே தோற்றத்துடன் நடமாடுகிறாரே என்பதே.

 

மந்தகரை மடத்தில் வேண்டுகோளுக்கிணங்க மக்களின் வந்த தங்கி சிவலிங்கேஸ்வரர் முன்புபோல வீரசைவர்களுக்கும் தன்னை நாடி வந்தோர்க்கும் அருளாசி வழங்கி வந்தார்.

 

ஜீவ சமாதியானவர் மீண்டும் உயிர் பெற்று தம்மிடையே தோன்றி அருளாசி புரிந்து வந்த சிவலிங்கேஸ்வரரை கண்கண்ட தெய்வமாகவே ஆம்பூர் பகுதி வீரசைவ மக்கள் போற்றி வந்தன. இதனிடையே இரண்டாவது கர்நாடகதமிழ் நாட்டில் 1748ல் இருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பிரான்ஸ் நாட்டு ராணுவ தளபதியான டுப்ளேவிற்கும் ஆற்காடு நவாப்பான அன்வர் உதீனுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டு இருந்தது.

 

இந்த காலகட்டத்தில் ஆம்பூர் – பேரணாம்பட்டு சாலையில் உள்ள கைலாசகிரி மலைமீது அன்வர் உதீன் தங்கி இருந்தான். அப்போது அருகில் உள்ள பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த தனது காதலியினை அடிக்கடி சென்று சந்தித்து உறவாடி வந்தான்.

 

இவ்வாறு வழக்கமாக தன் காதலியை சந்திக்க செல்லும் சாலையில் ஒருநாள் கஸ்பா பகுதிக்கு அருகே சோமலாபுரம் சாலையில் குதிரையில் சவாரி செய்து வந்தான் நவாப். அப்போது ஒரு மொட்டை சுவரின் மீது சிவலிங்கேஸ்வரர் உட்கார்ந்துகொண்டு இருந்தார். குதிரையில் வந்த நவாபிடம் நில் என்றார். அதன்படி குதிரையை ஓட விடாமல் நிறுத்திய நவாப்பிடம் “நான் உட்கார்ந்து உள்ள இந்த சுவற்றுடன், உன் குதிரையுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டியிட தயாரா?” என்றார் சிவலிங்கேஸ்வரர்.

 

இதனை கேட்ட நவாப், “பைத்தியக்காரனே என்னையே போட்டிக்கு அழைக்கிறாயா?” என்று ஏளனமாகவும் கோபமாகவும் கத்தினான். அதனைக் கேட்ட சிவலிங்கேஸ்வரர் நவாபின் கோபத்தினை பொருட்படுத்தாமல் உறுதியான குரலில் நவாப்பினைப் பார்த்து, “என்னோடு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு நீ வெற்றி பெற்றால் மட்டுமே இந்த சாலை வழியாக நீ செல்ல அனுமதிப்பேன். தோற்றுவிட்டால் நீ இந்த சாலை வழியே போகவிடமாட்டேன்” என்றார். அதனைக்கேட்ட நவாப்பிற்கு கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என்று தெரியாமல் இந்த வேடிக்கையான நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டான்.

 

அதைத் தொடர்ந்து நவாப் குதிரை மீது உட்கார்ந்துகொண்டு குதிரையை வேகமாக ஓட்டியபடி இந்த பைத்தியக்காரன் மொட்டை சுவரில் வருவதாவது ஏது என்று அலட்சியமாக நினைத்தபடி அதிக வேகத்தில் குதிரையை செலுத்தி காதலி வீட்டை நோக்கி பறந்தான். சிறிது தொலைவை கடந்தபோது திரும்பி பார்த்த நவாப் திடுக்கிட்டான். சிவலிங்கேஸ்வரர் அமர்ந்து கொண்டு இருந்த மொட்டை சுவர் அலேக்காக பூமியில் இருந்து பெயர்த்துக் கொண்டு அந்தரத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தது.

 

சில நிமிஷத்தில் நவாப்பின் குதிரையும் அந்த மொட்டைச் சுவற்றின் மேல் இருந்த சிவலிங்கேஸ்வரர் ஜானே குதிரைக்கு முன்பு வந்து ஜெயித்து விட்டதாக குதிரையினை நிறுத்த வைத்தார். நடப்பது கனவா? என்று அதிர்ச்சியில் மூழ்கியநவாப் முடிவில் சிவலிங்கேஸ்வரர் ஒரு சித்தமகான் என்பதை உணர்ந்து பணிந்தார், வணங்கினார்.

 

நாவப்பிடம் இந்த உலகில் உயிரற்று இருக்கும் பொருள்களில் கூட உயிர் இருக்கின்றது என்பதனை உணர்ந்தவே இந்த நிகழ்ச்சியினை காண்பித்தேன் என்றார் சிவலிங்கேஸ்வரர், சிவலிங்கேஸ்வரர் நவாப்பிற்கு அருளாசி வழங்கியதைத் தொடர்ந்து சன்மானமாக என்னிடம் தாங்கள் ஏதாவது பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்றான் நவாப்.

 

நவாப்பானவன் பல ஏக்கர் நிலங்களை தனக்கு இலவசமாக கொடுத்திட ஆசைப்பட்டும் அந்த அளவிற்கு தேவை இல்லை. தான் ஜீவ சமாதியாகும் நேரம் விரைவில் வருவதால் அந்த சமாதி அமைவதற்கு தேவையான இடம் மட்டுமே அளித்தால் போதும் என்றார் சிவலிங்கேஸ்வரர்,

 

அதன்படி சிவலிங்கேஸ்வரர் ஜீவசமாதி

 

அடைந்திடும் நாளினை தெரிவித்தார். அந்த நாளில் கூடிய அனைவருக்கும் அருளாசியினை சிவலிங்கேஸ்வரர் வழங்கியபின் சமாதியில் உட்கார்ந்த பிறகு சமாதியினை மூடிவிடுங்கள். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு எவருமே திறந்து பார்த்திடக் கூடாது. அந்த ஏழு நாட்கள் போனபிறகே அதேநாள் அன்றே கோசம் சமாதியினை திறந்து பார்த்தபின் மீண்டும் சமாதியினை நிரந்தரமாக மூடிவிடவேண்டும். ஆனால் சமாதியின் மேல் பகுதியை மூடிவிடாமல் இருக்கவும் என்றார்.

 

அதைத் தொடர்ந்து மூடப்பட்ட சமாதியானது சிவலிங்கேஸ்வரர் குறிப்பிட்ட நாளில் ஊர் மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது சிவலிங்கேஸ்வரர் உடல் காணப்படவில்லை. ஆனால் லிங்கம் ஒன்று இருந்தது. பிறகு சமாதியினை நிரந்தரமாக பூட்டி மூடிவிட்டனர். இப்போது அனைவரும் மூடப்பட்ட சமாதியினைத்தான் பார்த்து செல்கிறார்கள்.

 

சிவலிங்கேஸ்வரர் சாவளிகேயில் சமாதியின்போது விபூதி குவியலாக காட்சி அளித்தார். இரண்டாவது முறை சமாதியானபோது லிங்கமாக காட்சி அளித்தார்.

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மூன்று கி.மீ. தூர அளவில் கஸ்பா ஏ என்ற பகுதி உள்ளது. அந்த கஸ்பா -ஏவில் சோமலாபுரம் சாலையில் தான் சிவலிங்கேஸ்வரரின் ஜீவசமாதி கோயில் உள்ளது. முதல் ஜீவசமாதியினை திரிசித்திட அங்கேயே வழியினை தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த ஆன்மீக கட்டுரையினை முடிக்கும். நேரத்தில் இந்த சிவலிங்கேஸ்வர சித்தர் பற்றி என்பார்வைக்கு கொண்டு வந்த ஆம்பூர் இளைஞர் வி.லோகேஷ் என்பவருக்கு எனது இதயங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ஆலய நியமங்கள் கோவில் சாஸ்திரங்கள்

 

ஞான ஸ்படிகமாகிருதம் தேவம் நிர்மல ஆதாரம் சர்வ அத்யானம் ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவ முபாஸ்யமஹே!”

 

மழை பெய்கின்றது. எல்லாபாத்திரங்களுக்கும் ஒரே மாதிரிதான் தண்ணீர் கிடைக்கின்றது. ஒரு பாத்திரம் காலியாக இருந்தால் அப்பாத்திரம் முழுவதும் தண்ணீர் நிரம்பும். ஒரு பாத்திரத்தில் முக்கால் பங்கு மண் இருந்தால் கால்பாகம் தண்ணீர் நிரம்பும். அந்த மண் அகற்றப்பட்டால் அப்பாத்திரம் முழுவதும் நீர் நிரம்பிவிடும். உடலாகிய இந்த பாத்திரத்தில் காமக்குரோதம் மலங்கள் நிரம்பியிருக்கின்றன. அவை காலி செய்யப்பட்டால்தான் தெய்வம் அருள் நிரம்பும். தெய்வ உருவத்தில் மனதை நிலை நிற்கச் செய்யகோசம் வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தெய்வ வழிபாடு பலனளிக்காது. கடவுள் அருள் எப்போதும் கிடைக்கும். அதைப்பெற முயற்சி செய்ய வேண்டும்.

 

ஆலயத்தின் கொடி மரத்தின்கீழ் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அந்தந்த சன்னதிகளில் இரு கரங்களையும் சிரசின் மேல் கூப்பி வணங்கி விட்டு பின் மறுபடியும் கொடிமரத்தின் கீழ் நமஸ்காரம் செய்துவிட்டு பின்னரே திரும்ப வேண்டும். வீட்டினில் செய்து வரும் நித்ய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்லலாகாது. ஒருவரை கெடுப்பதற்காக, தண்டிக்க வேண்டி இறைவனிடம் வேண்டக்கூடாது. தம்பதிகள் உடல் உறவிற்குப் பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம்

Read Also: https://navashakthibaba.in/18-siddhar-temples-in-chennai/

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *