கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம்
கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம்
பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம் இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு பற்றி திருவாசகத்தில் ஓர் உருக்கமான பாடல் வரும் தக்கது.
அறிவோய் நீ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலின் அர்த்தத்தை புரிந்து கொண்டவர் களும் நாம் என்ன வேண்டினாலும் கடவுள்
நமக்கு எதையும் கொடுக்க மாட்டேன் என்கின்றாரே என்ற வருத்தம் இழாது இறைவா எனக்கு இதெல்லாம் தேவை என்பதை முழுமையாக அறிந்தவன் நீதான் எனக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களை நீயே எனக்குத் தருகிறாய்..
உன்னிடம் பட்டியல் போட்டு நான் கேட்க வேண்டியது இல்லை நீயாக எனக்கு என்னென்ன தருகிறாயோ அத்தனையும் எனக்கு போதுமானவை நீ தருகின்றவை தான் நான் விரும்பியதாகவும் இருக்கும் எனக்கு வேண்டிய பொருட்களின், கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம்
Read Also: https://navashakthibaba.in/mohinis-yoginis-their-temples/
எதையாவது நான் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் கூட அதையும் சேர்த்து நீயே கொடுத்து விடுவாய் இந்த உலகில் நான் எப்படி எல்லாம் வாழ்கிறோமோ அந்த வாழ்வனைத்தும் உன்னுடைய விருப்பத்தை பொறுத்ததாகவே இருக்கிறது…
உன்னை தேடி வந்த பலருக்கு நீ கிடைக்காதவனாக இருந்தாய் ஆனால் நீயாகவே தேடி வந்து என்னை உன்னுடைய பொருளாக்கிக் கொண்டு அருள் செய்தாய் பக்தியில் இப்படி உருகி இறைவனின் பாதமலத்தை கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம்
சரணடைந்து ஏதும் நடந்தாலும் அது நன்மைக்கே என்று வாழ்க்கையில் அதன் போக்கில் விட்டு விடுவது ஒருவகை இப்படி இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகளும் ஆகவே இருக்காது ஏமாற்றங்களும் கிடையாது ஆனால் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள் இறைவன் என்னை இதை சாதிக்க வேண்டும் என்பதற்காகவே படைத்தான்..
அந்த லட்சியத்தை நான் அடைந்தே காட்டுவேன் என்று எதையும் சவாலாக எடுத்துக் கொண்டு இறைவனின் ஆசியோடு மோதிப் பார்க்கிறார் இவர்கள் ஹோமம் போன்ற பூஜை அனுஷ்டானங்கள்இவர்களுக்கு கைக் கொடுப்பவை.
வேதியர்கள் ஹோமத்தை நிகழ்த்தும் போது, அந்த ஹோமத்தை செலவழித்து செய்யும் கட்டளைக்காரர்கள் தம்பதி சமேதரவாகவே அங்கு வந்திருந்து ஹோமத்தின் பலன்களை பெறவேண்டும். ‘ஹோமம் நிகழும் இடத்துக்கு பெண்கள் வரலாமா?” என்ற தயக்கம் பலருக்கு இருக்கலாம்.
அப்படி வரும்போது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பெண்இல்லாத வீடு முழுமை அடைவதில்லை.
ஆண்களைப் போலவே பெண்களும் ஹோமம்
கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம்
ஆகவே அந்த காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஹோமம் போன்ற பூஜா காரியங்களை செய்திருக்கிறார்கள்.
லோபமுத்ர, கார்க்கி, மைத்ரேயி போன்ற ரிஷி பத்தினிகள் முறைப்படி மந்திர உபதேசங்களை பெற்று சுயமாக ஹோமம் போன்ற பூஜைகள் செய்தவர்கள் தான்.
உடலையும் மனதையும் சுத்தமாக வைத் திருக்கும் எந்த பெண்ணும் இறை காரியங்களை செய்ய அனுமதிக்கப்பட்டவராகிறார். ஆண்கள் வேதியர்களாக இருந்து ஹோமம் செய்யும் போது, ஹோம குண்டத்தில் செய்கிறார் கள்.
ஆனால் பெண்கள் சுத்தமான புத்தம் புதிய அடுப்பிலேயே ஹோமம் செய்யலாம். ஹோமத்தைத் துவக்குவதன் அடையாளமாக அடுப்பின் தெற்கு பக்கத்தில் தீபம் ஏற்றிவைத்து பூஜை செய்ய வேண்டும். காலப்போக்கில் இந்த வழக்கம் எப்படியோ மாறிவிட்டிருக்கிறது.
மேலும் ஸ்ரீ மகாகணபதி ஹோமத்தை எப்படி நடத்துவது என்பதை இதுவரை பார்த்தோம். இது பரிபூரண சித்தி பெறுவதற்கான ஹோமம். புராணங்களில் கணபதிக்கு ஆயிரத்துக்கும் மேலான வகைப்பட்ட ஹோமங்கள் இருப்பதாக குறிப்புகள் இருக்கின்றன.
ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் விசேஷ மந்திரங்களும் இருந்திருக்கின்றன.
ஆனால் இன்றைய தேதியில் சுமார் 100 வகை ஹோமங்கள் பற்றிய குறிப்புகளும் அவற்றின் மந்திரங்களும் மட்டுமே நமக்கு முழுமையாக கிடைத்து இருக்கின்றன.
ஒவ்வொரு வகை கணபதி ஹோமமும் குறிப்பிட்டசில பலன்களை வேண்டி செய்யப்படுகிறது. ஒவ் வொரு ஹோமத்திலும் மூலமந்திரத்தில் சிற்சில மாற்றங்கள் இருக்கும்.
செய்யும் முறைகளிலும் ஹோமத்திற்கு பயன்படும் பொருட்களிலும் மாற்றங் கள் உண்டு. ஹோமத்தில் அக்னியை வளர்க்க பயன்படுத்தும் சமித்துக்கட்டைகளும் மாறும்.
இவற்றில் முக்கியமான சில கணபதி ஹோமங்கள் பற்றி இங்கே சொல்கிறோம்.
சித்தபிரமையை நீக்கி நிவாரணம் பெறுவதற்கு ஸ்பெஷல் கணபதி ஹோமம் இருக்கிறது. தேன், திராட்சை, கற்கண்டு இவை மூன்றையும் சம விகிதத்தில் கலக்கி திரி மதுரத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். குறும்புல்லை இந்த திரிமதுரத்தில் முக்கி எடுத்து
அக்னியில் செலுத்தி ஹோமம் செய்ய வேண்டும். நாளைக்கு 1008 தடவை மந்திரங்கள் சொல்லி இப்படி அக்னியில் 48 நாட்கள் தொடர்ந்து ஹோமம் செய்தால் எப்படிப்பட்ட சித்தபிரமையும் நீங்கி புத்தி தெளிவாகும்.
ஒரு பெருமளவு ஐஸ்வர்யம் கிடைக்க ஒரு வகை கணபதி ஹோமம் உண்டு. அருகம்பில்லை மூன்று மூன்றாக சேர்த்து கட்ட வேண்டும். அந்த புல்லில் எதுவும் நுனி சிதையாததாக இருக்க வேண்டும். இப்படிக் கட்டிய புல்கட்டுகள் 1008 வைத்து கொண்டு அந்த கட்டுகளை
திரி மதுரத்தில் முக்கி எடுத்து மந்திரங்கள் சொல்லி 1008 தடவை அக்னியில் செலுத்த வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 41 நாட்கள் செய்தால் போதும். செல்வத்துக்கு அதிபதி ஆகிவிடலாம்.
எந்தெந்த ஊரில் என்னென்ன சொத்து இருக்கிறது என்பதையே கணக்கு போடமுடியாத அளவிற்கு கோடிஸ்வரராகி விடுவீர்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
நெருங்கிய உறவினர்கள் யாராவது உங்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருக்கிறார். என்று வைத்துக் கொள்வோம்.
பிரச்சனை மறந்துஅவர் உங்களிடம் வந்து சரண்டையச் செய்வதற்கு சக்தி கணபதி ஹோம மந்திரங்கள் இருக்கின்றன. கொப்பரைத் தேங்காயை துண்டு துண்டாக வெட்டி
அவற்றை திரிமதுரத்துடன் கலந்து மந்திரங்களைச் சொல்லி அக்னியில் 1008 தடவை ஹோமம் செய்ய வேண்டும். இப்படித் தொடர்ச்சியாக 41 நாட்கள் செய்தால், உறவினர் தேடி வந்து சரணடைவார்.
வீட்டில் யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தால் அதற்கும் தனியாக ஹோமம் இருக்கிறது. சீந்தில் கொடியை தனியாக விரற்கடை அளவுள்ள துண்டுகளாக ஒடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
‘ஓம் கம் கணபதியே நம’ என்னும் கணபதி அஷ்டாட்சரத்தை உச்சரித்தபடி 1008 தடவை இந்தச் சீந்தில் கொடியை இட வேண்டும். இப்படித் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் செய்தால் நோயின் கொடுமை தீர்ந்துவிடும்.
ஆயுள் கெட்டியாக, இதே ஹோமத்தை சீந்தில் கொடிக்கு பதிலாக அருகம்புல்லில் நுனி சிதையாததாகத் தேர்ந்தெடுத்து, மூன்று மூன்றாக கட்டி,
பாலில் முக்கியெடுத்து அக்னியில் வார்த்து 1008 தடவை ஹோமம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
பணம் பிரச்சனை தீர ஹோமம்
நிதிப் பிரச்சனைகள் தீரவும் ஒரு கணபதி ஹோமம் இருக்கிறது. ஹோமம் செய்கிறவரின், சக்திக்குத் தகுந்த எண்ணிக்கையில் (ஏற்கனவே அவர்தான் நிதிப் பிரச்னையில் இருக்கிறாரே!
அவரால் அதிகம் செலவழிக்க முடியாது அல்லவா… அதனால் இந்த ஹோமத்தில் ‘சக்திக்கு தகுந்த அளவு’ என்றுதான் வரையறையே இருக்கிறது) தேங்காய் வாங்கித் துண்டாக்கி அத்துடன் வெல்லம், வாழைப்பழம் ஆகியவற்றையும் துண்டாக்கி கலந்து கொள்ள வேண்டும்.
இதில் மூன்று பாகத்தை ஹோமத்துக்காக எடுத்துக்கொண்டு, மீதியிருக்கும் ஒரு பாகத்தை நைவேத்தியம் செய்யத் தனியாக வைக்க வேண்டும்.
சிவப்புச் சந்தனத்தால் (ரத்த சந்தனம் என்றும் சொல்வார்கள்)
பிள்ளையாரை உருவாக்கி முன்னிலையில் கணபதி ஹோமம் செய்து இந்தக் கலவையை அக்னியில் இட வேண்டும். சிவப்பு சந்தனம் இல்லாவிட்டால், வெள்ளெருக்கு பிள்ளையாரை வைத்து அவர் முன்னிலையிலும்ஹோமம் செய்யலாம்.
இப்படிச் செய்தால் வீட்டில் நிலவும் நிதிப் பிரச்சனை தீரும்! இந்த பிள்ளையாரை பூஜையறையில் வைத்து தினசரி வழிபட்டு வந்தால் நிறிப் பிரச்சனை வராது.
விவாகரத்து ஏற்பட்டு தம்பதி பிரியும் சூழ்நிலை நிறையக் குடும்பங்களில் நடக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகிய நண்பர்கள் திடீரென விரோதம் ஏற்பட்டுப் பிரியும் நிலை வருகிறது.
ஆனால்
இப்படிப் பிரிகிறவர்களில் யாராவது ஒருவருக்கு மிகுந்த மனவருத்தம் இருக்கும். வருத்தப்படாத இன்னொருவரின் மனத்தை மாற்றித் திரும்பவும் ஆகவே கூடுவதற்கு அவர்கள் ஆசைப்படுவரின் மனத்தை மாற்றுவது.
கணபதி ஹோமத்தில் அதற்கும் இடம் இருக்கிறது. இதற்கான ஸ்பெஷல் ஹோமம். ஐக்கிய மத்திய சூக்தம் எனப்படும் ஸ்வாத சூத்தம் ரிக் வேதத்தில் இருக்கிறது. பதினான்கு மந்திரங்களை சேர்ந்த தொகுப்பு இது!
கணபதி ஹோமத்துக்கான மூலமந்திரங்களையும் சேர்த்துச் சொல்லி ஹோமம் செய்வது தான் இது!
பதினாறு கொப்பரைத் தேங்காய்கள், பதினாறு கைப்பிடி வெல்லம், 32 வாழைப்பழங்கள் கால் கிலோ நெய், அரைகால் கிலோ தேன் –
இவை எல்லாவற்றையும் கலந்து திரவியமாக்கிக் கொள்ள வேண்டும். பிரிந்த இரண்டு பேரின் பெயரையும் சொல்லி, ஸம்வாத சூக்தத்தின் பதினாறு மந்திரங்களை சொல்லி இந்தத் திரவியத்தால் தொடர்ந்து
பதினான்கு தடவை ஹோமம் செய்ய வேண்டும். இது முடிந்ததும், கணபதி மூலமந்திரத்தைச் சொல்லி ஒரு முறை ஹோமம். இப்படித் தொடர்ச்சியாக இந்த நடைமுறையை 108 தடவை செய்து ஹோமத்தை நடத்த வேண்டும்.
“பிரிந்தவர்களைச் சேர்த்து வாழவைக்கும் சக்தி”
எவ்வளவு கசப்பான விரோதங்களையும் மறக்க வைத்துப் பிரிந்தவர்களைச் சேர்த்து வாழவைக்கும் சக்தி மகா கணபதிக்கு இருக்கிறது.
கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம்
”ஓம் மஹா கணபதி ஓம் நமோ நமஹ’
ஹோமங்களை பொறுத்த வரைக்கும்
கணபதி ஹோமம் விநாயகர் ஹோமம் மங்கள விநாயகர் ஹோமம் பால விநாயகர் ஹோமம் லட்சுமி விநாயகர் ஹோமம் ரெட்டை விநாயகர் ஹோமம் ஆனால் இப்படியாக ஹோமங்களிலேயே விநாயகருக்கு என்று பலவிதமான ஹோமங்கள் இருக்கின்றன ஒவ்வொரு ஹோமமும்
ஒரு ஒரு பலனை கொடுத்து நம்பும் மக்களை கரையேற்றும் அதே போல முருகருக்கு என்று சில ஹோமங்களும் குறிப்பாக சத்ரு சம்காரகமும் சுப்பிரமணியர்
ஹோமம் போன்ற பலவிதமான ஹோமங்களும் லட்சுமிக்கு என்று பல்வேறு விதமான ஹோமங்களில் குபேர மகாலட்சுமி ஹோமம்
மகாலட்சுமி ஹோமம் போன்ற பல்வேறு விதமான ஹோமங்களும் இருக்கின்றன விநாயகரை பொருத்தவரையில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர்ஆனால் அருகே இருக்கின்ற
தில தர்ப்பணபதி என்கின்ற ஊரில் மனித முகத்துடன் கூடிய ஆதி விநாயகர் ஆலயம் இருக்கிறது
இந்த ஆலயத்தில் நடைபெற்றுகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் பூஜையும் ஹோமமும் மிகவும்
பிரபலமானது இதே போல இதே போல பிள்ளையார்பட்டியிலும் நடத்துகின்ற பூஜையும் ஹோமமும் உலகப் புகழ் பெற்றது
இன்னும் பல்வேறு விதமான ஹோமங்களில் பல்வேறு விதமான பலன்கள் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது ஆகவே
நம் வாழ்வில் ஏற்படுகின்ற கிரக தோஷங்கள் அது போன்ற தோஷங்களால் ஏற்படக்கூடிய கர்ம வினைகள் இதனால் ஏற்படக்கூடிய
காரியத் தடைகள் திருமணத் தடைகள் சுபகாரியத் தடைகள் போன்ற பல்வேறு விதமான தடைகளையும் வியாதிகளையும் தரித்திரங்களையும்
தூக்கி எறிந்து ஒரு மகிழ்ச்சியான நிம்மதியான சந்தோஷமான வாழ்வைப் பெற்றிட
நமது ஜாதகத்தில் இருக்கின்ற கிரக நிலைகளை அலசி ஆராய்ந்து நமக்கு ஒவ்வொருவருக்கும்
என்ன விதமான ஹோமங்கள் தேவையோ அத்தகைய ஹோமங்களை செய்து வாழ்வில் வசந்தமும் மகிழ்ச்சியும் பெறலாம்
மேலும் இது போன்ற அறிய ஜோதிட ஆன்மீக ஆலய வரலாறுகள் சித்தர்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருப்போம் நவசக்தி பாபா டாட் இன்