வள்ளி முருகன் காதல்: ஒரு கடவுளின் இரண்டாவது திருமணத்தின் ரகசியம்!

வள்ளி முருகன் காதல்: ஒரு கடவுளின் இரண்டாவது திருமணத்தின் ரகசியம்!

வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டிருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் மிகவும் பிரபலமானது தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி வீர்ப்பு என்ற வள்ளி மலை

அந்த மலை அடிவாரத்தில் இருந்தான் நம்பி என்ற வேடன்

அவனுக்கு இருந்த அனைத்தும் ஆண் குழந்தைகளே அதனால் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டான்

அந்த மலையின் அடிவாரத்தில் சிலமுகி என்ற துறவி இருந்தார்.

ஒரு நாள் அவர் எதிரில் மிக அழகான அரபு தேசத்து மான் ஒன்று ஓடியது.

அதன் உடல் அழகைக் கண்டு காம இச்சைக் கொண்ட அவர் அதை காமத்துடன் பார்க்க அந்த மான் கர்ப்பமுற்றது.

காலப் போக்கில் அது ஒரு குழந்தையைப் பெற்று வேடவப் பெண்கள் காட்டுக் கிழங்குகளைத் தோண்டி எடுத்து வைத்து இருந்த ஒரு குழியில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்று எடுத்த பின் அதை அங்கேயே விட்டுவிட்டு.

கிழங்குகளை எடுக்க வந்த வேடவர் பெண்கள் அந்த குழந்தையைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியுற்று அந்தக் குழந்தையை தாங்களே எடுத்துக் கொண்டு போய் வேடவர்களின் தலைவனான நம்பி தம்பதியரிடம் கொடுக்க அவர்களும் அவளை வளர்க்கலாயினர்.

அதற்கு வள்ளி என பெயர் சூட்டினார்.

வள்ளிக்குப் பன்னிரண்டு வயதான பொழுது.

Read more: https://navashakthibaba.in/18-siddhar-temples-in-chennai/

வேடர் குல வழக்கமும் நெற் பயிரும்

வேடர் குல வழக்கப்படி அவளை நெற் கதிர்கள் பயிரிடப்பட்டிருந்த வயலில் சென்று உயரத்தில் இருந்த பரணில் அமர்ந்து கொண்டு நெல் கதிர்களை சாப்பிட வரும் பறவைகளையும் விலங்குகளையும் துரத்தும் பணியில் அமர்த்தினர்.

அங்கு அப்போது வந்த நாரதர் அவள் அழகை கண்டு வியந்து தணிகை மலைக்குச் சென்று முருகனிடம் சென்று அவனுடைய அழகை விவரித்த பின் .
வேடவ இனத்தின் கடவுளின் மீது வள்ளிக்கு இருந்த பக்தியை குறித்து கூறினார் .

அதனால் முருகன் தன் உருவத்தை ஒரு வேடன் போல் மாற்றிக் கொண்டு அங்கு சென்று அவளுடன் நட்புறவுடன் பழகி தான் அவளை காதலிப்பதாக கூற அதைக் கேட்ட வள்ளி அதிர்ந்து போனால்.

தலையைக் குனிந்த படி கீழ் ஜாதியைச் சேர்ந்த ஒரு வேடவப் பெண்ணை அவர் விரும்புவது முறை அல்ல என்றாள் .

அப்பொழுது பாடல்களை பாடியபடி நாட்டியமடிக் கொண்டு வந்து கொண்டிருந்த ஒரு கும்பலைக் கண்டு பயந்து போன அவள் வந்து கொண்டு இருப்பவர்கள் மிகுந்த கோபக்காரர்கள் என்று கூற உடனே அவர் தன்னை ஒரு வயதான சிவனடியார் போல உருவம் மாற்றிக் கொள்ள வந்தவர்களும் அவரை சிவனடியார் என நினைத்து அவரிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டனர்.

வள்ளியிடம் தேனும் தினை மாவும்

அவர்கள் சென்றதும் அவர் வள்ளியிடம் தனக்கு தேனும் திணையும் கலந்த உணவு தருமாறு கேட்க அவளும் தனக்கு வந்த உணவை அவருக்குத் தந்தாள்.

அதை அவர் உண்டதும் அவரை பக்கத்தில் இருந்த ஒரு குளத்தின் அருகில் அழைத்துச் சென்று தன் இரு கைகளாலும் நீரை அள்ளி எடுத்துத் தந்து குடிக்க வைத்தாள் .

அதை பருகிய பின் அவர் தன் வயிற்றுப் பசியை தீர்த்து விட்டால் மட்டும் போதாது என்றும் தன் காதல் பசியையும் தீர்க்க வேண்டும் என அவளிடம் கூறியதும் அவள் தான் மீண்டும் வயலுக்குச் செல்ல நேரமாகி விட்டது என்றாள் .

அதனால் முருகன் தன் சகோதரனான விநாயகரை ஒரு யானைப் போல அவள் பின்னால் வந்து நிற்கும்படிக் கூறினார்.

திடீர் என வந்து தன் பின்னால் நின்ற அந்த யானையைக் கண்டு பயந்து போன அவள் அலறியபடி ஓடிச் சென்று முருகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அனைத்துக் கொள்ள

அவரும் அவளை தன் உடலோடு அனைத்துக் கொண்டு ஆறு தலைகள். பன்னிரண்டு கரங்கள் கொண்டு மயில் மீது அமர்ந்து கொண்டவாறு தன்னுடைய நிஜ உருவத்தை காட்டினார்.

தன்னுடைய விருப்பக் கடவுள் தன் முன் தோன்ற அவரை வணங்கிய வள்ளியும் தான் உண்மையில் திருமாலின் மகளே என்று கூறினாள்.

வள்ளியுடன் வயலுக்கு வந்த தோழி

வள்ளியுடன் வயலுக்கு வந்திருந்த அவளுடையத் தோழி எங்கையோ போய் விட்டு இத்தனைத் தாமதமாக வள்ளி திரும்பியதின் காரணம் பற்றி கேட்க நம்ப முடியாத ஏதோ ஒரு சாக்கைக் கூறினால் வள்ளி.

சற்று நேரத்தில் அங்கு மீண்டும் வேடவன் வேடத்தில் முருகன் வந்து நிற்க வள்ளி மற்றும் முருகனின் கண்களும் ஒன்றிணைந்து சங்கமித்ததைக் கண்டாள் அந்தப் பெண்.

ஆகவே அந்த வேடனை அங்கிருந்துப் போய் விடுமாறு அவள் கூற தன்னுடையக் காதலைப் பற்றி அவர் அவளிடம் கூறிய பின் தங்களுக்கு அதற்கு உதவியாக இருக்க அவள் துணையையும் நாடினார்.

தேவையாயின் அவர்கள் கிராமத்திற்கு தான் பொய்க்கால் குதிரை ஆடியபடி வருவதாகவும் கூறினார்.

வள்ளியில் தோழியும் அதற்கு இணங்கினாள்.

அறுவடைக் காலம் முடிந்தது வள்ளியும் தன் காதலனை இனி பார்க்க முடியாது என்பதினால் நம்பியின் வீட்டிற்கு மன பாரத்துடன் திரும்பச் சென்று விட வேண்டியதாயிற்று.

அவள் திருட்டுத்தனமாக நடத்திக் கொண்டிருந்த காதல் ஒரு முடிவுக்கு வந்தது.

அவளுடைய தாயார் தன்னுடைய மகளின் முகவாட்டத்தைக் கண்டு பிடித்து விட்டாள்.

மலைப் பிரதேசத்தில் ஏதாவது தீய ஆவி அவளைப் பிடித்து விட்டதா என அறிந்து கொண்டு கொள்ள முருகனுக்கு பூஜை செய்யவும் பரிகாரம் செய்யவும் ஜோதிடர்களை அணுகினாள்.

முருகனோ மீண்டும் வயலுக்குச் சென்று வள்ளியைத் தேடினார்.

அவளை அங்கு காணாததினால் அவள் தோழியின் உதவியை நாடிப் பெற்று வள்ளியை திருட்டுத்தனமாக சந்தித்தப் பின் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

மறுநாள் வள்ளியைக் காணாததினால் கோபமுற்ற நம்பி கைத் தேர்ந்த வேடர்களை அனுப்பி ஓடிப்போன அவர்களை தேடுமாறு கட்டளை இட்டான்.

அவர்களும் ஓடிக் கொண்டு இருந்த முருகனைக் கண்டு அவர் மீது அம்புகளை வீச அவருடைய சேவல் எழுப்பிய சப்தத்தில் துரத்தி வந்தவர்கள் அனைவரும் மடிந்து விழுந்தனர்.

அவர்கள் மடிந்து போனதைக் கண்டு அழுது புலம்பிய வள்ளியை தேற்றி அழைத்துக் கொண்டு சென்றார் முருகன்.

வழியில் நாரதரைக் கண்ட அவர்களிடம் அவளுடைய பெற்றோர்களின் அனுமதியைப் பெற்று அவளை அழைத்துக் கொண்டு போய் இருக்க வேண்டும் என அவர் அறிவுரைக் கூற இறந்து போன வேடர்களை மீண்டும் உயிர் பிழைக்க வைத்த பின் தன் உண்மையான உருவத்தை அவர்களுக்குக் காட்டினார்.

அவர்கள் அவரை வணங்கித் துதித்து தங்களுடன் கிராமத்திற்கு வந்து தங்களுடைய இன வழக்கத்தின்படி வள்ளியை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வேண்ட அங்கு சென்ற அவர்கள் உற்சாக வரவேற்பு பெற்றனர்.

அவர்களுக்கு ஒரு புலி தோலை பரிசாகத் தந்தார்.

நாரதர் முன்னிலையில் வள்ளியின் கரங்களை முருகனின் கைகளில் நம்பி வைக்க அவர்கள் திருமணம் செய்து கொண்டு விட்டதாக கருதப்பட்டது.

திருத்தணியில் சில நாட்கள் வாழ்ந்த பின் ஸ்கந்தகிரிக்கு திரும்பிய வள்ளியையும் முருகனையும் தேவசேனா அன்புடன் வரவேற்றாள்.

Read more:https://navashakthibaba.in/are-you-longing-to-build-a-house/

விரிசடை கடவுள் திரிபுரம் எரித்த

தாரகாசுரனின் பிள்ளைகளான வித்தியுன் மாலி தாரஹாட்சன் கமலாட்சன் ஆகிய மூன்று அசுரர்களும் முறையே இரும்பு வெள்ளி தங்கம் இவற்றால் ஆன மூன்று நகரங்களில் தேவர்களுக்கு அச்சுறுத்தலாக வாழ்ந்து வந்தனர் அவர்கள் மூவரும் பிரம்மனிடம் எங்களுக்கு சொந்தமான மூன்று நகரங்களும் ஒன்று சேரும் நாளில் மரணம் இல்லா ஒரு நாள் மட்டுமே எங்களுக்கு மரணம் தர வேண்டும் என்று வரம் பெற்றனர்

அந்த மூன்று கோட்டைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒன்று கூடும் அதோடு பரமேஸ்வரன் ஒருவர்தான் மரணம் இல்லாதவன் எனவே பரமேஸ்வரன் சூரிய சந்திரர்களை இரண்டு சக்கரங்களாகவும் நான்கு வேதங்களையும் நான்கு குதிரைகளாகவும் கொண்ட தேரில் அமர்ந்து பிரம்மதேவன் தேரை ஓட்ட மேரு மலையை வில்லியாகவும் ஆதிசேஷனை நானாகவும் மகாவிஷ்ணுவை அம்புவின் நுனியாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கச் சென்றார்

சிவன் வில்லிலிருந்து அம்பை விட முனைந்த போது ஒவ்வொரு தேவரும் என்னால் தான் திரிபுரம அழியப்போகிறது என்ற ஆணவத்தோடு இருந்தனர் தேவர்களிடையே இந்த ஆணவ மலம் வளர்வதை விரும்பாத மகேஸ்வரன் தன் சிரிப்பு ஒளியிலேயே திரிபுரங்களை எரித்தார் நவக்கிரகங்களில் குரு பகவான் தங்க நகரம் சுக்கிர பகவான் வெள்ளிநகரம் சனிபகவான் இரும்பு நகரம், சூரியனை குருபகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சுக்கிர பகவான் சுமாராக ஒரு ஆண்டுக்கு ஒரு முறையும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தான் சுற்றி வருவார்கள் இந்த மூன்று கிரகங்களும் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு ஒரு முறையில் தான் ஒரே ராசியில் சந்திப்பார்கள்

இருப்பினும் மகேஸ்வரனின் அம்சமான சூரியனுடைய நிழலால் உமாதேவியின் அம்சமான சந்திரன் மறைக்கப்படும் அமாவாசை தினம் ஒன்றில் பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை இடமிருந்து வளமாக சுற்றி வரும் இரண்டு நிழல் கிரகங்களில் ஒன்றான ராகு அல்லது கேது சேர்க்கையால் உண்டாகும் சூரிய கிரகண காலத்தில் சூரிய சந்திரர்கள் அருவம் மற்றும் உருவம் அர்த்தநாரிஸ்வரராக இணைந்து நிற்கும் அதே ராசியில் குரு சுக்கிரன் சனி ஆகிய மூன்று கோள்களும் சூரியனால் அஸ்தங்கம் பெற்று சக்தி இழந்திருக்கும்

Read also: https://santhipriya.com/2010/09/kathaayee-enum-vallis-marriage-with-murugan.html

அமைப்பு குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருமுறைதான் நிகழும் இந்த பஞ்ச கிரக சேர்க்கையின் போது பூமியின் பல்வேறு பகுதிகளும் ஒரே சமயத்தில் வெள்ளத்தாலும் தீயினாலும் பூமி அதிர்ச்சி போர் போன்ற சீற்றங்களாலும் பாதிக்கப்படும் இந்த மாதிரி பாதிப்புகளை அக்காலத்தில் நீர் பிரளயம் அக்கினி பிரளயம் என்று பலவாறாக விளக்கிக் கூறப்பட்டன

கிபி 2126 ஆம் ஆண்டில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் பூமியின் மீது மோத கூடும் இதன் விளைவாக பூமியை சிதறி அழிந்து விடவும் கூடும் என்று உலக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் இந்த விஞ்ஞான யுகம் ஆன்மீக அடிப்படைக்கும் சோதிட அடிப்படைக்கும் ஒரு விளக்கமாக உள்ளது

சிவந்த சடையுடைய ஆதி சிவன் முப்புரங்களை அழித்தான் என்று மூடர்கள் கூறுவார்கள்

சிவந்த சடையுடைய ஆதி சிவன் முப்புரங்களை அழித்தான் என்று மூடர்கள் கூறுவார்கள் ஆனால் முப்புறம் என்பது ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மதங்களின் காரியம் இந்த மும்மல காரியங்களில் நான் எனது என்னும் ஆணவத்தால் ஏற்படும் அலட்சியப் போக்கும் தன்னை

மிஞ்சுவார் எவருமே கிடையாது என்ற கருவம் கொள்வதும் ஆணவ மலக்காரியம் முன் ஜென்ம வினைப் பயனால் விளைந்த வறுமை நோய் அமைதியின்மை போன்றவை கன்மமலகாரியம் பிறவா நிலையை அடைவதற்கு உரிய வழிமுறைகளை மறைத்து

மனிதனை நிலையற்ற உலக இன்பங்களையே நாடி வாழச் செய்வது மாயா மன காரியம் ஓம் என்பது வில் ஆன்மாவே பானம் பிரம்மமே குறி இடையராத தியானத்தின்

மூலம் தான் குறியை அடைய முடியும் ஒரு குறிப்பிட்ட குறியில் புதைத்த பானத்தை போல் ஆன்மா பிரம்மத்தில் புதைய வேண்டும் என்பது மும்மலங்களை அழித்து முக்திப் பேரரடைய முண்டக உபநிஷத்து காட்டும் வழி

திருமூலர் என்ன படி மூன்று கோட்டைகள் என்பது மனிதர்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய தீய பண்புகள் ஆகும் மூன்றையும் சிவன் நந்தியின் மூலம்

உபதேசித்து ஒளித்தான் என்பது மூலரின் முடிவு ஆகும் சிவனால் கழிவுகள் நீக்கப்பட்ட உயிர் விண்ணுலகில் எந்த நிலை அடைந்தது என்பதை எவரும் இதுவரை அறியவில்லை திருமூலர் கூறுவது உண்மையே கருத்தை விளக்கவே கதைகள்

ஆனால் மக்கள் கருத்தை மறந்து விட்டு கதையை நம்புகிறார்கள் படிப்பு அறிவு இல்லாத பாமரர்களுக்கு எடுத்துக் கூறி சிவன் என்பது பகுத்தறிவு மூன்று கோட்டைகள் என்பது மனிதர்கள் ஆகிய நம்மிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயையாகும் அவற்றை பகுத்தறிவைக் கொண்டு விளக்கி நல்லவாறு வாழ வேண்டும் என்பதை திருமூலர் கூறுகிறார்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *