நவசக்தி பாபா வில் தொடர்ந்து பல் வேறு ஜோதிட மற்றும் ஆன்மீக பதிவுகளை பார்த்து வருகிறோம்
இந்த பதிவில்
திருவாரூருக்கு பெருமை சேர்த்த திருவாரூரின் அடையாளம் ஆகிய சங்கீத மும்மூர்த்திகள் பற்றி பார்ப்போம்
1. சியாமா சாஸ்திரி
மும்மூர்த்திகளில் மூத்தவர் சியாமா சாஸ்திரி.
இவர் பிறந்த ஆண்டு கி.பி.1762. இவருக்கு முதலில் வெங்கட சுப்பிரமணியன் என்ற பெயர் இடப்பெற்றிருந்தாலும் சியாமா கிருஷ்ணா என்ற செல்ல பெயரால் இவர் அழைக்கப்பட்டதால் இப்பெயரே நிலைத்து விட்டது. இளமையிலேயே இவர் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார். தெலுங்கிலும் புலமை பெற்ற இவர்
தமது 18-வது வயதில் குடும்பத்துடன் திருவாரூரிலிருந்து தஞ் சாவூர் வந்தார். பங்காரு காமாட்சியின் பூஜை சாஸ்திரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது.
முதன்முதலாக சியாமா சாஸ்திரி இசை பயின்றது அவரது மாமாவிடத்தில் தான். சாஸ்திரியின் குரு சங்கீத ஸ்வாமி ஆவார்.குருவிடம் இருந்து சங்கீத தத்துவங்களையும் தாள நுட்பங்களையும் மிக விரைவில் கற்றார். அவர் இளமையிலேயே கீர்த்தனைகள் இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருத்திலும் பிறகு தெலுங்கிலும் இயற்றினார்.
ஒரு தடவை தன் சீடரான அலசூர் கிருஷ்ணய்யருடன் புதுக்கோட்டைக்குசென்றபோது முன்பின் தெரியாத ஒருவர் இவரை மதுரை மீனாட்சியம்மன் பேரில் சுருதிகளை பாட வேண்டும் என்று கேட்டார். அவர் அதை தெய்வக் கட்டளையாக நினைத்து நவரத்னமாலிகை என்ற 9 அரிய கருதிகளை பாடினர்.
ஆனந்த பிடித்தமானது பைரவி ராகம் இவருக்கு மிகவும் பிடித்தமானது
1.தேவிப்ரோவ – சிந்தாமணி – ஆதி
2. ப்ரோவவம்மா – மாஞ்சி -ஆதி
இராக முத்திரைகளை உருப்படிகளின் அழகாக அமைந்துள்ளார். (எடு) பைரவி ஸ்வரஜதி காமாட்சி பல சுருதிகளில் அருமையான ஸ்வரசாஹித்யங்களையும் அமைத்துள்ளார். இவரது சுருதிகளில் சில விலோம சாபு தளத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது தகிட-தகதிமி என்ற நடையில் இல்லாமல் தகதிமி -திகிட என்ற நடையில் அமைந்துள்ளன. (எ.டு) நின்று விளாகமரி பூ கல்யாணி மி. சாபு.
இவரது பைரவி ராக ஸ்வரஜதியின் சரணங்கள் ஒவ்வொன்றிலும் ஆரம்ப ஸ்வரங்களும் ஆரோகண கிரமத்தில் வரிசையாக அமைந்துள்ளன. ஸ்வராட்சங்களும் நன்றாக கையாளப்பட்டுள்ளன.
அதீத அனாகத்த எடுப்புகள், சொற்சுவை, பொருட்சுவை இசை நயம் முதலியவை இவருடைய சுருதிகளில் நிறைந்துள்ளன.
Sub title
சியாமா முத்திரையை இவருடைய முத்திரையாக
இவரது முத்திரை சியாமா கிருஷ்ணா ஆகும். கி.பி.1837 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் நாள் (65-வது வயதில்) இறைபதம் அடைந்தார்.
Read Also: https://navashakthibaba.in/are-you-longing-to-build-a-house/
2. தீயாகராஜர்
தியாகராஜர் திருவாரூரில் ஸர்வஜித் வருஷம் சித்திரை மாதத்தில் 25-ந்தேதி (4.5.1769) திங்கட்கிழமை பூச நட்சத்திரம். கடக லக்னம் கூடிய சுபதினத்தில் பிறந்தார். இவருடைய முன்னோர்கள் ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்த்தில் சாகர்லவம்சம் என்ற பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா அரசர்கள் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குடியேறிவர்கள் தியாகராஜரின் பாட்டனார். கிரிராஜ கலி என்பவர் ஷஹாஜி அரசர் காலத்தில் ஸமஸ்தான விதவானாக இருந்தவர் வடமொழியிலும், தெலுங்கிலும் யாட்ச கானஙகள் இயற்றியுள்ளார். தியாகராஜருடைய
தகப்பனார் ராமபிரம்ம என்பவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர் புராண பிரசவனத்தில் வல்லுநர் ஆகவே அவருடைய 2-வது குமாரரான தியாகராஜர், சிறு பிரயாத்திலிருந்தே ஸ்ரீமத் ராமாயணம். பாகவதம். பகவத்கீதை முதலான நூல்களை கற்றுணர்ந்தார்.
ராமபிரம்மம் குடும்பத்தோடு திருவையாற்றில் குடியேறியபின் தியாகராஜருக்கு 8 வயதில் உபநயனம் நடந்தது. விணை வித்வான் சொன்டி வெங்கட ரமணய்யர் என்பவரிடம் சங்கீதத்தை முறையாக கற்றுக் கொண்டார். அதில் தேர்ச்சியும் பெற்று விளங்கினார். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் அக்காலத்தில் அநேக கவிகளும் பாடகர்களும் ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தார்கள். தியாகராஜர் இறைபணி உயரிய ஆனால் நோக்கு இவைகளை கடைபிடித்து அன்றாடம் அஹிம்சை வைராக்கியம் புலனடக்கம் இவைகளில் சிறந்த உஞ்சி விருத்தி என்ற உத்தமமான பணியை மேற்கொண்டு பரம ஸாதுவாக திகழ்ந்தார்.
ஸ்ரீராம பிரான் அருளால் இவருக்கு 18 வயது முடியும்முன்பே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண யதீந்தரர் என்ற மகான் ஸ்ரீராமதார்க மந்திரத்தை உபதேசித்து 96 கோடி ஜபவிக்குமாறு அருளினார். இப்புனித நோம்பை 21 வருடங்கள் தீவிரமாக தொடர்ந்து நடத்தி (நாள் தோறும் 1,25,000 நாமாக்கள்) முடித்தார். வால்மிகி முனிவருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த நாரத மஹாரிஷியே அவருடைய அம்சமாய் தோன்றிய தியாகராஜருக்கு இசை ஞானத்தை அருளவே ஒரு நாள் சந்நியாசி வடிவில் வந்து ஸ்வரார்ணயம். நாரதீயம் என்ற இலக்கண நூல்களை அளித்து மறைந்ததாக தெரிய வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் குருவாய் வந்த நாரத முனிவரை பல கிருத்கள் மூலமாக போற்றி நன்றியைத் தெரிவித்துள்ளார்
. நமது இளம் இசை மேதை (ஸ்ரீ நாரத நாரத குருஸ்வாமி, வரநாரத) நாடெங்கும் ஸ்வாமிகளின் புகழ் பரவலாயிற்று.கோவூர் சென்ற போது சுந்தரேச கடவுளின் பேரில் 5 கீர்த்தனைகள் பாடினார். அவைகளுக்கு கோவுர் பஞ்சரத்னம் என்ற பெயர். கீர்த்தனைகளில் சங்கதி போடும் முறையை தியாகராஜர் தான் முதன்முதலில் நிர்ணயித்ததாக கூறப்படுகிறது. இவருடைய கீர்த்தனைகளில் மூலமாக சாஹித்யம் அமைப்பதில் தமக்குள்ள பெரும் ஆற்றலை காட்டியுள்ளார்.
நவரச கன்னட விஜயஸ்ரீ, பகுதாரி போன்ற அபூர்வ இராகங்களையும் தியாகராஜர் கையாண்டு உள்ளார். பிரஹலதி பக்தி விஜயம். சசீதாராம விஜயம். நௌகா சரித்திரம் முதலிய இசை நாடங்களையும் திவ்ய நாம கீர்த்தனைகள் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் முதலியவற்றையும் இயற்றியுள்ளார்.
80 வது வயதில் ஒருநாள் தியாகராஜர் தம் சீடர்களை அழைத்து அவர்களை பாடும்படி சொன்னார். அதுவே நமக்கு கடைசி நாள் என்பதை உணர்ந்த அவர், தன்யாசி ராகத்தில் சியாம சுந்தராங்க என்ற கீர்த்தனையை பாடினார். இதன்பின் சில விநாடிகளில் (கி.பி.1847 ஆம் ஆண்டுஜனவரி திங்கள் 6ஆம் நாள்) முக்தி பெற்றார்.
3. முத்துஸ்வாமி தீட்சிதர்
முத்துஸ்வாமி தீட்சிதருடைய தந்தையார் ஸ்ரீராமஸ்வாமி தீட்சிதர், தாயார் சுப்புலட்சுமி அம்மாள். 1775-ம் ஆண்டு மன்மத வருஷம் பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தியாகராஜ பெருமான் வஸந்தோத்ஸ்வதினத்தில் ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி வரபிரசாதத்தால் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு முத்துசுவாமி என்ற திருப்பெயர் சூட்டி பெற்றோர் அருமையாக சீராட்டி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சின்னசுவாமி என்ற வேங்கட வைத்தியநாதன் பாலம்பாள் என்னும் பெண் பாலுஸ்வாமி என்ற கடைசிப் பிள்ளை ஆகியோர் பிறந்தனர்.
தீட்சிதர் கர்னாடகக் கலையுடன் இந்துஸ்தானி சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றார். இதன் அறிகுறி கல்யாணியில் ஐம்பூபதே என்றும் பிருந்தாவன ஸாரங்காவில் சவுந்தர ராஜம் என்றும் தொடங்கும் கீர்த்தனங்களில் காணலாம்.
ஏகாம்பர நாதம் பஜேஹம் என்ற ஸ்ரீராக கீர்த்தனமும் நீரஜாட்சி காமாட்சி என்ற ஹிந்தோளக் கீர்த்தனமும் கஞ்சதனாய தாட்சி காமாட்சி என்ற கமலாமனோஹரி கீர்த்தனமும் ஸ்ரீ வரலட்சுமி என்ற ஸ்ரீராக கீர்த்தனமு பிரநசித்தமானவை காஞ் சியிலிருந்து சுவாமிகளிடம் விடை பெற்றுகொண்ட சிதம்பரம். ச்சீர்காழி, திருவண்ணாமலை முதலிய சில ஸ்தலங்களைக் கண்டு தீட்சிதர் திருவாரூர் சென்றார். தீட்சிதர் திருத்தனிக்குச் சென்றபொழுது அங்கு எழுந்தருளியுள்ள சுப்பிரமணியசாமி அவருடைய கனவில் தோன்றி வாயில் ஒரு கற்கண்டை போட்டுவிட்டு மறைந்தார். அப்போது தான் தீட்சிதர் ஸ்ரீநாததரி குருகுஹ என்ற மாயாமாளவ கௌவராகக் கிருதியை முதன்முதலாக இயற்றினார். அது முதற்கொண்டு தீட்சிதருக்கு கிருதிகள் செய்யும் வல்லமை உண்டாயிற்று. சுப்பிரமணியரின் அருளைப் பெற்றதால் அவர் தன்னுடைய கிருதிகளில் குஹனையே குருவாகக் கொண்டு குருகுஹ என்ற முத்திரையை அமைத்துள்ளார்.இவருடைய தொகுதிக் கீர்த்தனைகளாவன.
1. கமலாப்பா நவாவரணம் கிருதிகளை கொண்டது.
2. அபயாம்பாநவவரணம் கிருதிகளை கொண்டது.
3. சிவா நவா வரணம் (9 கிருதிகளை கொண்டது)
4. பஞ்சலிங்கஸ்தலகிருதிகள் (5 கிருதிகளைக் கொண்டது)
முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பியாகிய சின்ன சுவாமி தீட்சிதர் திடீரென்று மரணமடைந்தார்.
மனவேதனை அடைந்த முத்துசுவாமி தீட்சிதர் உயிரோடிக்கும் ஒரே சகோதராகிய பாலு சுவாமியை காண எட்டயபுரம் புறப்பட்டார். வழியில் குடிப்பதற்கு நீர் கிடைக்காத அளவுக்கு வறட்சி ஏற்பட்டிருப்பதை அறிந்த தீட்சிதர் ஆனந்தம் ருத வர்ஷிணி என்ற கிருதியை பாடினார். அம்ருதவர்ஷினி ராகத்தில் சீடர்கள் இதை பாடினர். உடனே மேகங்கள் திரண்டு வந்து நல்ல மழை பெய்தது. தீட்சிதர் எட்டயபுரம் சென்று தம் சகோதரர் பாலுசுவாமி தீட்சிதர் திருமண விழாவில் கலந்து கொண்டு பிறகு திருவாரூர் திரும்பினார்.
ஆறு மாதங்களுக்குப் பின் இளைய அரசரின் பட்டவிழாவில் கலந்துகொள்வதற்காக மீண்டும் ஒரு முறை எட்டயபுரம் சென்றார். அங்கு தங்கி இருக்கையில் பட்டத்து யானை மதம் பிடித்து அலைந்தது. சுடுகாட்டிற்கு சென்றது. இந்த அபச குணத்தால் பெயர்பெற்ற ஒருவர் மரணமடையப் போவதை மக்கள் உணர்ந்தனர். அதேபோல் முத்துசுவாமி தீட்சிதர் 1835 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 32 ஆம் நாள் சித்தி அடைந்தார்
தீட்சிதரின் கீர்த்தனைகள் பொதுவாக சௌக்க நடையிலேயே அமைந்துள்ளன. மத்திய மகால சாகித்தியங்களை கிருதிகளில் ஆங்காங்கு அமைந்து இருக்கிறார். சொல்கட்டு ஸ்வரங்களையும் அமைத்துள்ளார். சாத்தியங்கள் பொருள் வளம் நிரம்பி காணப்படுகின்றன.
கிருதிகள் பலவற்றுள் ராகத்தின் பெயர் புகுத்தப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம். இவருடைய முக்கிய சீடர்கள் சுத்தமிருதங்கம் தப்பியப்பா சின்னையா பொன்னையா சிவானந்தம். திருக்கடையூர், பாரதி முதலானோர்.
திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத *மும்மூர்த்திகள் ஸ்ரீதியாகப்பிரும்மம் முத்துஸ்வாமி தீட்சிதர் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி இசை விழாவை ஆண்டு தோறும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் பூஜ்ய ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியஸ்வாமிகள், பூஜ்ய ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியஸ்வாமிகள் ஆகியோர் ஆக்ஞைபடி கொண்டாடப்பட்டு வருகிறது.
13.04.2013 ( 19.04.2013 )
2 தீட்சிதர் ஸ்ரீ தியாகப்ரும்மன் பிறந்த நட்சத்திர நாட்களில் ஏழுநாட்கள் இசை நிகழ்ச்சிகள் திருவாரூர் ஸ்ரீதியாகராஜஸ்வாமி ஆலயம் ஸ்ரீகமலாம்பாள் சன்னதிக்கு எதிரே அமைய பெற்றுள்ள ஸ்ரீமும்மூர்த்திகள் இசை அரங்கில் மும்மூர்த்திகளின் ஜெயந்தி இசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் T.S.ராகவன், காஞ்சி காமகோடி பீடகர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதியைச் சேர்ந்த மடிப்பாக்கம் சுவாமி நாதன் S.V.T.J.கனகராஜன், கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம், நல்லி குப்பசாமி செட்டியார். தினமலர் டாக்டர் R. ராமசுப்பு, தினமலர் ஜெயபால், டாடாஸ் G.மதி, சிட்டியூனியன் வங்கி டாக்டர் N.காமகோடி உள்ளிட்டோர் முன்னின்று நடத்திய இவ் விழாவினை திருமதி. விளாசினி காமகோடி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆன்மிக பக்தர்களும், இசை பிரியர்களும். பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்து அகமகிழ்ந்தனர்.
திருவாரூருக்கு
மனுநீதிச் சோழ மன்னரால்
எந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைத்ததோ அதேபோல இன்று ஜீவசமாதியாய் வீற்றிருந்து உழவர் அனைவருக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கின்ற மடப்புரம் ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி சுவாமிகளால் எந்த அளவிற்கு திருவாரூருக்கு பெருமை சேர்த்திருக்கிறோம் அதேபோல உலகில் எங்கும் காணக் கிடைக்காத ஒரு அழகிய ஆடி தேரால் திருவாரூருக்கு எந்த அளவுக்கு பெருமை சேர்ந்ததோ அது போன்று தான் சங்கீத மும்மூர்த்திகளாலும் திருவாரூர் பெருமை பெற்றுள்ளது இத்தகைய பெருமை வாய்ந்த சங்கீத மும்மூர்த்திகளுக்கு ஒவ்வொரு வருடமும் தஞ்சாவூர் அருகே இருக்கின்ற திருவையாறு மிகப் பெரிய இசை விழா நடந்து உலக மக்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அதேபோல திருவாரூரிலும் சங்கீத மும்மூர்த்திகளுக்கு மாபெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இசையால் இவர்களால் பெருமை பெற்றது நாமெல்லாம் செய்த பாக்கியம் இதே போன்ற பல்வேறு விதமான அரிய ஆன்மீக ஜோதிட சித்தர்கள் ஞானிகள் ஆலய வரலாறுகள் போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள இணைந்து இருப்போம் நவசக்தி பாபா டாட் காம்