காற்றுக்கு போடு  வேலி ஆன்மீக உயர் நிலை

காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை

காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை – காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை முதன் முதலில் பிராணாயமத்தின் முழுமையான பொருள் பற்றிச் சிறிது அறிய முயல்வோம். பிரபஞ்சத்திலுள்ள எல்லாச் சக்திகளுடைய தொகுப்பே பிராணன் என்பதாகத் தத்துவ நூல் குறிப்பிடுகிறது. தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி இந்தப் பிரபஞ்சம் அலைகள் வடிவில் வெளியாகிக் கொண்டு இக்கிறது.

அது எழுகின்றது; வீழ்கின்றது; உருகிப் போகின்றது.

 

மீண்டும் மீண்டும் இந்த விதமான வேறுபாடுகளுடன் எல்லாம் அது தோன்றி வெளிப்படுகிறது. வெளியானது போலவே திரும்பவும் அது மெதுவாகவும் படிப்படியாகவும் சுருங்கித் தன் முன்னைய நிலையை அடைகிறது.

 

இவ்வாறு துடிப்புப்போல அது ஒரு நாடியின் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த உலகம் சடப்பொருளாலும் ஆக்கப்பட்டிருக்கிறது.

முழுவதும் சக்தியாலும் ஆகாசம் என்று சொல்லப்படும் ஒரு பொருளே படைப்பின் முதலில் தோன்றிய சடப்பொருளாகும்.

 

இந்த முதற்பொருளில்இருந்தே கடினப் பொருளாகவும் நீர் பொருளாகவும் இருக்கிற சடப்பொருள்கள் எல்லாம் தோன்றின என்று வடமொழித் தத்துவ ஞானிகள் கூறுகின்றார்கள். மேலும் நாம் இயற்கையில் காணும் சக்திகள் எல்லாம் உற்பத்திக்காலத்தில் தோன்றிய ஆதி சக்தியின் தோற்றங்கள் ஆகும் என்றும்,

 

இந்த ஆதி சக்தியின் பெயர் பிராணன் என்றும் அதே வடமொழித் தத்துவ ஞானிகள் கூறுகின்றார்கள்.

 

இந்தப்பிராணன் மேலே குறிப்பிட்ட ஆகாசம் என்பதுடன் கலந்து இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்குகிறது. “யுகம்” என்று கூறப்படும். நெடுங்காலத்திற்குப் பிறகு ஓய்வுக் காலம் என்பதுஉண்டு. ஒரு சுறுசுறுப்புக் காலமும் அதன் பிறகு ஓர் ஓய்வுக் காலமும் அமையும். இதுவே எல்லாவற்றிற்கும் பொதுவான இயற்கையாகும். இந்த ஓய்வுக் காலம் தொடங்கும்போது. பிரபஞ்சத்தில் நாம் பார்க்கிற உருவங்கள் எல்லாம் சூரியன், சந்திரன்,

நட்சத்திரங்கள் எல்லாம்உருகி

உருகி மீண்டும் ஆகாசம் ஆகின்றன. இத்தகைய ஆகாசம் சித்துண்டு சிதறுண்டு பரவி விடுகின்றன. உடலிலிருக்கிற சக்திகளாகவும், நெஞ்சிலுள்ள சக்திகளாகவும் பூமியின் ஈர்க்கும் சக்தியாகவும், இயக்கமாகவும், எண்ணமாகவும் உள்ள

இந்தச் சக்திகள் எல்லாம் சிதறிப்போய், படைப்புக் காலத்தில் தோன்றிய முதல் பிராணனில் கலந்து விடுகின்றன.

 

இதனால் பிராணாயமத்தின் அவசியத்தை நாம் அறியலாம். எங்கெங்கும் ஆகாசம் நம்மைச் சூழ்ந்து, ஊடுருவி நிற்பதுபோல, நாம் காண்கிற ஒவ்வொன்றும் ஆகாசத்தாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.

பனிக்கட்டித் துண்டுகள் ஏரியில் மிதப்பதுபோல நாம் அதில் மிதந்து கொண்டிருக்கிறோம். பனிக்கட்டித் துண்டுகள் உற்பத்தியாகும். அதே ஏரி நீரில் மிதக்கின்றன.

 

ஆகவே இருக்கிற ஒவ்வொரு பொருளும் இந்த ஆகாசத்தால், ஆக்கப்படுகிறது; இந்த ஆகாசம் என்ற கடலிலேயே அவை மிதந்து கொண்டும் இருக்கின்றன. இந்தப் பிராணனால் ஆன பரந்துவிரிந்த கடலால் நாம் சூழப்படுகிறோம். இந்தப் பிராணனையே நாம் சுவாசிக்கிறோம். இந்த பிராணனால் தான் நமது இரத்தம் உடல் முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டு இருக்கிறது.

 

நமது நரம்புகளிலும் தசைகளிலும் இருக்கும் சக்தி இந்தப் பிராணனே. நமது மூளையில் இருக்கும் சக்தியும் இந்தப் பிராணனே எல்லாம் சடப் பொருள்களும் ஒரே ஆகாசத்தின் பல்வேறு விதமான தோற்றங்களாக இருப்பதுபோல, எல்லாச் சக்திகளும் இந்த ஒரே பிராணனுடைய பல்வேறு தோற்றங்களாவே இருக்கின்றன. தூலப் பொருளுக்கு உரிய காரணங்களை நாம் எப்பொழுதும் காண்கிறோம். நுண்பொருளில்

 

வேதியியல் விஞ்ஞானி ஒருவர் கனத்த உலோகத் துண்டொன்றை எடுத்து அதைப் பிரித்துப்பிரித்து அதிலுள்ள மூலப் பொருள்களைப் பார்க்கிறார்.

எந்த நுண்பொருள்களால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் கண்டுபிடிக்க விரும்புகிறார். அவ்வாறே நாமும் நம்முடைய கருத்திலும் அறிவிலும் இருக்கிற நுண் பொருள்களைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்.

Also Read : https://navashakthibaba.in/mohinis-yoginis-their-temples/

தூலப் பொருளின் விளக்கம் நுண்பொருளின் இருக்கிறது. தூலப் பொருள் காரியம்: நுண் பொருள் காரணம். நாம் பார்க்கிற, உணர்கிற இந்தத் தூல உலகத்திற்கு உரிய காரணமும் விளக்கமும் நமது எண்ணத்தின் அடியில் இருக்கின்றன. நம்முடைய இந்த மனித உடலில் கைகளின் அசைவு, உதடுகளின்

 

அசைவு போன்ற தூல அசைவுகளையே நாம் முதலில் காண்கிறோம்.

 

இவற்றிற்கு உரிய காரணங்கள் எங்கு இருக்கின்றன? இந்தத் தூல அசைவுகளுக்குக் காரணம் நுண்ணிய நரம்புகளே. இந்த நுண்ணிய நரம்புகளின் அசைவுகளை நாம் உணரவே இயலாது. நம் ஐம்புலன்களால் பார்க்கவோ, தொடவோ அவற்றினுடைய ஆதாரத்தைக் கண்டுபிடிக்கவோ இயலாதபடி இந்த நரம்புகளின் அசைவுகள் நுண்ணியனவாய் இருக்கின்றன. இந்த நரம்புகளின் அசைவுகள் வேறு சில மிக நுண்ணிய அசைவுகளால் ஏற்படுகின்றன.

 

அவற்றை நாம் எண்ணங்கள் என்கிறோம். அந்த எண்ணமும் மிகவும் பின்புறத்தே உள்ள வேறு ஒரு நுண்பொருளால் ஏற்படுகின்றது. அந்தநுண்பொருளே நமது ஆன்மா. நம்மையே நாம். அறிந்து கொள்வதற்கு முதலில் நமது புலன் அறிவை நுண்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்டது நுண்ணோக்கியோ (Microscpoe) வேறு கருவிகளோ நமது உடலுக்குள் எப்பொதும் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும் நுண்மையான அசைவுகளைக் காண்பதற்கு நமக்கு உதவாது.

 

அத்தகைய கருவிகளைக்கொண்டு நாம் அந்த அசைவுகளை ஒரு பொழுதும் காணவே இயலாது. ஒரு யோகி தன் மனத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு வேண்டிய கருவியை உற்பத்தி செய்து தரும் விஞ் ஞானத்தை அறிந்திருக்கிறான். அந்தக் கருவி மனத்திலேயே இருக்கிறது. மிக மிக நுண்மையான உணர்வுகளையும் அறியும் ஆற்றல் பெரும் தகுதி மனத்திற்கு உண்டு. அத்தகைய தகுதியை வேறு எந்தக் கருவியும் எப்பொழுதும் பெற இயலாது.

 

இத்தகைய மிகமிக நுண்ணிய, உணர்ந்து அறியும் அறிவுச் சக்தியைப் (Superfine Perception) பெறுவதற்காக நாம் தூலத்திலிருந்து தொடங்க வேண்டி இருக்கிறது. இந்தச் சக்தி நுண்மை அடைய அடைய, நாம் நமது இயல்பில் இயற்கையில் மிகமிக ஆழ்ந்து செல்கிறோம். முதலில் தூல அசைவுகள் புலப்படும். எண்ணம் தோன்றுவதன் முன்னே அது தோன்றப் போவதை நம்மால் அப்போது அறிந்து கொள்ள முடியும்.

 

அந்த எண்ணம் செல்லும் போக்கிளையும், அது எங்கு முடிகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வோம். சாதாரண மனத்தில் ஓர் எண்ணம் எழுகிறது. அந்த எண்ணம் எவ்வாறு எழுந்தது? எங்கிருந்து வந்தது என்பதை அந்த மனம் அறியாது. அலைகள் எழுகின்ற கடல் போன்றது மனம். அந்தக் கடலில் எழுகிற அலையை மனிதன் ஒருவன் பார்க்கலாம். என்றாலும்,

அந்த அலை அங்கு எப்படி வந்தது என்பதோ அல்லது அது எங்குத் தோன்றியது என்பதோ, எங்குச் சென்று அது அழிந்து போகும் என்பதோ அவனுக்குத் தெரியாது.

 

எனவே, இவற்றிற்கு அப்பால் அவனால் செல்லவே இயலாது. ஆனால் புலன் அறிவு உணர்ந்து அறியும் அறிவு நுண்மை அடையும்போது இந்த அலையின் போக்கை நெடுந்தூரம் காணலாம். அதுநீரின் மேற்பரப்பில் தோன்றும் முன்னரே அதை அறிந்து கொள்ளலாம். மேலும் அது மறைந்து போகிற இடத்திலிருந்து நெடுந்தூரம் வரையில் செல்வதைத் தொடர்ந்து பார்க்கவும் நம்மால் இயலும்.

 

அப்போது நாம் மனநூலை உள்ளது உள்ளபடியே அறியலாம். இக்காலத்தில் மனிதர்கள் இதைப் பற்றியும் அதைப் பற்றியும் பல நூல்களை எழுதிக் குவிக்கின்றனர். அவை யாவும் மக்களைத் தவறான பாதையிலேயே கொண்டு செல்கின்றன.

 

ஏனெனில், அவ்வாறு எழுதுகிறவர்கள் தங்களது மனத்தை ஆராய்ந்து பகுத்துணரும் ஆற்றல் இல்லாதவர்கள்.

 

மேலும்

அவர்கள் தாங்கள் அறியாத பொருள்களைப் பற்றிப் பேசுபவர்களாகவும் ஊகம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லா

விஞ் ஞானமும் உண்மைகளையே அடிப்படையாகச் கொண்டிருக்க வேண்டும். இந்த உண்மைகள் எல்லாம் காணத் தக்கனவாய் இருக்க வேண்டும்.

 

இந்த உண்மைகளில் மறைந்திருக்கும் ஒரு பொது விதியை நாம் அறிந்து வெளிப்படுத்த வேண்டும். ஒரு பொது விதியைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு உங்களிடம் சில உண்மைகள் சேர்கிற வரையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆகவே பொது விதியைக் காண முயலும் முயற்சிகள் எல்லாம். அதற்கான அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

 

ஒருவர் ஒரு கொள்கையை எடுத்துக் கூறுகிறார். அத்துடன் வேறு பல கொள்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறிக்கொண்டே போகிறார். இவ்வாறு செய்து ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத கொள்கைகளை நிரப்பி ஒரு முழு புத்தகத்தை உருவாக்கி விடுகிறார்.

 

அந்தக் கொள்கைகளுள் ஒன்றிலாவது கடுகளவு கருத்தோ, பொருளோ இருக்காது. உங்கள் மனத்தைப் பற்றிய உண்மைகளை நீங்கள் முதலில் தேடித் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும் உங்கள் மனத்தைப் பகுத்துணர்ந்து அறியும் சக்திகளை நுண்மையாக்கிக் கொண்டே சென்று உள்ளே நடப்பதை நீங்கள் பார்க்கும் போதுதான் உங்கள் மனத்தைப் பற்றிய உண்மைகளை அறிய இயலும் என்றும் இந்த உண்மைகளை அறிந்த பிறகு நீங்கள் பொது விதியை எடுத்துக் கூறலாம் என்றும். அப்போதுதான் உண்மையான மன நூல் விஞ்ஞானத்தை நீங்கள் அறிந்தவர்கள் ஆவிகள் என்றும் ராஜயோகம் என்ற விஞ்ஞானம் கூறுகிறது.

 

நான் முன்னரே கூறியபடி நுண்மையான அறிவாற்றலைப் பெறுவதற்கு முதலில் தூலமாக அமையும் அறிவாற்றலின் உதவி நமக்கு வேண்டும். வெளிப்படையாக தோன்றும் செயலின் போக்கு தூலமானது. இதைப் பின்பற்றி மேலும் மேலும் சென்றால் அறிவாற்றல் தொடர்ந்து படிப்படியாக நுண்மையாகி வரும்.

 

முடிவில் அது தன் நுண்மையின் உச்சநிலையை அடைந்து விடும். எனவே, இந்த உடலும் இதில் நாம் பெற்றிருக்கிற ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறானவை அல்ல. அவை எல்லாம் கடினமான பகுதியிலிருந்து படிப்படியாக நுண்மை எய்திச் செல்லும் ஒரு சங்கிலித் தொடரின் வளையங்கள் போன்றவை எனலாம். நீங்கள் எல்லாம் நிறைந்த ஒரு முழுமை

 

இந்த உடல் உள்ளே இருப்பவற்றின் கடினமான வெளித் தோற்றமாகும். வெளிப்புறம் தூலமானது. உட்புறம் நுண்மையானது. இவ்வாறு உட்பகுதி எல்லாம் படிப்படியாக நுண்மை அடைந்து கொண்டே செல்கிறது. நுண்மையின் உச்சநிலை ஆன்மாவில் ஏற்படுகிறது. இந்த ஆன்மாவே எல்லாமாகியிருக்கிறது. இந்த ஆன்மாவே முதலில் மனமாகி, பிறகு இந்த உலகமாயிற்று: இந்த ஆன்மாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. வேறாகத் தெரிகிற இவை எல்லாம் அந்த ஆன்மாவிலிருந்து தோன்றிப் படிப்படியாக நுண்மையை இழந்து படிப்படியாகக் கடினமாக மாறிய பகுதிகளே ஆகும் என்பவையெல்லாம் தாம் ஆன்மாவை அடையும்போது தான் தெரிகிறது.

 

இதை ஓர் உவமையாகக் கொண்டு பார்த்தால் இந்த உலகம் முழுவதும் ஒரு தூலமான தோற்றம் என்பதையும் அதற்கு அப்பால் நுண்மையான அசைவுகள் இருக்கின்றன என்பதையும் அறிகிறோம். அந்த நுண்மையான அசைவைத் தான் நாம் கடவுளின் சித்தம் என்கிறோம். அதற்கும் அப்பால் எங்கும் பரவி நிற்கும் பரம்பொருள் இருக்கிறது. இந்தப் பரம்பொருளே கடவுளாகி, பிறகு இந்த உலகமாகிறது என்பதையும் பின்னர் அறிவோம்.

 

இந்த உலகம் ஒன்று. கடவுள் மற்றொன்று, பரந்து நிற்கும் பரம்பொருள் இன்னொன்று என்பது கருத்தல்ல. இவற்றையெல்லாம் ஊடுருவி நிற்கும் ஒன்றின் பல்வேறு தோற்றங்களே இவை எனக் கொள்ள வேண்டும். இவை எல்லாம் நமக்கு பிராணாயமத்திலிருந்து புலனாகின்றன. உடலுக்கு உள்ளே ஏற்பட்டுக் கொண்டே இருக்கிற இந்த நுண்மையான அசைவுகள் தமது சுவாசத்தோடு தொடர்பு கொண்டவை.

Also Read :

https://navashakthibaba.in/mohinis-yoginis-their-temples/

நாம் இந்தச் சுவாசத்தைப் பற்றிக் கொண்டு, இதை இயக்கவும் கட்டுப்படுத்தவும் கற்றுக் கொண்டால். படிப்படியாக நுண்மையான அசைவுகளையும் அடக்க முடியும். பின்னர் அதைப் பற்றிக் கொண்டே சென்றால் மன உலகை அடையலாம். சென்றபாடத்தின்போது, நான் உங்களுக்குக் கற்றுத் தந்த முதல் மூச்சுப் பயிற்சியானது இதற்கு ஏற்ற எளிய பயிற்சி. இதே மூச்சுப் பயிற்சிகளில் சில கடினமானவை.

 

கடினமான மூச்சுப் பயிற்சிகளுக்கு தகுந்த உணவுக் கட்டுப்பாடும் வேறு கட்டுப்பாடுகளும் மிகவும் தேவை. அவற்றை உங்களில் பலரால் கடைப்பிடிக்க இயலாது. ஆதலால், நான் அவற்றை ஒதுக்கி வைக்கிறேன். ஆகவே நாம் விரைவற்ற ஆனால் உறுதியான, எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

 

இந்த மூச்சுப் பயிற்சியில் மூன்று பாகங்கள் இருக்கின்றன. முதற்பாகத்தில் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். இதனை வடமொழியில் “பூரகம்” என்பர். பூரகம் என்பதற்கு “நிரப்புதல்” என்பது பொருள். இரண்டாவது பாகத்தைக் “கும்பகம்” என்பர். “நிறுத்தி வைத்தல்” என்பது இதன் பொருள். அதாவது நுரையீரல்களைக் காற்றால் நிரப்பி அதை வெளிவராதபடி தடுத்துவைத்தல். மூன்றாம் பகுதி “ரேசகம்” எனப்படும். “மூச்சை வெளியே விடுதல்” என்பது இதன் பொருள். மூச்சை உள்ளே இழுத்து அதை அங்கே நிறுத்தி வைத்துப் பிறகு அதை மெள்ள விடுகிற பயிற்சியே நான் இன்று கற்றுத் தரப்போகும் முதற் பயிற்சியாகும். மூச்சுப் பயிற்சியில் மற்றும் ஒருபடி இருக்கிறது. அதை நான் இன்று கற்றுத் தரப்போவதில்லை. ஏனெனில் அதை உங்களால் நினைவில் வைத்திருக்க முடியாது. அது அவ்வளவு சிக்கலானது. மூச்சுப் பயிற்சியிலுள்ள இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்ததே ஒரு பிராணாயாமம் ஆகும்.

இந்த மூச்சுப் பயிற்சியை முறையாகப் பயிலவேண்டும். இல்லாவிடில் உங்களுக்கு ஆபத்து நேரிடும்.

 

எண்ணிக்கைகளால் இந்த மூச்சுப் பயிற்சி ஒழுங்குமுறை செய்யப்பட்டு இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையை நான் உங்களுக்கு முதலில் சொல்லித் தருகிறேன். நான்கு வினாடி மூச்சை உள்ளே இழுங்கள்; பிறகு எட்டு வினாடி அதை அடக்கி வைத்திருங்கள்; பிறகு அதை மெதுவாக நான்கு வினாடிகளில் வெளியே விடுங்கள். இவ்வாறு காலையில் நான்கு முறையும், மாலையில் நான்கு முறையும் பயிலுங்கள்.

 

மேலும் அறிய வேண்டிய ஒன்று இருக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று என்று பொருளில்லாமல் எண்ணுவதைவிட நீங்கள் தெய்வீகமாகக் கருதுகிற ஒரு சொல்லைப் பல முறை சொல்லுவது மிகவும் நல்லது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *