இல்லறத்தில் இனிமையான சூழ்நிலை அமைவதற்கு என்ன விதமான ஜோதிட ரீதியான அமைப்புக்கள் தேவை என்பதை இந்த பதிவில் காண்போம்
ஜோதிட அமைப்பில் பதினெட்டு மகரிஷிகள் அமைத்துக் கொடுத்த முறையை ஸ்ரீ சத்யாச்சாரியார், ஸ்ரீவராஹ மிகிராச் சாரியார் என்ற இரு மாமேதைகள் பின்பற்றி ஜோதிட சாஸ்த்திரத்தை மேலும் புதுப்பித்து புதுமையான சித்தாந்தங்களை அருளியிருக்கிறார்கள்.
அடியேன் பின்பற்றுவது முதன்முறையாக பஞ்சசித்தாந்தங்களை அருளிய ஸ்ரீசத்யாச்சாரியாரின் கொள்கையே ஆகும்.
முதலில் இல்லறத்தை அறிவிக்கும் பாவங்களான குடும்ப ஸ்தானத்தையும் அதன் அதிபதியையும், களத்ரஸ்தானத்தையும் அதன் அதிபதியையும், இவ்விரண்டு அதிபர்களின் காரகத்துவம், சீலம், நட்சத்திரசாரம், வர்க்கோத்தம நிலை, ஆதிபத்ய நிலை இந்த சித்தாந்தங்களைக் கண்டறிந்து, மேலும் இருபாலாருக்கும் பொதுவான களத்திரகாரகன் நிலையையும் அறிந்து கொண்டு, அவ்வதிபர்களுக்கு சுபர் பார்வை, சுபர்சேர்க்கை அறிந்து, கிரகங்களின் முக்குண இயல்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து, விவாகப் பொருத்தங்களுடன் ஜாதகரீதியிலும் பொருத்தங்களை கண்டறிந்து தோஷ சாம்யம் மற்றும் தசாசந்தி அற்ற நிலையையும் ஆராய்ந்த பிறகே இனிய இல்லறத்தைப்ஷபற்றி எடுத்துரைக்க இயலும்.
இரண்டு ஏழாம் அதிபதி களின் தன்மைகள் – இனிய இல்லறம்
ஒவ்வொரு லக்னத்திற்கும் இரண்டு ஏழாம் அதிபர்களின் நிலையை ஆராய்வோம். மேஷ லக்னகாரர்களுக்கு 2,7ம் அதிபராக சுக்கிரன் அமைகிறார். சர இலக்கினம் என்ற ரீதியில் 2,7ம் பாவங்கள் மாரக பாவங்களாகின்றன. இதேபோல் கடகம், துலாம், மகர லக்னங்களுக்கும் இக்காரக தத்துவங்களே அமைகின்றன. எனவே இந்நான்கு இலக்னங்களைப் பொறுத்த வரையில் இனிய இல்லறம் என்பது பொதுவாக கேள்விக் குறியானதே?ஸ்திர லக்னங்களாக விளங்கும் ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப லக்னங்களுக்கு 2,7ம் பாவங்கள் பொதுவாக நன்மை அளிக்கக் கூடிய பாவங்களாகக் கருதப்படுகின்றன.
இந்நான்கு லக்னங் களுக்கும் இனிய இல்லறமானது சாத்தியமான ஒன்றே. உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் என்ற நான்கு இலக்கினங்களுக்கு களத்திர பாவமானது மாரக பாவமாக செயல்படுகின்றது.
ஆக இவர்களுக்கும் இனிய இல்லறம் என்பது கேள்விக்குறியானதே?
இனி ஒவ்வொரு லக்ன ரீதியாக அதிபர்களின் நிலையை ஆராய்வோம். மேஷத்திற்கு சுக்கிரன். இச்சுக்கிரனானவர் 2ம் அதிபதி ஆனாலும் கொல்லார். ஆக மேஷ லக்னத்திற்கு சுக்கிரபகவான் 2,7ல் அமராமல் 1,4,9,10,5ல் அமர்ந்து சுபநட்சத்திரத்தில் சஞ்சரித்து சூரியன், குருவின் பார்வை பெற்று, இவ்விரு கிரகங்களுடன் சேர்க்கை பெற்று இருந்தாலோ அல்லது
அந்த இரண்டு கிரகங்களின்
மத்தியில் அமர்ந்திருந்தாலோ
மேலும் இந்நிலைகள் நவாம்சத்திலும் குறைவு படாத வகையிலும், பெண் கிரகமான சந்திரனும் பெண்ணிற்கு இயற்கையில் களத்திரகாரகனான குருவும் நல்ல நிலையில் இருந்தால் பெரியவர்களுடைய ஆசீர்வாதத்துடன், பூர்வ புண்ணிய விசேஷத்தால் சிறு வயதிலேயே திருமணம் சிறப்பாக நடைபெறும்.
அழகு, குணம் பொருந்திய இல்லாள் துணையுடன் குடும்பமானது கௌரவமான பாதையில் செல்லும்.
ரிஷப லக்னத்திற்கு 2,7ம் அதிபதிகளாக புதன், செவ்வாய் விளங்கின்றனர். ஸ்திர லக்னம் என்ற அடிப்படையை விட்டு 7ம் பாவம் அதன் அதிபதியான செவ்வாய் ஆனவர் மாரகராக வருவதால் இவர் லக்னத்திற்கு கேந்திரங்களில் மறைவு பெற்றாலும், வீற்றிருந்தாலும் இல்லறத்தில் விபரீத விளைவுகளை ஏற்படுத்துவார். ஆகவே புதனும், செவ்வாயும், ஒன்று சேராமல் தனித்தனி சுபஸ்தானங்களில் ஒருவருக்கு ஒருவர் லக்ஷ்மி ஸ்தானத்தில் அமர்ந்து, சூரியன் சனி இவர்களின் நோக்கத்தைப் பெற்று, இவர்கள் மத்தியில் வீற்றிருக்க மேலும் இந்நிலைகள் நவாம்சத்திலும் பங்கப்படாத வகையில் அமைய, பெண் கிரகங்களான சந்திரன்,
சுக்கிரன் மற்றும் பெண்ணிற்கு இயற்கை களத்திரகாரகனான குருவும் சாதகமான நிலையில் சஞ்சரித்தால் இல்லறம் என்பது இனிமையாகும்.
மிதுன லக்னத்திற்கு 2ம் அதிபதி என்ற வகையில் பெண்கிரகமான சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவதைக் காட்டிலும் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோண நிலையில் சுபநட்சத்திரத்தில் சூரியன், செவ்வாய், குரு இவர்களின் பார்வையைப் பெற்றுக் கொள்ளாமல் சஞ்சரிக்க வேண்டியது அவசியம். சப்தமாதிபதி என்ற ரீதியில் குருபகவான் கேந்திராதிபத்ய தோஷத்தை உருவாக்குபவர் என்பதால் இவர் மறைவு பெறுவதோ கேந்திர திரிகோணங்களில்வீற்றிருப்பதோ நன்மை தராது. ஆக குருவின் நிலை ஜாதக ராசி கட்டத்தில் கீழ் இராசியில் உதாரணமாக மிதுன லக்னத்தில் பிறந்தால் விருச்சிக இராசியில் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும்.
சுக்கிரன் மேல் இராசியில் அமர்ந்து அதாவது ரிஷபத்தில் அமர்ந்து குருவை பார்வையிடவேண்டும். இதில் குருவின் பார்வையானது சுக்கிரனை , பாதிக்காது. இந்நிலையே இந்த இலக்னகாரர்களுக்கு இனிய இல்லறத்தை அமைத்துத் தரும்.
கடக லக்னத்திற்கு 2ம் அதிபதி என்ற வகையில் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று குரு அல்லது செவ்வாயின் பார்வை பெற்று விஷ்ணு ஸ்தானங்களிலோ, லஷ்மி ஸ்தானங்களிலோ வீற்றிருந்து குரு, செவ்வாயின் மத்தியில் அல்லது சேர்க்கை பெற்று சுபநட்சத்திர காலில் நின்று நவாம்சத்திலும் இந்நிலைகள் குறைவுபடாது, அவர்க்கு அமைய வேண்டியது அவசியம். சப்தமாதிபதி என்ற ரீதியில் சனி பகவான் குடும்பாதிபதிக்கு பகை பெறுகிறார். மாரகாதி பதியாகவும் விளங்குகிறார். இயற்கையான களத்ரகாரகனான சுக்கிரனும் அசுபனாகிறார். ஆக சனி, சுக்ரன் நிலையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது சனிபகவானின் நிலை பிரச்சனைக்கு உரியதே! சுக்கிரன் நிலையைப் பார்க்கும் பொழுது அவர் செவ்வாய் அல்லது குருவின் பார்வை பெற்ற, இவ்விருவரின் மீது சுக்கிரனின் பார்வை படாத வகையில் சஞ்சரித்தால் ஓரளவாவது இந்த லக்னகாரர்களுக்கு இல்லறம் இனிமையாக இருக்கும்.
சிம்ம லக்னகாரர்களைப் பொறுத்தவரையில் 2ம் அதிபதியான புதன், பெண் கிரகமான சந்திரன், இயற்கை களத்திரக்காரனான சுக்கிரன், சப்தமாதிபதி ஆகிய சனிபகவான் இவர்களின் நிலையை ஆராயும். பொழுது சந்திரன் விரயாதிபதி ஆகிறார். சனி, சுக்ரன் மாரகர்களாகின்றனர். புதன் கொல்லான் என்ற அடிப்படையில் உள்ளார்.
இந்த ரீதியில் குடும்பாதிபனாகிய புதன் லாபத்தில் வீற்றிருந்து, லக்னாதிபதியான சூரியனின் இணைவு பெற்று அல்லது பாக்யாதிபனின் பார்வை பெற்று சஞ்சரிக்க வேண்டியது அவசியம். சப்தமாதிபதி என்ற ரீதியில் சனிபகவானுக்கு குடும்பாதிபதி நட்பு கிரகமாகிறார். இந்த அமைப்பில் புதன் வலிமை பெற்று தனியாக சஞ்சரித்து சனியின் மீது தனது முழுப்பார்வையை செலுத்துவதன் மூலம் அமைதியான இல்லறத்தை இந்த லக்னகாரர்கள் அனுபவிக்க இயலும்.
கன்னியில் குடும்பாதிபனாகிய பிறந்தவர்களுக்கு சுக்கிரன், லக்னாதிபதியாகிய புதன் இயற்கையில் சுபராகிறார்கள். சப்தமாதிபதியாகிய குரு கேந்த்ராதிபதி தோஷத்தை தரும் வகையில் குடும்பாதிபனுக்கு பகை என்ற நிலையிலும் இருப்பதால் கணவன் மனைவி உறவில் அன்யோன்யத்திற்கு பஞ்சம் ஏற்படுகிறது. பெண் கிரகமாகிய சந்திரன் மாரகாதிபதியாக விளங்குவதால் இந்நிலை மேலும் உறுதிப்படுகிறது.
எனவே குருவும், சந்திரனும் மறைவு பெறுவதும், கேந்திரங்களில் வீற்றிருப்பதும் இனிமையான இல்லறத்திற்கு ஏதுவான தல்ல. இனிய இல்லறம் அமைய ஒரே வழி குருவும், சந்திரனும் கீழ்வரிசையில் அதாவது துலாத்தில் வீற்றிருக்க, சுக்ரன் லக்னத்தில் அமர்ந்து, 3ம் பாவத்தில் புதன் அமர்ந்து இவ்விருவரின் நடுவில் குரு சந்திரன் சஞ்சாரநிலை இருக்கும் பொழுது இந்நிலை நவாம்ச ரீதியில் சற்றும் பங்கப்படாத வகையில் அமைய இந்த லக்னகாரர்களுக்கு இனிய இல்லமாக கைகூடும் ..
Read Also : கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும்
ஞானம் பெற சித்தர்கள் அருளிய வழி – இனிய இல்லறம்
ஒருவன் இறப்பால் பிறப்பால் உயர்ந்தவன் ஆகி விட முடியாது. பிறரை அறிந்து தன்னை உணர்வினால் தன்னை அறிந்து கொள்வது தான் உண்மையான ஞானம். அறிவினால் ஏற்படும் தெளிவான முடிவை தவறவிடுதல் ஆத்மா பலனை சோதிப்பதாகும். பின்பு உங்களது கர்ம ஞானத்தை சிந்தனை இல்லாமல் செய்து கொண்டே இருங்கள். அப்படி செய்வதினால் அது நன்மையிலே முடியும். அப்படி நாம் செய்துக் கொண்டிருப்பதினால் உனக்கு மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்துக் கொண்டே இருக்கும்.
ஒருவன் வன்மையால் உடல் செய்கின்ற செயல்கள் தொழில் அல்ல. அவன் மனம் ஒன்றிக் கலந்து செய்யும் தொழில் வேறு உண்டோ. நம்முடைய அறிவை கலங்க விடுவதினால் பல பல துன்பங்களை அனுபவித்து தொல்லைக்கு ஆளாகின்றோம்.
ஒருவன் செய்கின்ற தொழிலுக்கு அவனை தகுதி வாய்ந்தவனாக ஆக்குவது யோகம். யோகம் பயில பயில நாம் அன்பு பாசம் என்ற போர்வை நம்மால் போடப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் ஒரு பொருளை நினைத்து நினைத்து யோகம் பயின்றால் அதனோடு ஒன்றி கலந்து விடுகிறான்.
நீயே இறைவன். நீ செய்யும் தொழிலை இறைவனாக நினைத்து செய்கின்றாய். ஒருவன் மரத்தை வெட்டுகிறான். என்றால் இறைவனால் பாதுகாக்கப்பட்டு, நம்மை நாமே இறைவனாக நினைத்த அதைக அவன் தானே இறைவன் என்று நினைத்து வெட்டுகிறான். எல்லாம் நாமே இறைவனாக இருக்கின்றோம்.
நம்மை தொழில் செய்ய ஊக்குவிப்பது நம் எண்ணத்தோடு கலந்த மனம் தான். பூவில் இருந்து வரும் வாசனை நம் எண்ணத்தோடு கலந்து மனமாக மணம் வீசுகிறது. பூவில் இருந்து மணம் வருவதில்லை எல்லாம் நம் மனம் என்ற இயல்பினால் வருகிறது.
அதை படைத்தது நாம் இறைவனாக இருந்து படைப்பாற்றலை செய்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் தொழில் செய்ய துவங்கும். போது இறைவனை வேண்டுகிறோம். நாம் தான் இறை நிலையோடு கலந்த இறைவன் நீங்கள் செய்கின்ற செய்யப் போகின்ற தொழில் உன்னால் ஏற்பட்டவையே! தன்னம்பிக்கையே நீ இறை நிலை! நீ ஞானம் அடைய வேண்டும். உன்னையும் உன் அறிவையும் அறிவோடு கலந்த நீயும் ஞானம் அடைவாய்.
நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயல் முறைகளும் அறிவோடு கலந்த ஞானம் ஆகி விடும். நீ உன்னை தேடுவதினாலும் உனது கர்மங்களில் இருந்து அதை நீ செய்து வந்தால் அறிவோடு கூடிய ஞானம் ஏற்படும். ஞானத்தை நீ தேடி செல்வதை விட உன் அறிவை தேடு, அறியாமல் என்ற இருட்டைக் கடந்து ஞானம் என்ற உள்ளத்திலே வீசும். ஒளி உன்
நம்முடைய அனுபவத்தில் அறிவானது இருந்தே தோன்றுகிறது. உண்மையான அறிவை நீங்கள் தேட வேண்டும் என்றால் உங்களுக்குள் தோன்றுகின்ற அனுபவத்தை சிந்தனை செய்தால் அந்த அறிவு நம்முள்ளே தோன்றுகிறது என்கிற உனது உந்து உணர்வால் உன்னால்
அறியப்படும்.
Read Also : மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்
உயரிய ஞானம் பெற என்ன வேண்டும்
உயரிய ஞானம் அறிவு பெற வேண்டும் என்றால் அனுபவத்தை வேண்டும்.
கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கிற் பரமவை வீடு (310)
என்று அவ்வைக்குறள் நமக்கு சொல்லுகிறது.
கற்றல் கேட்டல் முதலான காரியங்களால் கிரகிக்கப்பட்ட விஷயங்களிலுள்ள அறியும் படியான அர்த்தபுஷ்டியான ஞானத்தை கருத்தூன்றி பழகி தெளிந்து அதன்படி வாழ்ந்தால் இகபர சுகங்கள் யாவற்றையும் உயர் ஞான தரிசனமாக வீடுபேற்றை அடையலாகும் என்று உணர்த்தப்படுகிறது.
மேலும் இது போன்ற பல்வேறு அரிய ஆன்மீக மற்றும் ஜோதிட தகவல்களைப் பெற நம்மோடு இணைந்திருங்கள்
ஆக மொத்தத்தில் ஒரு குடும்பம் இல்லறமாக வாழ வேண்டும் என்றாலும் அல்லது துன்பங்கள் துயரங்களோடு வாழ வேண்டும் என்றாலும் கிரகங்கள் தான் இதை நிர்ணயம் செய்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் என்பது இல்லை ஆனாலும் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல எந்த ஒரு மனிதராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குலதெய்வத்தையும் யாரோ ஒரு குருநாதரை சித்தர்களை வழிகாட்டியாகவும் தன் வாழ்க்கையை துவங்குகின்ற போது துன்பங்களும் துயரங்களும் நம்மை அணுகாது சகல விதமான கிரக ரீதியான தோஷங்களில் இருந்தும் நாம் வணங்குகின்ற தெய்வங்களால் நாம் காப்பாற்றப்படலாம் எனவே ஏதேனும் ஒரு தெய்வத்தை வழிபட்டு நமது வாழ்க்கையை வளம் மிக்க நலம் மிக்க மகிழ்ச்சி மிக்க சந்தோஷமிக்க வாழ்வாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம் நல்லதே நடக்கும் நல்லதே நினைப்போம்
Read Also : https://thiruviviliyam.wordpress.com/bible/catechism/iniya-illaram/iniya01/